Dienstag, 8. Mai 2012

வருமானம் மீறி
அளவுக் கதிகமாய் ஆசைகள்   எதுக்கு?

இருக்கும் நாள்   ,,இனிக்க 
கடன் வாங்கி ...வாழாதே !
கார் காலம்  இருட்டாகி மழை நீர் 
கொட்டுதல் போல் அழுது
கண் வீங்கி
மதி கெட்டு..
மானம் இழந்து வாழாதே


பூமி தன்னில்
மதி இழந்து  மானம் ..பறந்தோட -உன்
உறவுகளே கை கொடுக்காது   
                  
இவர்கள்
எட்டி நின்று  வேடிக்கையாய்..
இடித்துரைக்கார்
உன்னை
இழித் துரைப்பார்


கூலிக்கு மாரடிக்கும்  கூட்டம்  அது
உணர்ந்து கொள்

இன்னல் உற்ற பொழுது .
உன்னை  ஏற்றமிகு மனிதனாய்
உலகதனில்   மின்ன வைக்கும்
ஏந்திழையாள்   உன் தாரம் -என்பதனை
புரிந்து கொள் 


நிழலாக   தொடரும் உறவு அது
கழல் தன்னை   கழற்றி   - தன உறவான   கோவலனின்
 உயிருக்காய்..... மன்றாடி
நீதி கெட்டு
ஊரையே   கொளுத்தி -புகழ் காக்கும்
கண்ணகி  கள் வாழும் பூமி இது
தெளிந்து கொள்


[ஸ்ரீ ராஜா ]

1 Kommentar: