Mittwoch, 31. August 2011

இற்றை வரை சொன்னாயா ? நீ மாலை கொண்ட மங்கைஎன? அன்பே ! நானாகத்தான் தேடிவந்தேன் -நலிந்த என் மனதில் ஆறுதலாய்

வாங்குதற்கு கடைசரக்கோ ?????????
காதலடி காதல்!!!!!!!!!!!
வேண்டுதலே இல்லா நினைவுகள்
விபரீதமானவை தான்.
கூடு விட்டு கூடு பாயும்
... வித்தையடி

உனக்கு,!!!!!!!!!!!!!!!!!!!​!!!!!!

அடைந்தால் தேவியே நீ தான்
என்ற பெரு விருப்பு எனக்கு

ஆசை களின் மோசம்
மற்றவைகள் - ஆம்
வெளி வேஷம்

நாடி வந்த எனது
நாடி துடிப்பு
நீ அறியாய்

பூசையின் மலராய்
உன் நினைவு எனக்கு

நீயோ மாலை யில்
பிணைத்த மலரடி

திருமண மாலையில்
பிணைத்த ...............
புது மலராய் வருவாய் என
வாக்குறுதி தந்தேனே

இற்றை வரை சொன்னாயா ?
நீ மாலை கொண்ட மங்கைஎன?
அன்பே !
நானாகத்தான் தேடிவந்தேன் -நலிந்த என் மனதில் ஆறுதலாய்

என் நினைவு மட்டுமா?
என் வாழ்க்கையே நீ தான் என்று
என்னயல்லாவா தொலைத்து விட்டேன்
உன்னிடத்தில்

வாழ்த்திய வாய்க்குள் பாஷாணம்
போசனமாய் எதற்கு நீ தந்தாய்

புரியவில்லை எனக்கின்னும்

மாதரசி உன்னிடம் தாயன்பை எதிர் பார்த்து சேய் போல்
உன்னை தொடர்ந்த பாவியடி

காதலால் உன் மேல் கொண்ட மோகத்தால்
பின்தொடர்ந்து
இப்போ சோகத்தில் வாழும்
ஜீவனடி

தோற்றங்கள் புதிதாய் உனக்குள்
உருவாக
தொலைத்தது நீ
என்னை தான்
ஆனால்
நானோ தொலைந்த
என் மனதின் நினைவுகளுடன்
நன்றியுள்ள நாயாக

என்றும் உன் பின்னே

நித்திலத்தில் நியமங்கள் எப்படியோ

இதயத்தின் ஓசையே  அவள்  ஆனா  போது -என்
இதயத்துடிப்புக்கு  அர்த்தம்  தேடலாமோ

நித்தமும்
இது தான்  என்றால்
நித்திலத்தில்
நியமங்கள்  எப்படியோ

ஆம் தேவதையாய் நீ வந்து -என்னை தேள் வதை எனக் கொட்டினாலும் சொட்ட இனிக்கும் தேன் வதையாய் உன்னை ருசிப்பேனடி நான்

விழியால்  நீர் வழிய  நீ என்னை  உற்றுப்  பார்ப்பதும்
உன் சோகம் புரியாது நான் தவிப்பதும்

கன்றிழந்த பசுவை விட  உன் நினைவால் இதயம்
ரணமாய் வலி எடுப்பதும்

என் உயிரும்  உன் உயிரும் மௌனமாய் சொன்ன கதைகளின்
சோக விளிம்பில் நான்.. திக்கி திணறுவதும்

உன் இமைகளின் சிணுங்களில் தொலைந்து போன என் இதயம்
அவஸ் தைகளால்  திக்கி திணறுவதும்

நீ அறியாததா  என் அன்பே

முதல் நான் பார்த்த  பெண்ணே நீ தானடி
அந்த இடைவெளி நிரப்ப
உன்னை அன்றி யாரடி -எனக்கு

நீயே  எனக்கு இல்லை என்றான பின்பு

உன்னை தழுவும் காற்று என்னை தழுவும் சுகத்தில் வாழுகின்றேன்

நீ சுவாசித்த காற்றின்  சுவாசமே என் மூச்சான  பின்பு
இடையில்  என்னை உரசும் காற்று சொல்லுமடி
என் இதய பரிதவிப்பை

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை

கனவுகளில் நான் வாழ்வதும் -உன்
கனத்த இதயத்தை
அக்கினி பெரு மூச்சால் நீ தணிய விடுவதும்

