Dienstag, 20. September 2011

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமுடன் வாழ்வோம் இனி நாம்-இளமை காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன் கருத்தொருமித்து வா

ஒரு நிமிடம்  ஆவது
உன்னை  என் விழிகளால் அளக்க ....
உன் முகத்திரை ஊடே  புகுந்து
 இதயத்தில் வாழ ............


காதலி என் காதலி
 போதையின் சூட்டிலே
  நான்  மன்மதன் ஆக


ஆம் என்றொரு வார்த்தை
 உன்னிடமிருந்து
வருமா? வருமா?   என் முகம்நோக்கி


திரை கடல்  ஓடி நான்  திரவியம் தேடினேன்
நரை  திரை வரு முன்  வாலிபக் கரை  ஏறவேண்டி
உனதன்பை நாடி
உறவுகள் துறந்து
உன் பெயர் எழுதியே   என் விரல்கள்  தேய்ந்து
உன் ஓரப் பார்வையில் வாழ்வையே தொலைத்து
நடை பிணமாகி
உன் பின்னே  வருகிறேன்


நீ விட்ட  மூச்சை என் சுவாசமாக்கி
வாழ்வின் இறுதியை உன்னோடு  சேர்ந்து
  வாழவே  துடிக்கிறேன்


நீ சொன்ன  வார்த்தைகள்
மனத்தில்  ரணமாய்
மரணத்தை   நோக்கி  தூண்டி நின்றாலும் -என்
மௌனத்தின்  மொழிகளை 
உன் பார்வையில் விட்டு
நம்பிக்கை , மனதின் ஊன்று கோலாய்
நிமிர்ந்து  உன்னை  நோக்குவேன்
காதல் யாசகனாய் !!!!!!!!!!!


உன் பெயரை உச்சரிக்கும் பொழுதில்
உவகையால் மனமது  துள்ளி துடித்து
நன்றே உலகத்தில்  வாழ்  என்று  சொல்லும்

பசு
கன்றே  ஆகினேன்
காதலி நீ எனக்கு தாய்ப் பசு ஆகுவையோ ?

இன்றே எனக்கொரு ஆறுதலாய்  -உன்
இன்முகம் காட்டுவாயோ ?

முன்னே  எமக்கு  பூர்வீகத்  தொடர்போ ?
முத்தமிழே  ,கொடி மலரே .,வெண் கமல
ராணியே  சற்றே  எனக்கு
  உன் மனம் எனும் அரியணையில்
என் காதலை   ஏற்க்காயோ ?


சுற்றே வல் புரியும் உன் சேவகன்
ஆகி நான்  உன் காலடி கிடப்பேனே 

என் காதலை  வர்ணிக்க வார்த்தையே  இலையே
என் பிரியமான தோழியே கேள் !

காதலன்  காதலி இருவர்
கருத்தொருமித்த  காதலும் கசக்குமோ சொல்?
பூதலம் மீது  புனிதமாய்  என் காதல்
அகதியாய் தவிக்கு து  பாராய் !

அடைக்கலம் கொடுத்து
என்னை அன்போடு  தூக்கி
உன் மார்போடு அனைத்து கொள்


இம் மேதினி மீதில் இன்சுகம் பெற்று
 இன்புற்று  வாழ்வோம்
விரைந்தோடி வா
 எந்தன் முன்


போற்றுவார் போற்றட்டும்   தூற்றுவார்  தூற்றட்டும்
ஏற்றமுடன் வாழ்வோம்   இனி நாம்-இளமை
காற்றுள்ள பொது தூற்றி கொள்ள -உன்
கருத்தொருமித்து வா

சிற்றின்ப வேளையில்  சிலுமிசங்கள் செய்து
பேரின்பம்  காணுவோம்  வா

Montag, 19. September 2011

மரத்து போன எண்ணங்களுடன் எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை யாசிக்கிறேன்


விட்டுக்க் கொடுப்புக்கள்
வெகுமதியானவையாம் - நீயும்
விட்டுக்கொடுத்துவிடு.....
என்று  நீ  இலகுவாய்   சொல்லிவிடலாம் .


உண்ணும்போதும்  உறங்கும் போதும்
கண் முன்  வரும்   விம்பமே !!!!!
சொல்வது  எவ்வளவு  எளிது
வீட்டு விடு  உயிரை   என்றால்  விட்டு விடவும்  தயார்

ஆனால்  எனது காதல்
அல்லவா அழிந்து விடும்
இறந்து போனஎன் உணர்வுக்கு
காணிக்கை  இல்லையடி


மரத்து போன எண்ணங்களுடன்
எங்கோ ஒரு நம்பிக்கையில் உன் காதலை  யாசிக்கிறேன்

பணமும் பகட்டும்  காதல் அல்ல
நிணமும்  சதையும் காதல் அல்ல
பாதைகள் தெரியாத  பயணியா? நான்
அன்றேல்  உன் பார்வையில் வெறும்
 சதை பிண்டங்களுக்கு துடிக்கும் பிராணியா?  யான்


 நீ இமைக்கும் போது எந்தன்
உள்ளத்தில்  பூ பூக்கும்
உன் கண்களின்  படபடப்பில்
என் தேகம்   சூடேறும்
உன்  உதடு வெடித்து வரும் புன்னகையில்
என் உணர்வுகளில்  போதை ஏறும்


முத்து ஒளித் தீபமே
போதை என்
நெஞ்சில்  ஏற்றும்
 தீபமே
 வானத்தின் ஒளிரும்
தாரகைகள்   கண்சிம்மிட்டி
  என்னை  நையாண்டி  செய்கிறதே

எங்கோ தெரு நாய்கள்  ஊளை  இட
இங்கோ அங்கோ என
 என் மனமும்   பந்தாகி தவிக்க
முற்றத்தில் குவித்த 
குறு மணலில்
குந்தி இருந்து  என வானத்து தேவதைஉன்னை
நிலவாய்   யாசித்து 
  உந்தனது  வருகை க்காய்
தினமும்  உன் நினைவுகளுடன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Freitag, 16. September 2011

உயிரே உன் மெளனம் எனை கொல்கிறது வாய்திறந்து ஒரு வார்த்தை பேசு.

உயிரே
உன் மெளனம்
எனை கொல்கிறது
வாய்திறந்து
ஒரு வார்த்தை பேசு...என்கிறாயா?

நானும்  நீயும் ஒன்றி இணைந்து
ஒருவர்  ஆனா  பின்பு 
வார்த்தைகளில்
பயன் இல்லையே
என்  செல்லம்!!!!!!!!!!!!!!


கணகளில் ஊடு புகுந்து
என் இதயத்தில்  துடிப்பது  உன் உயிர் தானே

என் உடலின் அசைவுக்கு அடி நாதம்  நீ  ஆன பின்பு
வருங்காலம் இன்பம்  என்று
நிகழ  காலம் கூறுவது
வார்த்தை  அல்ல

கட்டியம்    
புதிய கவிதை   புனையும்
விண் மதியே!!!

