Sonntag, 13. November 2011

அம மிதியை மிதித்து அரும் தேதி பார்த்து

உண்மைகள் தங்கங்கள் போன்றவை - நீ
எத்தனை முறை தீயில் திருப்பி திருப்பி
புடம் போட்டாலும்
தரமும் குறையாது .........
நிறமும் மாறாது .........
என்கிறாய் நீ
சுட்டால் தானே ஜொலிக்கும் .
வேதனையின் பின் வரும் மகிழ்ச்சி போல
வலியுடன் சேர்ந்த பிரசவம் போல

பட்டால் வரும் அறிவும்
-பொன்னை சுட்டால் வரும்
ஒளிர்வும்
பெண்ணே உனக்கு அணிகலனே !!!!!!!!!!!
கண்ணே என உனக்கு ..
உன் காதலன் தந்த பொற் தாலி கூறும் கதை என்ன?

சீராளன் உன் கணவன்
தாராளமாய் தந்த தாலி
முள் வேலி என்னும் சிறையல்ல

புடம் இட்ட தங்கம் போல்
புதுப் பொலிவாய்
ஜொலி பெண்ணே !

என் வாழ்வின் அர்த்தங்கள்
உன் வாழ்வின் வசந்தங்கள் அத்தனையும் உன் காலடியில்
தந்தேன் எனக் கரம் பற்ற முன்னம் உன் கால் பற்றி
வாழ்வின் முன் அகலிகை போல்
தவறு செய்து நீ இருந்தால் ..
முப்பத்து முக்கோடி தேவர் முன்
மண்டபத்து பெரியோர் முன்

அம மிதியை மிதித்து
அரும் தேதி பார்த்து
இத்தினத்தில் இல்லறமாம்
நல்லறம்
புகுவோம்
வா பெண்ணே என அழைப்பான்
 
இப்போ சுட்ட பொன்னாய்
தங்கமாய் ஒளிர்பவள்
நீ தானே
வாழ்க நலமுடன்
----------------ஸ்ரீ ராஜா

Keine Kommentare:

Kommentar veröffentlichen