அந்த அனல் மூச்சில் நான் எரிந்து போவதும்
கண்ணே யாருக்கும் தெரியாத  ரண வலி  தானே

நான்  நடக்க த்தெரியாத காட்டில் நடக்கிறேன்

நீந்த தெரியா விடினும்
நினைவு என்னும் சமுத்திரத்தில் மூச்சுத் திணறுவதும்

காதலின் வெறியில் காமம்  அரவணைப்பில்
நாதமில்ல மணிகளாய்

  ஓசை இன்றி என் மனம் அழுவதும்

 யாருக்கும் தெரியாத ரணவலி தானே

வானவில்லும் வர்ணமும் போல என் ஆசைகள்
சில கணமே  என்றாலும்

அந்த வான வில்லாய் நான்
 வர்ண நிலா உன்னை  தேடி
களைக்கின்றேன்  

பகலில் தோன்றும்வான வில்லாய் நான்
இரவுக்கே சொந்தமான வர்ண நிலவாய் நீ

எப்படி முடியும்  என் காதல்

முதல் நாள் மலரும் மலராய் -நீ வாழ்ந்திட வேண்டும் நீடி

முள்மீது வலியோடு நீ நிற்பதை அறிந்து
நான்தானே  உன் பாதம்  மண்ணில் பாவ விடாது  பூக்களாய்
கிடந்தேன்
பாதங்களைப் பாதுகாக்க
நீயோ பூக்களைப் புறக்கணித்துவிட்டு
...பூக்கூடையின் மேல் பாதம் பதிக்கின்றாய்
அது வெற்றுக்கூடையல்ல
உனக்கான என் அன்பை சுமந்து வந்த
என் இதயம்  என்பதை அறியாதவளா ?நீ

ஆம் தேவதையாய்   நீ வந்து -என்னை
தேள்   வதை  எனக் கொட்டினாலும்

சொட்ட இனிக்கும்  தேன் வதையாய்
உன்னை ருசிப்பேனடி நான்

அந்த இன்ப வேதனையில் உன் நினைவுகளை என் கற்பனையில் சுமந்து நான் மவுனமாய் அழுகின்றேன்

உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காக
 எனக்குள் துடிக்கும் இதயத்துக்கே
 வலி அதிகம்  என்கிறாயா
படிக்கும் போதும்
புசிக்கும்போதும் ..ஏன்  நான் உறங்கும் பொழுதில் கூட
அடியே செல்லம்  ,அடியே செல்லம்
என்றல்லவா  என் இதயம்   விம்மி விம்மி  தணிகிறது

இதை பார்த்து கொண்டிருக்கும்
சுவாசப்பை
வேதனை  தாங்காது    மேல் மூச்சு  கீழ்  மூச்சு  வாங்குகிறது
உனக்கென்ன
உன் காந்தவிழிகள்   பாசுபத அத்திரமாய்
என்னை  திணறடிக்க
அந்த  இன்ப வேதனையில்
உன் நினைவுகளை 
என்  கற்பனையில்  சுமந்து
  நான்   மவுனமாய்  அழுகின்றேன்


Dienstag, 30. August 2011

உன் முகம் தேடி என்றும் ஏக்கத்துடன் உன் யன்னல் ஓரம் நான்

எட்டாத வானத்து   எழில் நிலாவை  கிட்டாது என்று எவன் சொன்னான்?
முட்டாத மலை முகட்டில் நின்று எட்டியும் முடியாது மனிதங்கள்  தவிக்க!!!!!!!!!1
வட்ட நில்லா மண்ணில் கொடி நாட்டி  மன்பதைக்கு பெருமை கொண்டான் -நீல்
ஆம்ஸ்ரோன்கே  .........................
பொதிகை தழுவிய தென்றல் இப்போ சஞ்சீவ ஒலியின்
 இசையையும் அணைத்து வர
வட்ட நிலாவாய் நான்
  வானத்தில்  ஒளியாய்
உன் வீட்டு  மரத்தின்  மேல் நின்று
 சாளரத்தின் ஊடு வந்து
தினம் தினம் உன்னை தழுவி  கொள்வதும்
சீதளத்  தென்றலும்
 என்னுடன்  போட்டியிட்டு
 உன்னை
தீண்டி விளையாடும்

என் ஒழி கீற்றின் அணைப்பில்
 நீ தூங்கி விடுவதை
காண சகிக்காது .
.சினம் கொண்ட தென்றல்
வேகமாய்  உன் சாளரக் கதவுகளை
  வீசி அடிப்பதுவும்

அயர்ந்தெளுந்த  நீயோ
 சாளரக் கதவுகளை மூடிக் கொள்ள
வெளியே நான்
 வேதனைப் படுவதுவும்
இதைக் கண்ட தென்றல்
பெருமிதமாய்
 புன்னகையுடன்
வெளியேறி செல்வதுவும்
  நாளாந்த  வழக்கமன்றோ
ஒரு நாள் ஒளி காட்டி
மறுநாள் இருள் கூட்டும்
 வெண் நிலா  நானல்ல

சுற்றும் பூமியும் அசையும்  கோள்களும்
வண்ண கார் முகிலும்
எனை மறைக்க
உன் முகம்  தேடி
என்றும்  ஏக்கத்துடன்
உன் யன்னல்  ஓரம்
நான்
என்றும்உன் மனதில் மாறா அன்பு தரும்
வெண்ணிலாவாய்............................
நிலவாய்
காய்ந்து கொண்டிருப்பேன்

கொலுசே

ஒ  கொலுசே
நீ போகும் இடம் எல்லாம்
வழி விடு  வழி விடு  என சைகை
செய்கிறாய்
என்னவளின்  கலீர் சிரிப்பும்
 உன் கொலுசொசையும்....அவள் போகும் இடங்களை
காட்டி கொடுக்க-அவள்
சேலை  மடிப்பு  மெதுவாய் .........
 மெதுவாய்  என  தடவி  கொடுக்கிறதே
இன்னுமா    உனக்கு  !!!!!!!!!!!!!!!
புரியவில்லை

Sonntag, 28. August 2011

நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற பரிசுகளும் மெடல்களும் பட்டங்களும் என்னைக் கண்டு பரிகசிப்பது போல் ஓர் உணர்வு

அன்பால் உருகி   அரை உயிராய்
இலவு காத்த கிளியாய் -வெந்து
மன வேதனையில்  வெதும்பி
கனக்கும் மனதுடன்   ...கடந்த கால நினைவுகளுடன் -இன்று
தேம்பி அழும்  சிறு பிள்ளையாய் நான்
எனது பார்வையின் எடை போடலில்
 தவறான என் கணிப்பின்
பின் விளைவு ...
அவள் நினைவில் பொழிந்த பனிமலை
கரைய்ந்து திராவகமாய் ...உள்ளே அரிக்கிறதே
மவுனமாய் என் மனம்   தேற்றலின்றி.... 
தவிப்பதும்   துடிக்கும் இதயம்
....துடிபதேல்லாம்

தாம் தோம்  என்று  உதைப்பது போல்
ஓர் உணர்வு
கடந்த காலத்தில்  என்ன
இப்போதும்  இணையாத தண்டவாளமாய்
என்காதல்
இணைவது போல் தோற்றமன்றி...
இணைந்ததில்லை

இணைந்ததாக  ஒரு கற்பனை..
சுகத்தில்  வாழ்ந்து விட்டேன்
படிக்கும் படிப்பில்  எல்லாம்  பட்டங்களும் பதவிகளும்
என் கால் அடியில் ...பெருமையாய் தவம் கிடக்கின்றன
ஆனால்.................................
காதல் பரீட்சையில்  மட்டும் நான்  தோற்று விட்டேன்

நான் கடந்து வந்த பாதையில்
நான் பெற்ற பரிசுகளும்  மெடல்களும்
பட்டங்களும்
என்னைக் கண்டு   பரிகசிப்பது போல்  ஓர் உணர்வு

எல்லா வற்றுக்கும் உதவியாய் வருவாள்  என எண்ணி
நான் கட்டிய காதல் கோட்டைகள்...இன்று சுனாமியால்  தாக்கப்பட்டது போல் ...


என் கண்ணீரில்  ஒவ்வொன்றாக  கரைய  ஆரம்பிக்கின்றன ..

அடியே ,,,,என் உயிரே
என் தலை கோதி ஆறுதலாய்  என்காதலியாய்
 நீ வருவாயென்று வாழ்ந்தேனே
உன் மடியினில் தலை வைத்து
உன் மார்பில் முகம் புதைத்து அழ முடியாப்
பாவி  ஆகினனே
பொங்கிடும் நெஞ்சின்உணர்வுகள் போலி ஆகினவே
சொல்லவும் வார்த்தை இன்றி
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளிநீர்
கடலாய் உருவெடுத்து  ..சமுத்திரமாய் மாறி
பெரு அலையாய்   உருமாறி
 சூறாவளியாய்
என் உணர்வுகளை அலையாய்
 உயரக் கிளப்பி
அர்த்தமின்றி    மடிகின்றன
நுரைகளாய் நீர்க்குமிழியாய்  ..
என் காதல் ..
.இலவம் பஞ்சுகளாய்  வெடித்து
  பஞ்சாய்   காற்றில்
 அங்கும் இங்கும் அலை கின்றன
நட்புக் காதல் .............
என்னை பரிகசிக்கும் என் மனம்
எத்தனை கோடி பணமிருந்தாலும்
எத்தனை தலைமுறை சொத்து இருந்தாலும்
அத்தனை யும்  நான் பெற்ற கல்வியும் பட்டங்களும்
அவள் காலடியில் போட்டு


ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதை
 என் காதல்
ஆசையுடன்  சொன்னேன் அவள்
 இதயம்  நாடி

தாலி கட்டி வேலி போட்டு
வாழவைக்க  வாழ்ந்து விட
துடித்த என் மனது
துவண்டு   போய் பூக்களற்ற நாராய்
வெறும் தரையில்
பாம்பாய் நெளிய
வாலறுந்த பட்டம்போல் நான் ...
  தோழி