என்னே ! எம் விதி ! தமிழா
கொஞ்சும் மொழி தேன் தமிழ் -அமிழ்தே எம் மொழி
ஊனை வருத்தி ,உயிர் வருத்தி
உலகம் பரவிய ஒரே இனம்
தானை நடத்தி தாரணி காத்த
தமிழ் தாய் பெற்ற மைந்தர் நாம் !
-இன்று வீணே பொழுதை வீணாக்கும்
அற்ப வீணராய் நாம் வாழ் வதுமேன்?
போட்டி பொறாண்மை வஞ்சகங்கள்
தமிழன் வாழும் காலமாய் தொடர்கிறதே !
பதில் காணும் திறமை நாம் இழந்து
நாட்கள் கடந்து யுகமாச்சு !
பிழைக்கும் நாட்டில் போட்டிகளும்
உழைக்கும் பொழுதிலும் தொடர்வது மேன்?
மழைக்கு ஒதுங்கும் உயிரினங்கள்
ஒற்றுமையாக வாழுது காண்!
நம் மினம் இன்று தலைக்கும்
கதிரைக்கும் போட்டி இட்டு
நடுத்தெருவில் நிக்குது பார் !
மண்ணுக்கும் பெண்ணுக்க்ம்
போட்டி இட்டு
பொன்னுக்காக குலமதனை,
அழிக்கும் -கோடரி
ஆனதுமேன் .?
-உலகில்
இருக்கும் பொழுதில் நாம் வல்லவர்கள்
இறக்கும் பொழுதில் என்ன மிச்சம்
காட்டி கொடுக்கும் இனமதுவாய் ,.கயமை கொண்ட பேரினமாய்
ஊட்டி வளர்த்த தாய்தனை யே!
கூட்டி கொடுக்கும் கயமையைபோல் .
நாட்டில் கிடக்கும் பிரச்னைக்கு
-நாமே நமக்குள் எதிரிகளாய்
மானம் துறந்து ,மதி கெட்டு
,வீணர்களாய் தமிழ் துரோகிகளாய் -உலகில் கொடு
அவுணர் களாக மனதில் மாறி விட்டோம்
ஊனை பெருக்கி உயிர் வளர்க்க
எச்சில் கலை நாய்களாக
மாறிவிட்டோம்
விண்ணில் ஒளிரும் சூரியனும்,,,,, மறைந்து போக நேரிடுனும்
கண்ணில் ஒளிகொண்டு காவியங்கள் ,,,,,,படைக்கும் தமிழர் நாம் அன்றோ !
பெண்ணின் மானம் பெரிதென்று ,,
,உலகுக்கு நல வழி காட்டியவர்கள்
உண்ண உறங்க வாழ்ந்த இடம்
உயர்வு காண ,,உழைப்பதனை
உலகுக்கு கோடிட்டு காட்டியவர்கள்
வண்ண மயமாய் அணிகலனை
மயக்கும் மங்கைக்கு அணி வித்து
ஆடல் பாடல் கலை என்று
உலகை அரசோச்சி அன்பால் வளர்த்தவர்கள்
போரில் மறவர் தமிழன் என்றார்
ஏரில் உழைப்பில் தமிழன் என்றார்
கூடி வாழும் இனம் என்றால்
குவலயத்தில் நம் இனம் தான் என்றார்
பேடு களாக நாம் பிறக்கவில்லை -என்று பல
ஏடு களில் இலக்கியம் தாம் வரைந்தார்
நாடு போற்றும் உத்தமர்கள்
இன்று நலிந்து கூழைகும்பிடு போடுகின்றார்
தொன்று தொட்டு வளரும் எட்டப்பரும்
கூடி கெடுக்கும் காக்கை வன்னியரும்
சோடி சேர்ந்து உழைக்கின்றார் ..
சோதனைகள் எமக்கு நிதம் கொடுக்கின்றார்
நாவின் நுனியில் இனிமை களும்
மனதின் அடியில் வஞ்சகமும்
போட்டி பொறாண்மை கொண்டங்கே
பெயரில் தமிழனாய் வாழாதே
வாழும் காலை பூமி தன்னில்
மற்றவர் காலை வாராதே
தோழை கொடுத்து தூக்கி விடு
அவன் யாரி என்றால்
நேரில் மோதிவிடு
வருகின்ற காலம் நமக்கெனவே
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
தேடுங்கள் அன்பை மாந்தரிடை -அதனால்
ஒளிமயமே
எம்மிடை
Keine Kommentare:
Kommentar veröffentlichen