வருவாய்
உன் மதி வதனம்  மகிழ்ச்சி பொங்க

எனது  காதல்  தேசத்தில்  ஒருங்கிணைந்த  அன்றில்களாய்  பறப்போமா?
இப்பார்  எங்கும்

வா
 

Mittwoch, 14. September 2011

எனக்கோர் உயிராக ,மலரே கொடியே ,மதுரசமே -கமல தாமரையே ,வதன நிலவே ,அதிரசமே , உறவே ,உயிரே,

எண்ணம்  எனும்  ஆசைப்படகில் இன்பமாய் நீந்துபவளே -அன்பே
உன்னை நான்  நேரில்  காணும் நாள்  எந்நாளோ?
சின்னக் கதைகள்  பேசும்  செம்பவள வாய்  முத்தம்  நான்  தருவதும்  எந்நாளோ ?
பெண்மை  துள்ள  ஆண்மை உன்னை  வெல்ல -எம் பள்ளி அறை நாள் எந்நாளோ ?


எண்ணம்  அறிந்து இன்பசுகம் அளிக்கும் , வாயில் கனியமுதம்  தேன் சுவையாய் இனிக்க ,
விண்ணகத்து  தேவதை அரம்பாய் நீ மாறி , கண்ணா என்று எனை  அணைத்து,
தென்றல்  எனத் தழுவி,  கானகத்து மோனக் குயிலாய் -என்பைங்கிளியே
நண்ணியே  வாராயோ   சுகம் தனை  ஈயும் வதன  நிலவாய்



             
அமுது  ஊரும்  இதழ் களால் , என் உடம்பு காதலால்  கொண்ட நோயினை
ஒத்தி   வெப்பம்  தணிக்காயோ?
காணும்  போது  காதல் போதை தரும்  கண்களை  --நான்
நீ நாணம்  பொங்க  நான் பொத்தி விளையாட
,நீ சிணுங்கும் போது
மேலாடை சரிந்து  -உன்  அங்கங்கள்  தலை  ஆட்ட (காட்ட)
 ஆசை கொண்ட மோகத்தால்  உன்னை  சூடாக  நான் அணைத்து
தேகம் தேடும்  சுகமெல்லாம்   தேடி தேடி  நான்  தணிக்க

ஆகும்  நாள்  வரும்  வரைக்கும் . காத்திருப்பேன்  பைங்கிளியே!!!!!!!

தாயின்  கருணையும்  தந்தையின் அன்பும்
உன் வாயில்  ததும்பும்  வார்த்தைகளால் -மயங்கி
உன் காலடியில்  நான்  உறங்கும்  நாளை  எண்ணி
இந்த வருந்தும்  உயிருக்கு  காதலியே
-என்றும்  மருந்தாக
எனக்கோர்  உயிராக ,மலரே  கொடியே  ,மதுரசமே -கமல
தாமரையே ,வதன  நிலவே  ,அதிரசமே , உறவே ,உயிரே, கலைப்பெட்டகமே
உண்ணும்  உணவின்  அமுதமே -உன் திறந்த இதயக் கதவு தன்னை
அலங்காரக் கோதையே !,அரசாளும் இதய ராணியே ...
எனக்காக  என்னிடத்தில் தா.......ஸ்ரீ ராஜா

-

உன் மனம் தன்னை திருடிய வழிப்போக்கன் நான் எனில் பயம் தன்னை விடுத்து என் மார்பினில் சாய்ந்திடு

காந்தமாய் கண்கள்  காதலில்  பொங்கி
நீளமாய்           வெகு நீளமாய்  நீண்டு-
  உன் உருவினை விழுங்கும்

ஏக்கத்தில் உள்ளம்
  நினைவுகள் தடுமாறும்.

கூட்டத்தில்  போகும்  கூட்டத்தின் நடுவே
தவழும் நிலவே
 தாரகையே!!!!!!!!!!  உன் நினைவால் வெதும்பி உடலால்  உருகும்
ஏழையும் இவன் தான்

பார்க்கவும் அன்பாய் பழகவும்
ஜோடியாய் திரியும் அன்றிலாய்

குளிருக்குள்  இதம் சேர்க்கும்  யோடியாய்
வானத்தில் பறக்கின்ற
அன்பு வானம் பாடியாய்  வாழவே  வா

தேடிடும் அன்பும் தேக சுகமும்
கூடலும்  ஊடலும்
சுகந்தமாய் அணைப்பும்
பூதலம் மீது  புரிந்துனர்வாய்
  யோடியா சேர்ந்திட வா

ஆடிடும் அலைகள்
 காலடி அணைக்கும் கூதலின்

  நடுவே  குயிலினம் பாடும்
  காக்கையும்  கரையும்

பாடிடும்  அலையிலே
 பள்ளி  தான் கொள்ளும்

 மாயவன் சோடியாய்
 இணைந்திட வா

சேலையின் தலைப்பில்
 நெளிந்திடும் முந்தானை
வா என  அழைக்குதே  பார்

ஆடிடும் சேலையில்
பாதியே  விலகியே
 காட்டிடும் அழகை
கை கொண்டு மூடுது
 உன் கரும்
 தோகை அடி


நீ நடந்திடும் போது
அசைந்திடும் பிட்டங்கள்
 என்னை  நளினம் செய்வது
 அறிகுவையோ?

இத்தனை அழகுடன்  கூடிய
 யாரிந்த தேவதை?
என  அறிந்திட  ஆவலை
தூண்டிடவே
கை கொண்டு  தட்டினேன்
 உன்னை

அழைப்பது போல்
இங்கிதம்  தெரிந்ததால்
மெல்லெனக் கேட்டேன்
உனக்கு துணையாய்
வருவதற்கே

 வாழ்வது  நூறு தான்
மாழ்வதோ மண்ணில் தான்
ஆசையாய்  கேட்கிறேன்
கமலா  லட்சுமியே!!!!!!!!!!


எத்தனை துன்பங்கள் வந்தாலும்
 எத்துனை  எதிர்ப்புகள் வந்தாலும்
துணிந்தே  என் கரம்பற்று
  தாரகையே


பூமியில் மீதிலே தெம்மாங்கு பாடுவோம்
தீந்தமிழ் மொழியிலே  காவியம் பாடுவோம்
சீரிய புகழுடன் நீடூழி வாழுவோம்


உற்றவர் உறவினர்
 நண்பர்கள் விரோதியர்
அத்தனை உள்ளத்தின்
 ஆசியுடன்

அறம் சொல்லும்  வழியிலே
நல்லறம் சமைப்போம்


உன் மனம் தன்னை திருடிய
வழிப்போக்கன் நான் எனில்
பயம் தன்னை விடுத்து
என் மார்பினில் சாய்ந்திடு

தளர்ந்திடும் கால்களுக்கு
 உறுதியாய் நீ சொல்லு
மன்னவன் வருகின்றான்
பின்னால்  என்று

Dienstag, 13. September 2011

காத்திருக்கின்றவேளையில் தழுவும் காற்று உன் மனம் தொட்டு யாசிக்கின்றது உன்னிடம் அது எங்கே உனக்கு புரியப் போகிறது ?????????????????

அன்பே !
அவனின்
 வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும்
 இமைக்க
மறுத்து விடுமாறு
சொல்லு அதனிடம்



நீ வரும் பாதையில்
...பார்வைப் பூக்களைத் தூவி
ஓன்று  இரண்டு   சொல்லவா????????????


நீ


அவனுக்கு
மலர்ப்பாதை அமைத்து

காத்திருக்கின்றவேளையில்  தழுவும்  காற்று  உன் மனம் தொட்டு
 யாசிக்கின்றது உன்னிடம்
அது  எங்கே  உனக்கு  புரியப் போகிறது ?????????????????

இப்படிஇருக்கும் போதி ல்


ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு    விடுமுறை  கேட்டு
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என...
நீ  கேட்பது
வேதனையடி

தளராத விக்கிர மாதிதன் மீண்டும் மீண்டும் காதல் தேவதை அன்பை நாடி




விருப்பு  வெறுப்பு
அன்பு காதல் ? இதுவா ? காதல் !!!!!!!!!!!!

வெறித்தன  வாழ்க்கை ?

கருப்பு சிவப்பு ,சாதி  சமயம்
காதலை மறுக்க
உடுப்பும்  மினுக்கும் ஆடம்பர வாழ்வும்
நெருக்கத்தை கூட்டும்?


சிரிக்கும் மனதில் சில்லறை த்
தனங்கள் ?

அரிக்கும் மனதில் அளவற்ற  வலிகள் -உன் வாயில்
தெறிக்கும்வார்த்தைகள்
 கொல்லும் அளவால்
பூலோக நீரும்  பொங்கி கொதிக்கும்
இது தான்  சுனாமி யோ ?


கட்டற்ற  விருப்போ............ காட்டாற்று  வெள்ளமாய்
காதலின் போதை யில்

நீந்தி கடக்க    எட்டும்   திசைகளில்
எண்ண பரிமாற்றங்கள் --இதுவும் காதல் ?

 என்ன பரி மாற்றம் ?

கண்கள்  கற்பனையில்   கிறங்கும்
எண்ணங்கள்  கற்பனையில்  
சிறகடிக்கும்

சிணுங்கல்கள்  பொய் கோபங்கள்
விரகங்களின்   விளிம்பில்
தொலை பேசும்   skype இல்
நேரடி மோதல்

போடா !!!!!
போடி!!!!!!!!
எத்தனை பாசம் ?

என்ன?    என்ன ?  
    எண்ணக்  குழப்பத்தின் முடிவுகளே ,,,,,,,இன்று ,,,,
முகவுரை   ஆகும்

தகவுரை  கூற
தரவுகள்   துடிக்கும்


தருணங்கள்  இன்றி  உறவுகள்  ஏங்கும்

ஏக்கத்தின் வலிகள் .. புரியாத  மனங்கள்

மனங்களின்  பிரிவில்   மரண ஓலங்கள்

கண் இல்லாக் காதல்
கருத்துக்கள் இன்றி
பரிந்துரை  செய்ய


மீண்டும்  வேதாளம்  முருங்கையில் ஏற

தளராத   விக்கிர மாதிதன்
மீண்டும்  மீண்டும்
காதல்  தேவதை   அன்பை  நாடி

Montag, 12. September 2011

நீ கேட்பது வேதனையடி

அன்பே !
அவனின்
 வரவை அறிந்த நொடி முதல்
விழிகள் இரண்டும்
 இமைக்க
மறுத்து விடுமாறு
சொல்லு அதனிடம்


நீ வரும் பாதையில்
...பார்வைப் பூக்களைத் தூவி
ஓன்று  இரண்டு   சொல்லவா????????????
     நீஅவனுக்கு
மலர்ப்பாதை அமைத்து

காத்திருக்கின்றவேளையில்  தழுவும்  காற்று  உன் மனம் தொட்டு
 யாசிக்கின்றது உன்னிடம்
அது  எங்கே  உனக்கு  புரியப் போகிறது ?????????????????
இப்படி இருக்கும் போதில்


ஜனனத்துளிராய் துளிர்த்த
உன் நினைவுகளுக்கு    விடுமுறை  கேட்டு
பார்வை எனும் நீரூற்றி என் மனதை
பசுமை வயலாய் மாற்றிவிடு என...
நீ  கேட்பது
வேதனையடி

Sonntag, 11. September 2011

சிப்பி மனதுக்குள் முத்து முத்தாய் நான் சொன்ன வரிகள் தப்பிதமோ?


சிப்பி மனதுக்குள்  முத்து முத்தாய்
நான்  சொன்ன  வரிகள்
தப்பிதமோ?

உப்பரிகையில் வாழ்வதற்கு
 செப்பு சிலைக்கு     கனகமுலை த்
தேவதைக்கு !!!!!!!!!!!!!!!

உன்
 பாறை போன்ற மனதில்
அன்பெனும்  உளியால்  நான் செதுக்கிய
நினைவுகள்  ...........................

யாவும்  உடைந்த  உளிகளாய்
என் காலடியில்


மனம்  ஒன்று நினைக்க
உன்  உதடுகள்
சொன்ன  வார்த்தைகளை
காதல்  என்று நான் 
நாயிலும்  கடையாய் அலைந்தேனே


எத்தனை   போலி  வேடங்கள்
நீ போட
உன் புன்னகைக்கும்  கண்களையும்
முறுவலிட்ட  உதடுகளையும்


கொண்டு  நான்  கட்டிய  தாஜ் மஹால் கள்
கற்பனையாய்  
       உன்  மனக்கிளையிலிருந்து
விவாகரத்துப்பெற்ற  இலையாய்
 உன்காலடியில்
நொறுங்கி  விழுந்து  கிடக்கிறது

பார்    பெண்ணே

என்  கற்பனைகள்  உன் காலடியில்  இலைகளாய்  உதிர்ந்தாலும்
 மரமாய் நிக்கும்  உனது  வேரை  பாதுகாக்கும்
காவலனாய்   இருக்கிறதே
உணர்ந்து கொள்  பெண்ணே


 உன் மனமென்னும் பாறையில்  இருந்து  கசியும்  கண்ணீர்
வழிந்தோடட்டும்

அது அருவியாய் ...

குற்றாலமாய் ..

நெளிந்தோடும்  ஆறாய்
ஓடட்டும்

அந்த  நெளிந்தோடும்  ஆற்று படுக்கையின்
அருகிருக்கும்  பாறையில்
அமர்ந்து  கொண்டு
கவிஞனாய்

இயற்கையினை ரசிப்பேன்


வீசும்  தென்றலும் _பாடும்  பறவைகளின்  கீதமும்
உன் கண்ணீர்  ஆறு
  ஓடும்  அருவியாய்
இசைமீட்க
கல் நெஞ்சக் கவிஞனாய்
நான்.

Samstag, 10. September 2011

நீ விட்ட பெரு மூச்சை உள் வாங்கி நான் உயிர் வாழ்வேன்

கை தட்டும்  ஓசை கேட்காது  ????????????   .............            ... உனக்கு
கேள்   காது  உனக்கில்லையோ?..

மாள்வதோ   நம்  உறவு
உள்ளம் கவர்  கள்வனடி

விரைவாய்  நடக்காதே
பள்ளம் பார்த்து  விலகி நட

 கள்ளம் இல்லா  என் மனது
நில் என்று  கூற   துடிக்கிறது

கல் போட்ட  பாதையில் -நீ நடக்கையில்
 உள்ளத்தில்  வேதனை   கள்

பல்லக்கில் அழைத்து செல்வேன்
 பதி விரதை  எனக்கு நீ என்றால்

கால்களின் தடு மாற்றம்
நான் அறிவேன் உன் மனதை

உள்ளத்தில் எனை சுமந்து
பாதையிலே  நீ போக
ஊருக் கஞ்சி  உலகுகஞ்சி
ஒளியாதே  ஒடுங்காதே

பாசமுடன் உன் கரம் பற்ற
துடிக்கின்றேன்  தினம் தினமாய்

வேசமும் போடவில்லை
வேதா தாரியாகவில்லை

என் கூட்டிலே  உயிர் இருக்கும்
உந்தனுக்காய்  துடிதுடிக்கும்

நீ விட்ட  பெரு மூச்சை  உள் வாங்கி
நான்  உயிர் வாழ்வேன்

பொல்லாப் பூமியில் பிறந்து விட்டு இல்லற வாழ்க்கை இல்லை எனில் கல்லறை போகையில் நாம் கண்ட வாழ்வில் பயன் ஏதும் உண்டோ சொல் ????

உறக்கம்  இல்லா  முன் இரவில்
உள்ளத்தில் மோதும் உன் நினைவு
கள்ளம் இல்லா என் மனதை
விரகத்தீயில்  எரிக்கிறது


சொல்ல முடியா உணர்வுகளை
தீர்க்கும்  மருந்தை
ஆவாயோ?????????


காயம்  பட்ட   உடல்களிற்கு
சஞ்சீவ  மலை   மருந்தாகும் !
வேகும்  உடலின்   ஆசைகளை
தீர்க்கும் மருந்து நீ  தானே


பாயில்  படுத்து  உணர்சிகளை
போகிட  இவனும்  கேட்கவில்லை


வாழும் போது  வழித்துணையாய்
தேடும்  சுகத்தில்  சரிபாதி


நாடும்  ஊரும் நயந்துரைக்க
நல்லறம்  காண துடிக்கிறேன் யான்


பொல்லாப்  பூமியில்  பிறந்து விட்டு
இல்லற வாழ்க்கை  இல்லை  எனில்


கல்லறை  போகையில்
நாம்  கண்ட
  வாழ்வில் பயன் ஏதும்
  உண்டோ  சொல் ????


தாம் தாம்  தம் மடி
 நிரப்புகின்ற
தரம் கெட்ட  நேரத்தில்
  வாழுகின்றோம்
மரபோடு  தமிழ்  வாழ்வதற்கும்
மீண்டும் உயிரோடு நம் தமிழ்  நிமிர்வதர்க்கும்
நான்
மாண்டு போகுமுன்  வந்துவிடு

மயிலே  உயிரே  ஆரணங்கே
என் வதன  நிலவே  நீ தானே!
செய்யும்  செயலை   நெறி ப்படுத்த
செவ்வரி ஓடிய  உன் எழில்  நயன
பார்வை  ஒன்றை  என் மீது ............
படர விடாயோ  என்   பெண்ணே??


மன்னன் எந்தன்
கால்  அடியோசை
  காரிகை  உனக்கு  கேட்கலையோ?????????? 
                                                         
ஸ்ரீராஜ

Freitag, 9. September 2011

அழகு தேவதை அன்பு கொண்டால் அதுவே எனக்கு தேன் வதை

அழகு தேவதை
அன்பு கொண்டால்
அதுவே  எனக்கு  தேன் வதை

இன்புறு  முறுவல்  அவள்
முகம் கண்டால்
இதுவே  சொர்க்கம்
எனக்கினி


கால்களில்  தயக்கம்
சேர்ந்திட்ட  நடுக்கம்
அதுவே உந்தன்
எழில் நடனம்


துணைக்கு துணையாய்
நான்  வருவேன்
அனைத்துக் கொள்வாய்
என்கண்ணே


பூமியில்   உதித்த யா வுயிரும்
காதல்  கொள்வது  இயற்க்கை  அன்றோ !!!!!!!!!!


பூதளம்  மீது  அன்றிலைப்போல்
சேர்ந்து வாழ  மையல்  கொண்டேன்


தினவெடுத்த  என் தோள்  உந்தனுக்கு
உரமேறி  நிற்பது
அறிவாயே


செம்பொற் கலசத்தில்  பால்  குலுங்க
நீ  பள்ளியறை வரும் நாள்
எந்நாளோ ???????????????

Donnerstag, 8. September 2011

வன்மமும் வக்கிரமமும் சேர்ந்து உன் மனதை சுற்றி வளைத்து சூறையாடுகிறது

இருட்டு நேரம் குளத்தில் அமர்ந்து
  நீ பார்க்கிறாய்

பாவம்  நீ
எல்லாம்  பேயாய் 
உனக்கு  தெரிகிறது


மற்றவர்களின் தூண்டுதலால்
  உன் மனம்  பேதலிக்கிறது

சேற்றில் முளைத்த தாமரை நீ
உனைப்பறிக்க
 சேற்றில் இறங்கி முகர்ந்து விட்டு
 கால் கழுவி  வெளியேறி
 இன்னோர் குளத்தில்
 அல்லிப்பூ பறிக்கும்
 கயவனாடி  நான்?
சொல்லுடி ,


,,உன் அனுமதியோடு உன்னை
  எடி என்றழைக்கும் பாக்கியவான்  நான் அடி

உன் பிறப்பில் நீ  என்னை  ஒதுக்கிவிடு
கவலைப்படாதே

மருபிறப்பிலாவது  உன்னை தீண்டும் தகமைக்காய்
  இறைவனிடம் மன்றாடும் யாசகன் நான்


வன்மமும் வக்கிரமமும் சேர்ந்து உன் மனதை
சுற்றி வளைத்து  சூறையாடுகிறது

உன் கண் முன் வெண்மையாய்  தெரிகிறதே
 அது  என்ன?
  என்றோ  ஒரு நாள் அவைகள்
 பேய்கள் என்றுணரும்  காலம் வரும்


இருட்டில்  தெரிவதும்  பேய்களல்ல
வெளிச்சத்தில்  தெரிவதும்
தேவா அமிர்தமல்ல

  ஆலகால விடமாம் கள்ளும்  கூட 
பால் போல் வெண்மை தான்


கண்ணே  உணர்ந்து கொள் என் மனம் வெள்ளை என்ற முலாம் பூச முயலவில்லை
தெளிந்த  நீரோடை


இங்கே  சீதளத்தேன்ற்றலும்
பாடும் வண்டினமும்  ,கொஞ்சும் புள்ளினமும் தானுண்டு

வருவாயா?
இச்சுகத்தை  நாமும்  அனுபவிக்க ?

மனது கலக்கம் உறாது தெளிவாக இருக்கிறது நீ வருவாய் ஒரு நாள் என்று

உன் நினைவில்  இதயம் தொலைத்து
உறக்கம் இன்றி தவிக்கும் மனது

கலக்கம் உறாது
தெளிவாக இருக்கிறது
நீ வருவாய் ஒரு நாள்  என்று


  கடல் அலை 
துள்ளி  எழும்

கோபத்துடன்  ஓடிவரும்
ஆர்ப்பரிக்கும்

தரையை  தழுவும் பொது மட்டும்
அமைதி கொள்ளும்

இவன் மனமும்
உன் நினைவில்  மூழ்கி
இப்போதும் அமைதி கொள்கிறது


ஏன் என்றால் /////////

நிலா வைப்போல்
வதனம் காட்டும்
வதன நி   லவில்
 கால் பதிக்க  முயலும் காலம் இது

ஆனால்  இவனோ
 உன்னோடு
உன் நினைவுகளுடன்
 வாழுகிறேன்

காதலுக்கு நாலு கண்கள்...வண்ணத்துப்பூச்சி போல் உன் மனமும் ..வெறும் கற்பனைகள்


பெண்ணே  நில்
ஒரு கணம்  சிந்தி
 நம் நாலு கண்கள், தினமும்  பேசுவதை  விடவா ? புதிதாகப்  பேசப்போகின்றன
 காதலுக்கு நாலு கண்கள்  வெறும்  கற்பனைகள்

பேசிய  ரெண்டு கண்கள்
மவுனித்தால்  பேச மடந்தை நீ தான்  என்செய் குவையோ ?
ஆசையில்  பாதி பக்கம்
வர்ணங்கள் பல கொண்டு வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சி போல் உன்  மனமும்
எண்ணங்கள் பல கொண்டு
இறக்கை விரித்துப் பறக்கட்டும்

எண்ணங்கள்   எல்லாம் கருவாகி  ஒருநாள்  காதல்  என்னும்  முத்துக்கள்  உதிக்கட்டும்
வெறும்  கண்ணீர் துளிகள்  வேண்டாமே !!!!!!!!!!!!!!!!!!!
தரையில் நடக்க மறுக்கும் கால்கள்
...தாள லயத்துடன் தளிர்நடை போடுவது    உன் மனதின் உருவகத்தின் கற்பனையே --என் கண்ணே
உள்ளத்தில் உன் இனியவன்  அமர்ந்து கொண்டால்  ஓடி வரமாட்டாயா ?
தளிர் நடை பயில  குழந்தை அல்ல .--நீ
பூத்து குலுங்கும்
செவ்விளநீர்  தோட்டமடி

புன்னகையின் அரசியாய்
 கோல நடமிடும்  மயிலாய் ஒய்யார நடை பயிலும்  நேரமடி இப்போ

தேக்கிய  கனவுகளை கூச்சமின்றி
இட்டமுடன் பரிமாறும்  நேரமடிஉனக்கு

இதுவரை உன்னை ப்பற்றிஎன் விரல்கள் எழுதிய
கவிவரிகள் போதாதென்று நாளை
உன் விழிகள்எழுதப்போகின்றன என
நீ கூறியதை நினைத்து சிந்தித்தேன்
கண்ணே !

மை கொண்ட  பேனா எதுக்கு?
உன்                மை கொண்ட கண்கள் போதுமடி
 உலகக் காவியத்தை
உயிர்  ஓவிய மாய்  படைப்பதற்கு

உன் விழிகள்  வெட்கத்துளிகளை பரிசளிக்க
போகிறதா ??????????????
வெட்கமடி வெட்கம்

கல் போல் மனது
கணக்கில்லாத பொய்களை
 காரணமின்றி  பேசும்
 காதலுக்கு அறம்பேசி
 கற்புக்கு விலை பேசி
 பாதகமாய் பேசும் கண்களுக்கு                  ஏதுக்கு  பரிசு?
என்  பாவாய்

 வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழுதான்
பாவைகளின்  காதல் கூட எழுதும்
பல வர்ணம் தான்
நாலு கண்கள்  பேசும் பாசை  காதல் ஓன்று தான்


நாலு பேர்  இதை  கருத்தில்  கொண்டால்  -இது  தேசிய கீதம்  தான்

யாரோ ஒருவரின் முகத்தில் உன் அழகிய வதனம் பொய்யான வயதில் ....உன் பேச்சு யார் இவள் ? யார் இவளோ ? என்று தேடுகிறேன்

ஓஓஓஓஓஒ பெண்ணே
இதயத்தில்  நீ  எங்கே  ஒளிந்திருக்கிறாய் ?
 உன்னை  தேடி  x tray   கதிர்கள்
  கூடத்  தோற்று    விட்டன

பாவம் இவன்  உலகில்
நீ எங்கிருக்கிறாய் என்று
அலைகிறான்
இதய மற்றவளே  எங்கிருந்து
தொடர்பில் வருகிறாய் ?
நிலவாய்  குளிர்கிராய்
ஆனால் எரிப்பது  என் மனமும்
இளமையும் தானே

யாரோ ஒருவரின் முகத்தில்
உன் அழகிய வதனம்

பொய்யான  வயதில் ....உன் பேச்சு
யார் இவள் ? யார் இவளோ ? என்று  தேடுகிறேன்

உயிரே  போகுது
உறவே  வந்து விடு
வாழ்ந்து  பார்ப்போம் வருவாயா?
உலகின்  முன்
உதாரணமாய் !!!

Dienstag, 6. September 2011

பிறவாது இருந்திருப்பேன் பிறந்து விட்டேன் - மலர்க்கொடியே

காதலி  யே  நில்
கவனி  என்னை ..கட்டி அணைக்க துடித்தேன்

களி கொண்டு  எட்டி  உன்னை பற்றி
  என்னவளாய் உடன்சேர்த்து

 முட்டி  முத்தம் தந்து
கொட்டி முழக்கமிடும்   உலகில்
 .எனக்கென உன்னை சேர்த்து
சுகம் பெற  வழி கானத்துடிக்குது  மனது

வாதுக்கு  போகவில்லை  வழிசண்டை  ஏதுமில்லை
கூடி கும்மாளமிடும்  குடிப்பழக்கம்  ஏதுமில்லை 
மாதுக்கு அலையும் ..மதி கேட்ட  எண்ணமில்லை

துறந்தேன் உறவுகளை , கொடியிடையே உன்னை சேர்த்து
மறையோதும் இல்லறத்தை
மகிழும் நாள்  எதிர்பார்த்து
அழியும்  யாக்கை உள்ளே
துடிக்குதே  என் மனது

பிறவாது  இருந்திருப்பேன்
பிறந்து விட்டேன் -  மலர்க்கொடியே
உனக்கெனவே ...பிறந்தேனோ?
கடம்பவன  இளங்குயிலே!!!!!!!!!!!!!!!!!!
அடிசகியே !
 என் வீட்டு  இளவரசி  -என் இனிய பொக்கிசமாய்
அடி மேல் அடி வைத்து
எனை  அணுகும்  நாள்  எந்நாளோ?


