Dienstag, 30. August 2011

உன் முகம் தேடி என்றும் ஏக்கத்துடன் உன் யன்னல் ஓரம் நான்

எட்டாத வானத்து   எழில் நிலாவை  கிட்டாது என்று எவன் சொன்னான்?
முட்டாத மலை முகட்டில் நின்று எட்டியும் முடியாது மனிதங்கள்  தவிக்க!!!!!!!!!1
வட்ட நில்லா மண்ணில் கொடி நாட்டி  மன்பதைக்கு பெருமை கொண்டான் -நீல்
ஆம்ஸ்ரோன்கே  .........................
பொதிகை தழுவிய தென்றல் இப்போ சஞ்சீவ ஒலியின்
 இசையையும் அணைத்து வர
வட்ட நிலாவாய் நான்
  வானத்தில்  ஒளியாய்
உன் வீட்டு  மரத்தின்  மேல் நின்று
 சாளரத்தின் ஊடு வந்து
தினம் தினம் உன்னை தழுவி  கொள்வதும்
சீதளத்  தென்றலும்
 என்னுடன்  போட்டியிட்டு
 உன்னை
தீண்டி விளையாடும்

என் ஒழி கீற்றின் அணைப்பில்
 நீ தூங்கி விடுவதை
காண சகிக்காது .
.சினம் கொண்ட தென்றல்
வேகமாய்  உன் சாளரக் கதவுகளை
  வீசி அடிப்பதுவும்

அயர்ந்தெளுந்த  நீயோ
 சாளரக் கதவுகளை மூடிக் கொள்ள
வெளியே நான்
 வேதனைப் படுவதுவும்
இதைக் கண்ட தென்றல்
பெருமிதமாய்
 புன்னகையுடன்
வெளியேறி செல்வதுவும்
  நாளாந்த  வழக்கமன்றோ
ஒரு நாள் ஒளி காட்டி
மறுநாள் இருள் கூட்டும்
 வெண் நிலா  நானல்ல

சுற்றும் பூமியும் அசையும்  கோள்களும்
வண்ண கார் முகிலும்
எனை மறைக்க
உன் முகம்  தேடி
என்றும்  ஏக்கத்துடன்
உன் யன்னல்  ஓரம்
நான்
என்றும்உன் மனதில் மாறா அன்பு தரும்
வெண்ணிலாவாய்............................
நிலவாய்
காய்ந்து கொண்டிருப்பேன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen