விழியால் நீர் வழிய நீ என்னை உற்றுப் பார்ப்பதும்
உன் சோகம் புரியாது நான் தவிப்பதும்
கன்றிழந்த பசுவை விட உன் நினைவால் இதயம்
ரணமாய் வலி எடுப்பதும்
என் உயிரும் உன் உயிரும் மௌனமாய் சொன்ன கதைகளின்
சோக விளிம்பில் நான்.. திக்கி திணறுவதும்
உன் இமைகளின் சிணுங்களில் தொலைந்து போன என் இதயம்
அவஸ் தைகளால் திக்கி திணறுவதும்
நீ அறியாததா என் அன்பே
முதல் நான் பார்த்த பெண்ணே நீ தானடி
அந்த இடைவெளி நிரப்ப
உன்னை அன்றி யாரடி -எனக்கு
நீயே எனக்கு இல்லை என்றான பின்பு
உன்னை தழுவும் காற்று என்னை தழுவும் சுகத்தில் வாழுகின்றேன்
நீ சுவாசித்த காற்றின் சுவாசமே என் மூச்சான பின்பு
இடையில் என்னை உரசும் காற்று சொல்லுமடி
என் இதய பரிதவிப்பை
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
கனவுகளில் நான் வாழ்வதும் -உன்
கனத்த இதயத்தை
அக்கினி பெரு மூச்சால் நீ தணிய விடுவதும்
அந்த அனல் மூச்சில் நான் எரிந்து போவதும்
கண்ணே யாருக்கும் தெரியாத ரண வலி தானே
நான் நடக்க த்தெரியாத காட்டில் நடக்கிறேன்
நீந்த தெரியா விடினும்
நினைவு என்னும் சமுத்திரத்தில் மூச்சுத் திணறுவதும்
காதலின் வெறியில் காமம் அரவணைப்பில்
நாதமில்ல மணிகளாய்
ஓசை இன்றி என் மனம் அழுவதும்
யாருக்கும் தெரியாத ரணவலி தானே
வானவில்லும் வர்ணமும் போல என் ஆசைகள்
சில கணமே என்றாலும்
அந்த வான வில்லாய் நான்
வர்ண நிலா உன்னை தேடி
களைக்கின்றேன்
பகலில் தோன்றும்வான வில்லாய் நான்
இரவுக்கே சொந்தமான வர்ண நிலவாய் நீ
எப்படி முடியும் என் காதல்
முதல் நாள் மலரும் மலராய் -நீ வாழ்ந்திட வேண்டும் நீடி
முள்மீது வலியோடு நீ நிற்பதை அறிந்து
நான்தானே உன் பாதம் மண்ணில் பாவ விடாது பூக்களாய்
கிடந்தேன்
பாதங்களைப் பாதுகாக்க
நீயோ பூக்களைப் புறக்கணித்துவிட்டு
...பூக்கூடையின் மேல் பாதம் பதிக்கின்றாய்
அது வெற்றுக்கூடையல்ல
உனக்கான என் அன்பை சுமந்து வந்த
என் இதயம் என்பதை அறியாதவளா ?நீ
ஆம் தேவதையாய் நீ வந்து -என்னை
தேள் வதை எனக் கொட்டினாலும்
சொட்ட இனிக்கும் தேன் வதையாய்
உன்னை ருசிப்பேனடி நான்
Keine Kommentare:
Kommentar veröffentlichen