Freitag, 16. Dezember 2011

சுருக்கமாக சொன்னால்,

நோபல் பரிசைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்ட வங்கக் கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஓராண்டு காலத்திற்கு
நடைபெறவுள்ளன.இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசுகள் கூட்டாக இணைந்து இக்கொண்டாட்டங்களை நடத்துவதென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த ஓராண்டுக் கொண்டாட்டங்களுக்கு முன்னோடியாக கடந்த மார்ச் 28 ஆம் திகதி இலங்கையில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைக்கொண்ட இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இலங்கைக்கான இந்திய மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயங்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

"ரவீந்திர சங்கீதம்' என அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களை பங்களாதேஷ் நாட்டின் பிரபல இசைக் கலைஞரும் தாகூரினால் அமைக்கப்பெற்ற சாந்தி நிகேதனில் கல்வி கற்றவருமான ரிஸ்வானா சௌத்ரி பான்யா இசைத்தார்.ரவீந்திரநாத் தாகூரினால் எவ்வாறு இப்பாடல்கள் இசையமைக்கப்பட்டிருந்தனவோ அந்த மெட்டுகளில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

"ரவீந்திர சங்கீதம்' என்றதுமே பங்களாதேஷிலும் இந்தியாவிலும் அனைவரினதும் நினைவுக்கு வரும் இசைக்கலைஞரான ரிஸ்வானா சௌத்ரி பான்யாவின் இந்த இசை நிகழ்ச்சியை மண்டபம் நிறைந்த ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.பங்களாதேஷ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மிஜாருல் கயாஸ்,இந்திய உயர்ஸ்தானிகள் அஷோக் கே காந்தா, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மஹ்பூப் உஸ்ஸமான், இலங்கையின் மூத்த அமைச்சர் சரத் அமுனுகம,அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் தேசிய கீதமான  "ஜனகன மன'மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதமான "அமார் ஷோனா பங்க்ளா'ஆகிய பாடல்களை யாத்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் இலங்கைத் தேசிய கீதத்தின் ஆக்கத்திலும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்துள்ளார்.இலங்கையின் தேசிய கீதத்தை யாத்து இசைவடிவம் கொடுத்த அமரர் ஆனந்த சமரக்கோன் தாகூரின் சாந்தி நிகேதனில் தாகூர் உயிர் வாழ்ந்த காலத்திலேயே பயின்றுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.இந்த இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இந்திய துணை உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரி,இலங்கையின் தேசிய கீதத்தைக் கேட்கும்போதெல்லாம் தன்னையறியாமலே அதனைத் தான் பாடத் தூண்டும் அளவுக்கு அதன் இசையும் சொற்களும் தனக்குப் பரிச்சயமாக அமைந்திருப்பதாகச் சொன்னார்.

கல்கத்தாவில் 1816 இல் தோன்றி 1941 இல் மறைந்த தாகூர் அப்போது பிளவுபடாதிருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசத்திலும் வாழ்ந்துள்ளார்.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தைப் பிரிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு சட்டமொன்றைக் கொண்டுவந்தபோது வங்காளதேசத்தின் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் தாகூர்.அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இயற்றிய கவிதையில் ஆரம்பப் பகுதியே பங்களாதேஷின் தேசிய கீதமாகத் தற்போது உள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நோபல் பரிசு பெற்ற "கீதாஞ்சலி' கவிதை நூல் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது.சுகவீனமுற்றிருந்தபோது ஓய்வுக்காக தற்போதைய பங்களாதேஷாகவுள்ள கிழக்கு வங்கத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வேளையில் தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தாகூர் முயற்சித்தார்.தனது வங்க மொழி கீதாஞ்சலியிலிருந்தும் ஏனைய இரு கவிதை நூல்களிலிருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் மொழிபெயர்த்த கவிதைகளே ஆங்கிலத்தில் "கீதாஞ்சலி'என்ற பெயரில் வெளியிடப்பட்டன.

தாகூர் வெறுமனே ஒரு கவிஞர் மாத்திரமன்றி சிறுகதை,நாவல்,நாடகம்,இசைநாடகம்,சித்திரம்,தத்துவம்,இசைப்பாடல்,நடிப்பு,பேச்சு எனச் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவர்.அவரின் நட்பு வட்டமோ மிகப்பரந்தது.விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டீன்,ஆங்கிலக் கவிஞர் கீற்ஸ்,மகாத்மா காந்தி,வில்லியம் ரொதென்ஸ்ரைன் என அவரது நட்பு வட்டம் விசாலமானது.

பல்வேறு நாடுகளுக்கும் தனது கலைத் துறை சார் விஜயங்களை மேற்கொண்டுள்ள ரவீந்திரநாத் தாகூர் இலங்கைக்கும் மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார்.இறுதியாக 1934 இல் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் எழுதிய சப்மோச்சோன் என்ற நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார்.பின்நாட்களில் இலங்கையின் பிரதமரான எஸ். டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்க இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தவர்களில் ஒருவர்.அவர்இந்த நாடகம் பற்றி அப்போது டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தில் நாடகத்தைப் பெரிதும் பாராட்டி எழுதியதுடன் இசையும் நாடகமும் கற்பதற்கு மாணவர்களைச் சாந்தி நிகேதனுக்கு அனுப்ப எந்தவொரு அமைப்பும் முன்வருமானால் தாம் இயன்றளவு நன்கொடைய வழங்கத் தயாராகவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் இறுதி இலங்கை விஜயத்தின்போது ஹொரணையில் அமைந்துள்ள சிறிபாலி நுண்கலைக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் அதற்கான பெயரையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.சாந்தி நிகேதன் பாணியில் மதுரக் கலைகளின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட இக்கல்லூரி இன்று சாதாரண கல்லூரியாக மாற்றம் பெற்றாலும் இலங்கையில் நுண்கலைகளின்பால் பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரித்து நுண்கலைக்கான பல்கலைக்கழகமொன்று உருவாக இக்கல்லூரி ஒரு தூண்டுகோலாக அமைந்ததென இலங்கை தாஹூர் மன்றத்தின் அமைப்பாளர் கே.எம்.எ.பண்டார தெரிவித்தார்.தாஹூரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறிபாலி கல்லூரியிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மாகவி தாகூர் தனது இலங்கை விஜயத்தின்போது கண்டிய நடன ஆட்டமுறைகளைக் கண்டு மகிழ்ந்ததுடன் அதன் சிறப்புகளைப் பெரிதும் விதந்து பாராட்டியுள்ளார்.பாராட்டுதல்களோடு மட்டும் நின்றுவிடாமல் இந்தியா திரும்பிய பின்நாட்களில் அவர் எழுதிய இசை நாடகங்களில் கண்டி ஆட்ட யுக்திகளைப் பயன்படுத்தியமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கதே.
இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.
கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மக்கள் மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் கலெக்டெராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்தின் புதல்வர். இவர் 7 மே 1861(1861-05-09) ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவர் தாயார் பெயர் சாரதா தேவி. இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பமே எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சமசுக்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் பூணூல் சடங்கிற்குப் பின்னர், 14 பெப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வீட்டிலேயே வரலாறு, வானியல், அறிவியல், சமசுக்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

தான் ஒரு வழக்குரைஞர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் (Brighton, London) பிரைட்டண், லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலையாக மிளிர்ந்தது. இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்பத்தின் நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.
இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.
1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.
இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு உந்தப் பட்டிருப்பதையும், அவர்களை அடிமைகள் போல் நடத்துவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்கலில் முப்பத்து ஒரு தேசங்களுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுட் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.
ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.
1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.


தாகூரின் படைப்புகள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்டவை. ஐரோப்பா,  அமெரிக்கா, ரஷ்யா என உலகம் முழுவதும் நேசிக்கப் பட்டன. அவற்றில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கீதாஞ்சலிலியை கூறலாம். 1913-ஆம் ஆண்டு கீதாஞ்சலிலி படைப்புக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அன்று நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆசியர் இவரே. வங்காள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் தாகூரின் தாக்கம் மிகவும் அதிகம். இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கிய பன்முக சிந்தனையாளராக இரவீந்திரநாத் தாகூர் நினைவு கூறப்படுகிறார். 

இரவீந்திரநாத் தாகூர் பாரம்பரியமான இந்து குடும்பத்திலிலிருந்து வந்தவர். அவர் இந்துமத இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.  என்றாலும், வங்காள முஸ்லீம்களின் மீது அதிக அன்பு கொண்டவர். இவரின் சிந்தனைகள் முஸ்லீம் மக்களை ஈர்த்தன. அதனால்தான் புதிதாக உருவான வங்காளதேசம்  தாகூரின் பாடலான "அமர் சோனார் பங்களா' (என் தங்கமான வங்காளம்) என்ற பாடலை தனது நாட்டின் தேசிய கீதமாக்கிக் கொண்டது.

உலகில் இந்து கலாச்சாரம், முஸ்லீம் கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. ஆனால் தாகூரின் குடும்பம் இந்த மூன்று கலாச்சாரங்களுடன் பிணைக்கப்பட்டது. அவரின் வங்காள குடும்பம் இந்து, முஸ்லீம், ஆங்கில நாகரிகத்தை உள்ளடக்கியது. தாகூரின் தாத்தா துவாரகநாத் அரபி, பாரசீக மொழிகளில் புலமைப்பெற்றவர். தாகூருக்கு சமஸ்கிருதம், இஸ்லாம், பாரசீக இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானமிருந்தது. இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மூன்று மதங்களும் தாகூரை மாறுபட்ட மனிதராக உருவாக்கியது. அதனால்தான் அவரின் சிந்தனையும் மாறுபட்ட யதார்த்தவாத படைப்புகளாக விளங்கியது.

தாகூர் உலகின் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், இசையமைப்பாளர், சிறந்த ஓவியர், என பன்முகத் தன்மையுடையவர். அவரின் படைப்புகளில் இலக்கியம், அரசியல், கலாச்சாரம், சமூக மாற்றம், மத நம்பிக்கை, தத்துவம், சர்வதேச விவகாரம் ஆகிய பல அம்சங்களும் பொதிந்திருக்கும். அதனால்தான் தாகூரின் சிந்தனைகள் இந்திய துணைக் கண்டத்தில் முதல் அரை நூற்றாண்டுக் காலம் ஆளுமை செலுத்தியது.  

தாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள். என்றாலும் பல்வேறு கருத்துகளில் தாகூர் காந்தியிடமிருந்து மாறுப்பட்டார். குறிப்பாக தேசியம், நாட்டுப்பற்று, கலாச்சார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இருவருக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. காந்தியின் கருத்துகளில் பழமைவாதம் அதிகமிருக்கும். ஆனால் தாகூரின் கருத்துகளில் அறிவியல் பூர்வமான விளக்கமிருக்கும். காந்தியின் பல கருத்துகளை கடும் விமர்சனம் செய்துள்ளார் தாகூர். இந்தியாவுக்கு சிறந்த தலைமையை காந்தி வழங்கவில்லை என்றே தாகூர் கருதினார். என்றபோதிலும் காந்தியை முதன் முதலாக மகாத்மா (பெரிய ஆத்மா) என அழைத்தவர் தாகூர்தான்.  இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகப்பெரிய வேறுபாடுக் கொண்டது. காந்தி தனது தாம்பத்ய வாழ்க்கையை பகிரங்கமாக ( காந்தி எழுதிய சத்தியசோதனை என்ற நூலிலில்) எழுதினார். ஆனால் தாகூரோ "தாம்பத்திய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தை கேலிலி செய்வதாகும்' என எழுதினார். எனினும் தாகூரின் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை, சோகமானது. தாகூர் 1883-இல் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி மிருனாலி தேவி 1902-இல் இறந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தாகூருக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தனர். அவர் மீது மிகுந்த அன்பை செலுத்தினர். நீண்ட விவாதங்கள் (குறிப்பாக விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் மனைவி அபலாபோஸ் போன்று) செய்தனர். ஆனால் அவை அனைத்தும் கருத்து பறிமாற்றங்களை தாண்டி செல்லவில்லை.

1930-இல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ரவீந்திரநாத் தாகூரும் உரையாடியது, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. அதில் உண்மை எந்த அளவுக்கு கருத்துகளிலும் அறிவியலிலும் பிரதிபலிக்கிறது' என்பதை கூறியிருந்தார். அந்த நேர்காணலில் ஐன்ஸ்டைன் தாகூரின் தத்துவ கருத்துகளை புகழ்ந்திருப்பதை பார்க்கலாம்.



தாகூர் தேசியத்திற்கு எதிரான கொள்கையையே கொண்டிருந்தார். "இந்திய துணைக்கண்டத்தில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களும் இருக்கும்போது, இந்து தேசியம் என்பது மோசமான கொள்கை' என்றார். ஆனால் காந்தியோ இதற்கு நேர் எதிராக தேசியத்தை ஆதரித்தார். அவரின் ராமராஜ்யம் போன்ற வார்த்தைகள் இந்து தேசியத்தை முன்னிறுத்தியது.

தாகூரின் குடும்பம் ஆங்கிலேயரிடம் நட்புடன் இருந்துள்ளது. என்றபோதிலும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தாகூர் உறுதியுடன் இருந்தார். 1905-இல் கர்சன் பிரபுவால் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது தாகூர் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக பேசினார். தாகூரின் பாடல்கள் வங்காள வீதிகளில் பாடப்பட்டது. அதேபோல 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி ஆங்கில ராணுவம் அமைதியான பொதுமக்கள் கூட்டத்தின் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 379 பேர் இறந்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது கடும் கண்டத்தை தெரிவித்து ஐந்து கடிதங்களை அன்றைய வைசிராய்க்கு எழுதி    னார் தாகூர். தனக்கு ஆங்கில அரசு வழங்கிய "நைட்வுட்'  (Knight wood) பட்டத்தை திருப்பி அனுப்பினார்.

இந்தியா விடுதலையடைந்தவுடன், தாகூர் எழுதிய "ஜன கன மன அபிநாயக' என்ற பாடல் தேசியக் கீதமாக்கப்பட்டது. அதேபோல வங்காளதேசம் என்ற புதிய நாடு, தாகூர் எழுதிய "அமர் சொனார் பங்களா' என்ற பாடல் தேசியக்கீதமாக்கிக்கொண்டது. உலகில் இதுவரை இரண்டு மாறுபட்ட தேசங்களுக்கு தேசியகீதம் இயற்றிய பெருமை இரவீந்திரநாத் தாகூருக்கு தவிர வேறுயாருக்குமில்லை.

