Sonntag, 2. Oktober 2011

வாழ்கின்ற வாழ்வில் -நீ என் மூல தனம் வாடுகின்ற இவ் வேழைக்கு-நீ நந்தவனம் காட்டாதே எனக்கு நீ கள்ளத்தனம்



என்றோ ஒரு நாள் எனக்காக
உன் உதடு சொல்லும் ஒரு வார்த்தைக்காய்
நம்பிக்கையின் ஒளியில் அந்தரிக்கும்
ஜீவனாய் நான்



வான் மதியாய்  என் வாழ்வில்
ஒளியேற்ற  வா என்றேன்


நீயோ என்னை பழிவாங்க
அமாவாசை யாய் இருண்டு அட்டமி நவமி யாய்
தேய்ந்து வளர்ந்து  பூரணையாய்
  வதன நிலவாய்
ஒளிகாட்டி இருள் காட்டி 
நின்  மதியை
ஏனோ பறிக்கிறாய்?


கூடு கட்டும்
குருவிக்கும் பேடு உண்டு
குலவுகின்ற அன்றிலுக்கும் சோடி உண்டு
கொடிமலரே எனக்கென்று  என்ன உண்டு????????????


பாடுகின்ற  குயில்கள் எல்லாம்  கீதம் பாட
தேடுகின்றேன் உந்தனை நான்
தோழியாக !


கூடு விட்டு  ஆவி தான் போயிடினும்
குலமகளே
நீ தானே  எந்தனது
 இதய ராணி

ஆடுகின்ற  ஆட்டம் எல்லாம்
வாழ்க்கை அல்ல
தேடுகின்ற  சுகம் எல்லாம்
 சொர்க்கம் அல்ல


மாடு போல் உழைத்தாலும்
வையகத்தில்
 மகிழ்ந்து வாழ  உறவொண்டு
 வேணுமடி


திகட்டாத  தேன் சுவைகள்
 இல்லறத்தில்
தினம் தினமாய்  குலவி நாங்கள்
மகிழ்ச்சி காண்போம்

பகட்டான  வாழ்க்கையில்
எந்த பண்பும் இல்லை
தெவிட்டாத  இன்பம் உண்டு 
 குடும்பமதில்


வாழ்கின்ற வாழ்வில் -நீ
என் மூல தனம்
வாடுகின்ற  இவ் வேழைக்கு-நீ
நந்தவனம்
காட்டாதே எனக்கு நீ
கள்ளத்தனம்


தென்றலின்  சிணுங்கல்கள் ,முத்தத்தின் சூடுகளில்
நான் தவிக்க.....................
 ,சிங்காரம்  செய்யும் வண்டுகளின் ரீங்காரம்
நெடிதான வேப்பமரக் காற்றின்  இதமான  அரவணைப்பு
இவையாவும் ?????????
கண்ணே நீ எனை பிரிந்த நாட்களின்
ஏமாற்றங்களின்  தனிமை என்னை தீ மூட்ட 


என் இதயம் கவர்
வடி வழகே ஓடி வா
நாம் மகிழ்ந்து வாழ்ந்து -உயிரான காதலுக்கு
முடியை சூட்ட ...................

Keine Kommentare:

Kommentar veröffentlichen