நிலா வதனம்  உன்னது 

சுடர் விடும்   உன் கண் ஒளியின்
கதிர் வீச்சின் வெம்மை  பட்டு  கருகு கின்றேன்

வெட்டி விழும் மரம் போல்
நான்  வீழ்ந்து விட்டால்
 ..மரணம் எனக்கூறி ..
..கொட்டி முழக்கமிட்டு  நெஞ்சடித்து
ஒப்பாரி  இசை பாடி
மயானம்  வரை  எட்டி அடி வைத்து
எரித்திடுவார்


என்கண்ணே
ஒரு நிமிடம்  உன் நெஞ்சில்
ஈரமில்லை  என்றறிந்தும் எழுதுகிறேன்

வாழ்வோ  ஒருமுறைதான்
மனதில் எழும்  காதலும்  ஒருமுறைதான்

வாழ்வதோ  வீழ்வதோ
மாள்வதோ  நான்  அறியேன்

கோடி பணமிருந்தும் கோமளமே நீ இன்றி  நான்
வாழும்  வாழ்க்கை  வாழ்வல்ல

பொருள்  இருந்தும்  ஏதிலியாய்  நான்
உனதன்பின்றி வாழ்வதோ ?

மதி கேட்டு  போனேனோ ?
..கிறுக்கு பிடித்து  உன் அன்பை  எதிர் பார்த்து
உருக்குலைந்து நான் மாறிஅழிவதோ?

சுருக்கமாய்  சொல்கின்றேன்
உனதுடலை பிளிந்த்தெடுத்து  அனுபவிக்கும்
 வெறித்தனம் எனக்கில்லை

நான்  சிரிக்கும் போது 
 நீ சிரித்து
தேம்பி  நான் அழுதால் ...
என் தலை கோதி
வாரி எனை அணைத்து 
..நீ  கூறும் மணி வாசகங்கள்
தாய் போல்  எனைப்பேணும் 
தனித்துவங்கள்

நீ அழுதால்   சீராட்டும்  தாய் 
இவன்தான்

மார்பில்  தாலாட்டி
  என்  சேயாய்
 என் தோளில்சாயவைத்து
மணி முத்தம்  தந்து
மகிழ வைப்பேன் ..


வா பெண்ணே  எனை நோக்கி
மெல்ல  அடியெடுத்து 
வா ......................................
 

 

திக்கு எட்டும் தேடியும் சோரவில்லை இவன் மனம் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்

தூரத்தில்  இருக்கும் நிலவே -என்
உறவே  ,
நிலவாய் உன்னை நினைத்து நீல வானம் எங்கும்  தேடுகிறேன்
நிம்மதி போனாலும்
நினைவுகளில் மூழ்கி
அமிழ்ந்து அமிழ்ந்து
மிதக்கிறேன்
கானல் நீராய் நீ இருந்தும்
 தாகம்  கொண்ட மானாய்
 தாவி ஓடுகிறேன்
திக்கு எட்டும்  தேடியும்  சோரவில்லை
 இவன் மனம்
தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கண்ணே
உன் கண் பார்வை கிடைக்கும் வரை

Montag, 5. September 2011

மனதில் எஞ்சியிருப்பது குழப்பமா தெளிவா? வந்து போனதற்கான தடயங்களின் நிழல்களை ஏன் மனதில் போட்டு குழம்புகிறாய் ?

கனவு வந்து போன பின்பும்  காட்சி
என்ன  சொல்லும்?

மனதில் எஞ்சியிருப்பது குழப்பமா  தெளிவா?
 வந்து போனதற்கான தடயங்களின்
நிழல்களை
 ஏன்  மனதில்  போட்டு  குழம்புகிறாய் ?
நியங்களே இல்லாதபோது
கனவென்ன?  கற்பனைஎன்ன? நிஜங்களை பறித்துசெல்ல- நான் யார்?
விதி ???????  ஆஹா  விதி
எளிதாக  தப்பிக்கும்
எளிமையான வாழ்க்கை
தத்துவம்  விதி


கண்ணோடு தொடர்ந்து காலத்தால் வளர்ந்து
இயல்பான உருவாக்கமே என் காதல்

நிழலாய் பின்தொடர்கின்றேன் -உன்னை
உந்தன் நினைவுகளைச்சுமந்த படியே
பத்துமாதம்  சுமப்பவள் கர்ப்பிணி
வாழ்க்கையில் சுமப்பவன்  கணவன்
நான் யார் ?
உன்னை  இதயத்தில் சுமப்பதால்  மற்றவர்  முன்
கூனி
குறுகி நடக்கிறேனே

நான் யார்?

Samstag, 3. September 2011

சித்திரை நிலவே ! காயாதே -எந்தன் வேதனை உனக்கு புரியாது



கவிதையின் தாயே  கற்பனையின்  உருவே
உன் எதிர்காலம்  உனது கையில் -நீ  உணர்வாய்
பசித்தால்  உணவு தன்னை   உன் கையால்
புசித்தே ஆவது  நீ தானே ,
ஊடு மீன்  ஓடட்டும் விட்டுவிடு
வரு மீன்  வரட்டும்  ,புசித்து விடு
இருப்பது சில நாள்   அனுபவிப்பாய்
கருப்பையின் உயிருக்கு உணவீந்த
பரமனும்,          எங்கோ உனக்கென
                                                    எழுதிவைப்பான்
 இக்கரைக்கு   அக்கரை பசுமையடி
அக்கறையாலே  சொல்லுகின்றேன்
பத்தரை மாற்று  பசும் பொன்னே
இத்தரை மீது  எனக்கென்று,  உந்தனை படைத்தான்  ஆண்டவனே
சித்திரை நிலவே ! காயாதே -எந்தன்  வேதனை உனக்கு புரியாது
முத்திரை பதிக்க  ஆசையடி -எனக்கு முகத்திரை நான்  இன்னும் போடவில்லை
நித்திலம் போற்றும்  முத்து -நீ
சேற்றில் மலர்ந்த    கமல தாமரை  யே
ஆதவன் மீது கொண்ட  காதலினால்
கொக்காய் கடும் தவம்  செய்கின்றாய்
பகலில்  மலரும் தாமரை நீ
நானோ  இரவில் மலரும்   அல்லிப்பூ
வட்ட நிலாவை  நிலவதனை
பார்த்து மகிழும் அல்லி நான்
தாமரையும்  அல்லியும் காதல்  கொண்டால்
ஒரு தலைக்காதல் என்றுணர்வாய்
ஆண்டவன்   பூசையில் பூசை கென
  எம்மை  சேர்த்து வைப்பார்
ஒருதட்டில்
அந்த நாள்  வரும் வரைக்கும்
எந்தன்  கண்ணே  கலங்காதே
அப்போது  நாம் பேசிக்கொண்டு
கிடப்போம் ஆண்டவன் காலடியில்

Freitag, 2. September 2011

ஒற்றைக் காலில் தவம் செய்யும்அருஷுனனாய் .....

பிரசவ வலியின் பின்
  இன்பம் இன்பம்
மகவின் மழலை
 இன்பம் இன்பம்----------- .குழவி
செய்யும்  சேட்டைகள்
  வலி தான் ஆனாலும்
குலவி மகிழும் இன்பமின்பம்
கண் மணியே
நீ தூங்கி விட்டாய்
உனக்கு பாது காப்பாய்
 உன் இமைகள்
கண் மடல்களை
அணைத்துக்கொண்டு
உன்னுடன்
  தூங்குகிறது
பாவம் இவன்
வெளியே உன் கண்களுக்கு
பாதுகாப்பாய்

ஒற்றைக் காலில் தவம்
செய்யும்அருஷுனனாய் .........................

மீண்டும் தீண்ட எரிகிறது, தூண்டியவன் யார் தோழி நீ சொல்லு! ஆண்ட இனங்கள் மறு இனத்தை ,அடிமை செய்வது முறையோ சொல் ,

 மீண்டும்  தீண்ட  எரிகிறது,  தூண்டியவன்  யார்  தோழி நீ  சொல்லு!
ஆண்ட  இனங்கள்    மறு இனத்தை  ,அடிமை  செய்வது  முறையோ சொல் ,
பூண்ட  லட்சியம்  ஒன்றுக்காய், பூமிகள்  அங்காங்கே  எரிகிறதே
மாண்டால் மாந்தர்   விடுதலையை ,கேட்க மறப்பரோ  வழிவந்தோர்

பாரதி வந்தான்  ,பாரதத்தில்  -பிர
பாகரன் வந்தான்   ,தமிழ் ஈழத்தில்
மண்டலா    வந்தது  ஆபிரிக்கா
சே  குவார்   ஓ வந்தது   அமெரிக்கா
காஸ்ட்ரோ வந்ததும்  அமெரிக்கா

எங்கோ  ஒரு மூலையில் -விடுதலையின்
வித்துக்கள்   மரமாய்  ஆக்குவதும் -பின்பு
பாரிய குண்டு கொண்டு    அம மரத்தை
அழித்து ,நிர்மூலம்  ஆக்குவதும்
உலக நாடுகளின்   வேடிக்கை  -இதனை
 பூலோக  மாந்தர்காள் !,புரிந்திடுவீர்


இன்று  லண்டன்  மீண்டும் ,  எரிகிறது
வன்முறை  அங்கெ , வெடிக்கிறது
இன   பேத முலாம்  அதனை,  பூசி அங்கு
பிரசங்கம்    மீடியா     செய்கிறது
நடந்ததும்   சாவும்   நீர் அறிவீர்
நடப்பது  என்ன ?  உலகறியும்
உன் வீட்டில் நடந்தால்   கொலை என்பார்
தன வீட்டில்  நடக்கையில்   விபத்தென்பார்!

ஐயகோ !  மானுடா  எழுந்திடுவாய்
கேளடா நீதியை   துணிந்து  நின்று
வான் முறை  வன்முறை   போர்முறைகள்
அறவே  ஒழிக்க   வழிசமைப்பாய்!

ஏனடா  சுயநலம்   மிக்கவனாய்
பூமியில் வாழ்கிறாய்  கேடு கெட்டு
வாழும் உயிர்கள்  யாவையுமே
ஆண்டவன்  படைப்பில்  ஓர் இனமே

நாளும் பொழுதும் நர பலிகள் -உலக
நாட்டிலே  நடப்பது   தர்மமாமோ?
வீட்டிலேயே  நடந்தால்   வேதனைகள் -தெருக்
கோடியில்  நடந்தால்  உனக்கில்லையோ?
பூட்டிய கதவுக்குள் கூடு கட்டி -நீ
கிணற்றுத் தவளையாய்   வாழ்வது மேன்?
உலக மக்கள்  யாவருமே! ,            புவி மீது பிறந்த  மன்னவர்கள்
சாதிகள் நிறங்கள்   பேதங்களை -உன்
பகுத்தறிவாலே நீக்கிவிடு,
வாய்  பேச முடியா ஜீவன்களும் -ஒரு
தாய்  ஈன்ற     உலகச் செல்வங்களே
மாயும் போது பட்ட  வேதனையை ,
மாண்டவர்  மீண்டிங்கு ,வந்து  சொல்லுவாரோ ?

ஆதலால்  எங்கள் உறவுகாள்சிந்திப்பீர்
ஆத்மார்த்த   அன்பால் பூமிதன்னை
அன்பெனும்  உறவால்   பின்னிக்கொள்வோம்
அன்பெனும்  உறவால்   பிணைந்து கொள்வோம் (ஸ்ரீ ராஜா )






ஆசையின் வேக்காட்டால் விம்மி தணியும் வெண்சங்கு காதலின் வயப்பட்டு துடிக்கும்

பாலும் கசக்கும்
 படுக்கையும்  வலிக்கும்
உன் மூச்சுக்காற்று  ப்பட்டு
தலையணையும்  வேர்க்கும்
ஆசையின்  வேக்காட்டால்
 விம்மி தணியும்
வெண்சங்கு
காதலின் வயப்பட்டு  துடிக்கும் மனதின்
பாரங்கள்  கூட
முட்களாய்  குத்தும்
படுக்கையின் மெத்தை
சொல்லவே  வார்த்தையின்றி
 தவிக்கும்  துடிக்கும்
உதடுகளும் ..
ஒத்தி  எடுக்கும்  முத்தத்திற்காய்
தினம் தினம்
மேங்கும்
உன் உள்ளத்தின்  துடிப்பால்
 இதயம்  சூடேற
 உவகையால்  மனம்    துணைக்கு
  ஏங்கும்
எப்போது வருவாயென
எதிர்பார்த்திருந்த
 உன் விழிகள்
எனை பார்த்து
 சிமிட்டி பேசும்
வார்த்தைக்குத்தானே
ஏங்கியது  என் உள்ளம்

அந்த சிமிட்டிய கணத்தில்
  எந்தன் உள்ளம் பறிபோனது
 உன்னிடம்


ஏக்கமான உன்கண்களிர்ற்கு
 இன்றென
 நான் செய்யும் ஜாடைக்கு
எதற்கு  உன் வாயில்  முறுவல் ?
இது முறுகல் நிலையின்  வெளிப்பாடோ?
 -அன்றி  புன்முறுவல்  தானோ இது?
அல்லது  எனைப்பார்த்து
  பரிகாசம்  செய்கிறதோ
  உன் இதழ்கள்
சொல்லாயோ
 நிலாவதனப்  பெண்ணே
துணிந்து

உன் அத்தானின் கை பிடித்து கால் பிடித்து

வாழ்க மணமக்கள் வாழிய பல்லாண்டு
உன் அத்தானின் கை பிடித்து
கால் பிடித்து
 உயிர் நாடி வளர்த்து
வளர்ந்து
 சமுதாய அமைப்பில் வளர்ந்து
 பண்பாட்டை வளர்த்து

பண பாட்டில் உயர்ந்து
  சீர் கொள்ள நம் மினத்தை
  வேர் தாங்கி
 பூமிப் பெண்போல்
 பொறுமையாய்
உலகில்  உயர்வாய்
நீ

நினைவு என்னும் சுழலும் சக்கரம் மாறி மாறி சுற்றி சுற்றி ஒரு மணி இலையானாய்....என் தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

பச்சை துரோகம்
பசுமை நினைவுகள்

 கொல்லும் இரவாய் .எனக்கு
..கூறுவையோ  நீ

  உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும்
மறக்காது  என்னை  கொல்லட்டும்

நினைவு என்னும்
சுழலும் சக்கரம் மாறி மாறி

சுற்றி  சுற்றி  ஒரு மணி  இலையானாய்....என்
தூக்கம் கெடுக்கும் விட மாயிற்று

நனைந்த !!!!!!!!!!!!!!நனையும்!!!!!
  தலையணை  என்னை பார்த்து
தானும்  அழுகிறது

வெளியில்
பெய்யும்  மழை கூட
எனக்காக  அழுகிறதோ  என்னவோ----------- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே  என்
 கடந்த காலமும்

என் நிகழ்காலமும்

என் எதிர் காலமும்
என்னை பார்த்து  சுட்டு விரலை  நீட்டுகின்றனவே


இது  கூட  தெரியாத  நீயா  சொல்வது ?உயிரைக்கேட்டிருந்தால் தந்திருப்பேன்
மாறாக நீ எந்தன் உணர்வை
ஏன் தான் பறித்துச்சென்றாய்?என்று


தூரத்தில்  திருமண   மங்கள இசைஒலி கேட்கும் போதும்
உன் துரோகத்தின் நினைவு தான் வருகிறது

இருந்தும் நீ வாழவேண்டுமென
மனம் வாழ்த்துகிறது- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே
என்று  நானல்லவா   கூற வேண்டும் ?
எதுக்கு நீ வீண் வார்த்தை
இயம்புகிறாய் ?-உன் வாள் நுதலால்
  கொன்றது போதும்

உண்மை  வாளால்
 வீசி விட்டு
அமைதியாய்  வாழ்ந்து விடு

Donnerstag, 1. September 2011

தனாக்கா எனக்கு சகோதரம் மாதிரி அவங்க நல்லவங்க அவங்க மேல நான் பாசம் வைத்திருக்கிறேன் ,அன்பு வைத்திருக்கிறேன் .நான் எழுதும் கவிதைகளை யாரும் தப்பாக எடுக்க வேண்டாம் .அவங்களின் மனதை யாரும் கெடுக்க வேண்டாம் .தனாக்காவின் மனதை யாரும் எனது பெயரை பாவித்து கோபம் ஊடடினால் அதற்க்கு நான் பொறுப்பாளி இல்லை .தனாக்கவுக்கு ...என் இதய சுத்தியோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

தனாக்கா எனக்கு  சகோதரம்  மாதிரி அவங்க  நல்லவங்க 
அவங்க  மேல  நான்  பாசம்  வைத்திருக்கிறேன் ,அன்பு  வைத்திருக்கிறேன் .நான்  எழுதும்  கவிதைகளை  யாரும்  தப்பாக  எடுக்க  வேண்டாம் .அவங்களின்  மனதை யாரும்  கெடுக்க  வேண்டாம் .தனாக்காவின்  மனதை  யாரும் எனது  பெயரை  பாவித்து கோபம்  ஊடடினால்  அதற்க்கு நான்  பொறுப்பாளி  இல்லை .தனாக்கவுக்கு ...என்  இதய  சுத்தியோடு  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன் siriraja

கூடிப் பிறந்தால்     குதூக்கலாமாம் -புவி மீது
கூடாது  பிறந்தாலும்  குதூகலம்  தான்

அடாது  பெய்யும்  மழை..கூடி அழுகிறதே
இடியோசை  முழக்கம் இட்டு
விம்மி  அழுகிறது

நேசமாய் வரும்  உறவும்   விரிசல்  கண்டுவிடும்
பாசமாய் பழகினாலும்  சந்தேகம்  வலுத்து விடும்
நாசமாய்   செய்பவர்கள்  நலியக்  கெடுப்பார்கள்
பூதலத்தில்   இது  உண்மை
புரிந்தால்  இது வும் உண்மை

பாசத்துக்கும் நேசத்துக்கும் களங்கம்  கூறலாமோ?-கவித்
தாகத்தால்  ..அவள்  மேல் எனக்கு  பெரு விருப்பு
யார் போட்ட  சாபம் இதோ ...

தனக்கா   ?  என்ன இது ?
மற்றவர்  பேச்சை கேட்டு
மதியும் கெடலாமோ ?

ஞாலத்தில் பிறந்தவர்கள் நயவஞ்சக  சூழ்ச்சி  சொல்வார்
காலத்தின் கட்டளை...........   கவி செய்வாய் .
ஏளனத்தில்  பெரும் துயரம்  என் முன்னே !

அக்கை  என நினைத்தேன்
அருந் தவத்தால்   இறைவன்  எனக்களித்த பொக்கிசமாய்
உன்னை  நினைத்தேன்
உன் கவி தன்னை காணாது  துடி துடித்தேன்

கற்றாரை கற்றாரே  காமுறவர்
ஆதலினால் ..உற்ற  சோதரமாய் 
என் உறவாய்  மற்றவர் முன்பு  உன்னை நினைத்து  மகிழ்வேன்

யாரது  கண் பட்டு   நலிந்தது  எம்முறவு
போனது போகட்டும் ..வா 
பாசத்தால்  கேட்கிறேன்  வா
கவி தாகத்தால்  கேட்கிறேன்  வா

நீ !!!!!!!!!!!!!!!!!!!!!
வரகவி  எனதக்கை
 மாசில்லா என் அன்பின்
 பொக்கிஷம் நீ
ஆதலினால்  கேட்கிறேன்

அக்  ,    கையாய்  ,   அக்கரையில்
இருக்காது    இக்கரையில்
இருக்கும்   உன் அம்பியின்
அக்கையாய்    வா

நாம் நடத்தும்  கவிப்போரில்
பூக்களாய்  உதிரட்டும்   எம் அன்பு

இப்பூக்களை  சூடி  மகிழ   எம் நண்பர் குழாம்
என்றென்றும்  தொடரும் .

அவர் தம் அன்பிற்கும்   உண்டோ  அடைக்கும்  தாள்
சொல்லக்கா   துணிந்து -உலகுக்கு
உனக்கொரு  தம்பி   ஜெர்மனி இல்  இருப்பதை
பறக்கும் விமானியாய்   அந்தரத்தில்  தொங்குவதை

உன் செங்கமல  இதழ்களை
விரித்து ..எனை தம்பி என அழைக்கும்
காலம்  வரை ...உன் அன்புக்காய்  ஏங்கும்
பாசமுள்ள    அம்பி இவன்

  வழி மேல் விழி வைத்து 
ஏக்கத்துடன் ...............!!!!!!!!!!