Montag, 17. Oktober 2011

மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை தொடர்கிறது என்றோ ஒரு நாள் நனவாகும் என்னும் நம்பிக்கையில்

அன்பே !அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
என்கிறாயே


நீ காட்டும் எட்டுத்திசையும்
தறிகெட்டு அலைந்து விட்டேன்
ஒரு முறையேனும் உன் மார்பை சுட்டிகாட்டி சொல்லு
உன் இதயத்தில் நான் இல்லை என்று

பல முறை பிறந்தாலும்
என் மார்பில் நீ தூங்கும் காலம் வரும்
என்ற என் நம்பிக்கையின் ஒளிக்கீற்று
என் மூச்சை உயிர் பிக்கிறது


கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
என்கிறாயா?

பேதை பெண்ணே
நினைவெல்லாம் நீ தானே
என் நனவே கனவாக
மாற்றியவள் நீ என்பதால்
என் நினைவின் நீளம் உன்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்


ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருக்கலாம் ,
ஆனால் அன்பை வென்றவர்கள்
இதயத்தில் வாழ்வார்கள்

உடல்கள் அழிக்கப்படலாம்
கண்ட உண்மைகள்
நனவாக தொடர்ந்து வரும்

ஒவ்வொரு மரணத்தின்
முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
என்று சொல்பவர்கள் உணருங்கள்

பிறக்கும் மனிதன் பிணமாக பிறந்து
ஜனனிக்கும் பொழுது
அம்மா என அழுது
பூமியில் மனிதனாக
அடையாளம் பெறுகிறான்

அதன் பின் கனவும் நனவும்
வாழ்வின் போராட்டமாக
மாற
மீண்டும் கனவுகளில் அவன் வாழ்க்கை
தொடர்கிறது
என்றோ ஒரு நாள் நனவாகும்
என்னும் நம்பிக்கையில்


Keine Kommentare:

Kommentar veröffentlichen