இரவீந்திரநாத் தாகூரின் கல்வித்திட்டம் இன்றும் அற்புதமானவை. அவர் வெறும் ஆரம்பக்கல்வி பற்றி மட்டுமே பேசவில்லை. பள்ளி என்பது மாணவர்கள் நேசிக்கும் மகிழ்வான இடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர். செயற்கைத்தனமான பள்ளிகளையும் கல்வி முறைகளையும் கண்டித்தார். இயற்கையான பள்ளிச் சூழலை பற்றி பேசினார். எப்படி பள்ளியை உருவாக்குவது, குழந்தைகளை எப்படி கவருவது, அவர்களை எப்படி மிகச் சிறந்த மதிநுட்பம் கொண்டவர்களாக தயார்செய்வது என விரிவாக எழுதினார். ஏட்டில் மட்டுமல்லாமல் அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்.  சாந்திநிகேதனில் சாதித்துக் காட்டினார். தனது வாழ்கையில் அதிக நாட்கள் சாந்திநிகேதன் பள்ளியை முன்னேற்றுவதிலேயே கழித்தார். அவரின் நோபல் பரிசு  நிதி முழுவதையும் சாந்திநிகேதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். கட்டணமில்லாத இலவசக் கல்வியை போதித்தார். ஆங்கில அரசிடமிருந்து எவ்வித நிதி யுதவியையும் பெறவில்லை. சில தனிபட்ட நபர்கள், அவரது நண்பர்கள் மற்றும் காந்தி போன்றோர் நிதி யுதவி செய்தனர்.

தாகூர் விரும்பிய கல்வியானது அறிவியல், இலக்கியம், கலை, மனிதவளம் சார்ந்ததாக இருந்தது. அதன்படியே சாந்திநிகேதனில் கல்வியை போதித்தார். இந்திய கலாச்சாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் போதிக்கப்பட்டன. சாந்திநிகேதனின் மாணவர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சாந்திநிகேதனில்தான். தாகூர் எனக்கு "அமர்த்தியா சென்'  (அழிவில்லாதவன்) என பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல் கல்வி போதித்த ஆசிரியர். அந்த பள்ளி பல வகையில் மறு பட்டது. வகுப்புகள் எப்போதும் வெட்டவெளியில்தான் நடக்கும். அப்போதுதான் இயற்கையை ரசிக்க முடியும்; அமைதி நிலவும். பள்ளியில் தேர்வு நடைபெறாது. ஆனால், அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவை இந்திய கலாச்சாரம் தொடங்கி மேற்கத்திய சிந்தனைகளுக்கு பிறகு, சீனா அல்லது ஜப்பான் கலைகளில் முடியும்.

அதேபோல தாகூரின் கலாச்சார சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றை சத்யஜித்ரேயின் படங்களில் பார்க்கலாம். சத்யஜித்ரேயும் சாந்திநிகேதனில் பயின்றவர். அவரின் பல படங்கள் தாகூரின் கதைகளின் அடிப்படையில் உருவானவை. இதை பற்றி 1991-இல் சத்யஜித்ரே, ""சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் கழித்தது என்னுடைய வாழ்வில் உன்னதமான காலங்கள். அது என்னுடைய கண்களை முதல் முறையாக திறந்தது. இந்தியா மற்றும் கிழக்காசிய கலைகளை கற்றுத் தந்தது. அங்கு மேற்கத்திய கலை, இசை மற்றும் இலக்கியம் கற்றுக்கொண்டேன். சாந்தி நிகேதன் கலையையும் இசையையும் என்னுள் விதைத்தது''  என்றார். இதேபோலதான் ஜவஹர்லால் நேரு தனது "தி டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலிலில் சாந்திநிகேதனை பற்றி சிறப்பாக எழுதியிருப்பார். அதோடு நில்லாமல் தனது மகள் இந்திரா பிரியதர்ஷினியை சாந்திநிகேதனில் (1934- 35) கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி (அமைதியான பார்வை) என பெயர் சூட்டினார்.
சுருக்கமாக சொன்னால், இரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் மிக சிறந்த தீர்க்கதரிசி ஆவார். இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுவரும் சிந்தனைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே வலியுறுத்தி வந்தவர். குறிப்பாக, இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை என்ற இழிவை நீக்குதல், மத சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தை பேணிகாத்தல் ஆகியவை தாகூர் சிந்தனைகளின் சாரமாகும். இவை என்றைக்கும் மனித குல முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன.





Keine Kommentare:

Kommentar veröffentlichen