Sonntag, 28. August 2011

நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற பரிசுகளும் மெடல்களும் பட்டங்களும் என்னைக் கண்டு பரிகசிப்பது போல் ஓர் உணர்வு

அன்பால் உருகி   அரை உயிராய்
இலவு காத்த கிளியாய் -வெந்து
மன வேதனையில்  வெதும்பி
கனக்கும் மனதுடன்   ...கடந்த கால நினைவுகளுடன் -இன்று
தேம்பி அழும்  சிறு பிள்ளையாய் நான்
எனது பார்வையின் எடை போடலில்
 தவறான என் கணிப்பின்
பின் விளைவு ...
அவள் நினைவில் பொழிந்த பனிமலை
கரைய்ந்து திராவகமாய் ...உள்ளே அரிக்கிறதே
மவுனமாய் என் மனம்   தேற்றலின்றி.... 
தவிப்பதும்   துடிக்கும் இதயம்
....துடிபதேல்லாம்

தாம் தோம்  என்று  உதைப்பது போல்
ஓர் உணர்வு
கடந்த காலத்தில்  என்ன
இப்போதும்  இணையாத தண்டவாளமாய்
என்காதல்
இணைவது போல் தோற்றமன்றி...
இணைந்ததில்லை

இணைந்ததாக  ஒரு கற்பனை..
சுகத்தில்  வாழ்ந்து விட்டேன்
படிக்கும் படிப்பில்  எல்லாம்  பட்டங்களும் பதவிகளும்
என் கால் அடியில் ...பெருமையாய் தவம் கிடக்கின்றன
ஆனால்.................................
காதல் பரீட்சையில்  மட்டும் நான்  தோற்று விட்டேன்

நான் கடந்து வந்த பாதையில்
நான் பெற்ற பரிசுகளும்  மெடல்களும்
பட்டங்களும்
என்னைக் கண்டு   பரிகசிப்பது போல்  ஓர் உணர்வு

எல்லா வற்றுக்கும் உதவியாய் வருவாள்  என எண்ணி
நான் கட்டிய காதல் கோட்டைகள்...இன்று சுனாமியால்  தாக்கப்பட்டது போல் ...


என் கண்ணீரில்  ஒவ்வொன்றாக  கரைய  ஆரம்பிக்கின்றன ..

அடியே ,,,,என் உயிரே
என் தலை கோதி ஆறுதலாய்  என்காதலியாய்
 நீ வருவாயென்று வாழ்ந்தேனே
உன் மடியினில் தலை வைத்து
உன் மார்பில் முகம் புதைத்து அழ முடியாப்
பாவி  ஆகினனே
பொங்கிடும் நெஞ்சின்உணர்வுகள் போலி ஆகினவே
சொல்லவும் வார்த்தை இன்றி
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளிநீர்
கடலாய் உருவெடுத்து  ..சமுத்திரமாய் மாறி
பெரு அலையாய்   உருமாறி
 சூறாவளியாய்
என் உணர்வுகளை அலையாய்
 உயரக் கிளப்பி
அர்த்தமின்றி    மடிகின்றன
நுரைகளாய் நீர்க்குமிழியாய்  ..
என் காதல் ..
.இலவம் பஞ்சுகளாய்  வெடித்து
  பஞ்சாய்   காற்றில்
 அங்கும் இங்கும் அலை கின்றன
நட்புக் காதல் .............
என்னை பரிகசிக்கும் என் மனம்
எத்தனை கோடி பணமிருந்தாலும்
எத்தனை தலைமுறை சொத்து இருந்தாலும்
அத்தனை யும்  நான் பெற்ற கல்வியும் பட்டங்களும்
அவள் காலடியில் போட்டு


ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதை
 என் காதல்
ஆசையுடன்  சொன்னேன் அவள்
 இதயம்  நாடி

தாலி கட்டி வேலி போட்டு
வாழவைக்க  வாழ்ந்து விட
துடித்த என் மனது
துவண்டு   போய் பூக்களற்ற நாராய்
வெறும் தரையில்
பாம்பாய் நெளிய
வாலறுந்த பட்டம்போல் நான் ...
  தோழி

Keine Kommentare:

Kommentar veröffentlichen