Sonntag, 11. Dezember 2011

தாவரத்துக்கு கூட உயிர்ப்பு உண்டு மனிதா !!!!!!!!!!!!!! உனக்கு மட்டும் ஏன் இல்லை சிலிர்ப்பு

வெறும் வைக்கோல்  கன்றுக்கும் சுரக்கும் தாயின் பால் ...
நிஜமான கன்றை கண்டால் சுரக்காதோ ?
கடிதங்களை திருமுகமாய்
தபால் காரனை  தெய்வ தூதராய்............
எத்தனை  தாய்மைகள் ....
தெருவோரத்தில்



சீதளத் தென்றலில்
குளிரும் பனியில்..
குலவிடப் பெண்டிருமாய்  கும்மாளம் போடுகின்ற கன்றுகள்


இரு கணம் ....
சிந்தித்தால் .....
எத்தனை ரண வேதனைகள்
எளிமையாகும்
 -தாய்மையின்
ஏழ்மை யும் நீங்கும்

வாழ் வாதாரம் நீ என்று ...
வாழ்ந்து விடு
வாழ் வில்  தாழ் வாரம் ஆகி விடாதே

தாவரத்துக்கு  கூட  உயிர்ப்பு உண்டு
மனிதா !!!!!!!!!!!!!!
உனக்கு மட்டும் ஏன் இல்லை  சிலிர்ப்பு

Freitag, 9. Dezember 2011

நான் என்ன விதி விலக்கா? தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை மூட்டுதல் போல்


காற்றின் தழுவலும்   வண்டினத்தின் முகவுரையும்
ஏற்றமிகு என் மனதில்
அவளின் ஏக்கம்

சேற்றில் வளரும் தாமரையா? அவள்

சீற்றமிகு கடலின்  இதமான  தடவல்கள்
ஈரமான  குறு மணலை ...சுதி ஏத்தும் காட்சிகள்
ஆழமாய்   மனதில் குறு குறுக்கும்

காற்றின் தழுவலில் தனை மறந்து
கை விளக்கு
சுடரோ  துயில் கொள்ளும் .

நாற்ருக்களோ  தலை குனியும்

முந்தானை  சேலை  சிலிர்க்க  வைக்கும்

அம்மட்டோ ?
இல்லை இல்லை



முந்தானை அசைவதால் .வெண் பனி சங்குகளின்
பரிணாமம்
இந்தா! இந்தா!!    என கை அசைக்கும்


நான்  என்ன  விதி விலக்கா?  
தீப்பெட்டி முத்தம் பெரு நெருப்பை
மூட்டுதல் போல்

உணர்சிகள் மனதில் விரகமாய்  வெடிக்க
நான் விட்ட
ஏக்க மூச்சின்  காற்றுக்கள்
அனல் காற்றாய்
எரிமலையாய்
என்று தான்  உன் கன்னத்தை
தீண்டுமோ?
துணிந்து

Mittwoch, 7. Dezember 2011

தினவெடுத்தால் ..உடம்புக்கு தீனி போட ..அறம் மீறி போகாதே !

ஆற்றோடு  கோபித்து 
அடியது கழுவாது
நாற்றமெடுக்கும் மனிதராய்
நலிவதென் !  நம் சமூகம் ?

கதையும் கற்பனையும்
களவும் கடும் சொல்லும்
இழிவாய்ப் பேசும் ........
ஈனமான  வன் குணமும் 

காட்டி  கொடுப்பும் ,
கடும் சூதும் வாதும்
ஏட்டிக்கு  போட்டியாய் ,இன்னும் பல -
குரோதமாம் குணம் அனைத்தும்
சதையும்  இரத்தமுமாய்
 உருவான  மிருகமதாய்
வாழ் கிறாய் மனிதன் என .........
சீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாற்றான் தொட்டது    தன மனைவி -இதை
மனம் ஆற்றாது நீ செய்தால் ?
துரோகமன்றோ?

பூவிழி மாந்தர் ,நம் பெண்டிர்
கோல மயில் போன்ற   ,
தோகை கொள்  ஆரணங்கு  -அவள்
அழகு தன்னில் நீ மயங்கி ..

கள்ளத்தனம்  கொண்டு - தினம் 
கரும் பனையின் கள்ளை ருசித்தவராய்
கதி கலங்கி  ...மதி மயங்கி
மாறு உரைத்தல்
அன்றேல் வைதல்
 கொடுமை அன்றோ?

மனிதனே ! நீ தமிழன் என்றால்
அமிழ்து   என்னும்  நம் தமிழன்  புகழ் பாடு !!!!!!!!!

செந் தமிழின்  புகழ் தன்னை
சேவித்து, உன் சென்னி தன்னில்
குட்டிகொள்

வையாதே  மாந்தர் தன்னை
வரம்பு  மீறி  போகாதே


தினவெடுத்தால் ..உடம்புக்கு
தீனி போட  ..அறம் மீறி  போகாதே !


நில் ! கவனி ! செல் !!!
தூரமல்ல   ..அர நெறிகள் .

எம் அரன் தந்த   வேதங்கள்
பொய்யல்ல ...................
வாழ் வின்,  வழி  முறைகள் .


இதை பின் பற்றி நீ  சென்றால்
இது வே   நமக்கு  அரண் ஆகும்


இதமான   எண்ணத்துடன் ,இனிது வாழ
தமிழ் அற நூல்கள் கற்போம்

தமிழ்  தேசியத்தை காப்போம்
நிமிர்ந்து

நீ எப்போ உணர்வது .... காலதேவனின் கையில் காலத்தின் விதி என்று


வற்றாத நதியாக ஓடட்டும்
பாசமெனும் உன் நினைவோட்டம்..

அதில் வாழத்துடிக்கும் மனதில்
மீனாட்டம் துடிக்கும் இதயம்..........
..
அலை அடிக்கும் !
ஏன் ? புயல் கூட சாமிரம் வீசும்

வெம்மி த் தணியும் மார்பு
ஏக்கத்தில் உன் நினைவாய் !!!!!!!!

சாகத் துடிக்கும் மீனாய்
உன் அன்பெனும் வலையில் சிக்குண்டு நான் .........
.

கரையேறும் படகுக்கு சாதகமாய்
அலைகள் கூட என்னை உன்னுடன் உந்தும்

வலைக்கும் மீனுக்கும் காதலா ?

கடலில் உப்பு எப்படி விளையும் ?
நாம் அழுத கண்ணீர் என்று
யாருக்கு இது புரியும் ?

நினைத்தா பார்த்தோம் ?
என்னை விட்டு நீ வெகு தூரம் செல்வாய் என்று

வழி போக்கர் சொல்வது என் காதில் விழுந்தது
இப்போ இவனொரு குடிகாரன் என்று ......

உன்னை மறக்க நினைத்து
நான் என்னை மறந்து நாளாயிற்று
என்பது கூட எனக்கு மறந்து போகிறது

வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே

நீ எப்போ உணர்வது ....
காலதேவனின் கையில்
காலத்தின் விதி என்று

Sonntag, 20. November 2011

என்னே ! எம் விதி ! தமிழா

என்னே !   எம் விதி !  தமிழா
கொஞ்சும் மொழி  தேன் தமிழ் -அமிழ்தே எம் மொழி
ஊனை வருத்தி ,உயிர் வருத்தி
உலகம் பரவிய ஒரே இனம்
தானை நடத்தி  தாரணி காத்த
 தமிழ் தாய்   பெற்ற மைந்தர் நாம் !
-இன்று வீணே   பொழுதை  வீணாக்கும்
அற்ப வீணராய் நாம் வாழ் வதுமேன்?



போட்டி  பொறாண்மை வஞ்சகங்கள்
தமிழன் வாழும் காலமாய்  தொடர்கிறதே !
பதில்  காணும் திறமை நாம் இழந்து
நாட்கள்  கடந்து யுகமாச்சு !
பிழைக்கும் நாட்டில்  போட்டிகளும்
உழைக்கும்  பொழுதிலும் தொடர்வது மேன்?


 மழைக்கு ஒதுங்கும் உயிரினங்கள்
ஒற்றுமையாக  வாழுது காண்!
நம் மினம்   இன்று தலைக்கும்
  கதிரைக்கும் போட்டி இட்டு
நடுத்தெருவில் நிக்குது பார் !


மண்ணுக்கும் பெண்ணுக்க்ம்
 போட்டி இட்டு
பொன்னுக்காக  குலமதனை,
    அழிக்கும்  -கோடரி
ஆனதுமேன் .?


-உலகில்
இருக்கும் பொழுதில் நாம் வல்லவர்கள்
இறக்கும் பொழுதில்   என்ன மிச்சம்


காட்டி கொடுக்கும் இனமதுவாய் ,.கயமை கொண்ட பேரினமாய்
ஊட்டி வளர்த்த தாய்தனை யே!
 கூட்டி கொடுக்கும் கயமையைபோல் .



நாட்டில் கிடக்கும்  பிரச்னைக்கு
 -நாமே நமக்குள்  எதிரிகளாய்
மானம் துறந்து ,மதி கெட்டு
,வீணர்களாய் தமிழ் துரோகிகளாய் -உலகில்  கொடு
அவுணர் களாக   மனதில் மாறி விட்டோம்


ஊனை பெருக்கி  உயிர் வளர்க்க
 எச்சில் கலை நாய்களாக
மாறிவிட்டோம்


விண்ணில் ஒளிரும் சூரியனும்,,,,,  மறைந்து போக நேரிடுனும்
கண்ணில் ஒளிகொண்டு  காவியங்கள் ,,,,,,படைக்கும் தமிழர் நாம் அன்றோ !

பெண்ணின் மானம் பெரிதென்று ,,
,உலகுக்கு நல வழி காட்டியவர்கள்
உண்ண உறங்க  வாழ்ந்த இடம்
  உயர்வு காண   ,,உழைப்பதனை
 உலகுக்கு  கோடிட்டு  காட்டியவர்கள்
வண்ண மயமாய் அணிகலனை
மயக்கும் மங்கைக்கு அணி வித்து
ஆடல்  பாடல் கலை என்று
 உலகை அரசோச்சி  அன்பால் வளர்த்தவர்கள்

போரில்  மறவர் தமிழன்  என்றார்
ஏரில்  உழைப்பில் தமிழன் என்றார்
கூடி வாழும் இனம் என்றால் 
குவலயத்தில் நம் இனம் தான் என்றார்
பேடு களாக நாம் பிறக்கவில்லை -என்று பல
ஏடு  களில்   இலக்கியம் தாம் வரைந்தார்


நாடு போற்றும் உத்தமர்கள்
இன்று நலிந்து   கூழைகும்பிடு போடுகின்றார்
தொன்று தொட்டு வளரும்  எட்டப்பரும்
கூடி கெடுக்கும்  காக்கை வன்னியரும்
சோடி சேர்ந்து  உழைக்கின்றார் ..
சோதனைகள் எமக்கு நிதம் கொடுக்கின்றார்



நாவின் நுனியில்   இனிமை களும்
மனதின் அடியில் வஞ்சகமும்
போட்டி பொறாண்மை கொண்டங்கே
பெயரில் தமிழனாய் வாழாதே


வாழும் காலை  பூமி தன்னில்
மற்றவர் காலை வாராதே
தோழை கொடுத்து  தூக்கி விடு
அவன் யாரி என்றால் 
நேரில் மோதிவிடு


வருகின்ற காலம் நமக்கெனவே
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
தேடுங்கள் அன்பை மாந்தரிடை -அதனால்
ஒளிமயமே 
எம்மிடை

Sonntag, 13. November 2011

அம மிதியை மிதித்து அரும் தேதி பார்த்து

உண்மைகள் தங்கங்கள் போன்றவை - நீ
எத்தனை முறை தீயில் திருப்பி திருப்பி
புடம் போட்டாலும்
தரமும் குறையாது .........
நிறமும் மாறாது .........
என்கிறாய் நீ
சுட்டால் தானே ஜொலிக்கும் .
வேதனையின் பின் வரும் மகிழ்ச்சி போல
வலியுடன் சேர்ந்த பிரசவம் போல

பட்டால் வரும் அறிவும்
-பொன்னை சுட்டால் வரும்
ஒளிர்வும்
பெண்ணே உனக்கு அணிகலனே !!!!!!!!!!!
கண்ணே என உனக்கு ..
உன் காதலன் தந்த பொற் தாலி கூறும் கதை என்ன?

சீராளன் உன் கணவன்
தாராளமாய் தந்த தாலி
முள் வேலி என்னும் சிறையல்ல

புடம் இட்ட தங்கம் போல்
புதுப் பொலிவாய்
ஜொலி பெண்ணே !

என் வாழ்வின் அர்த்தங்கள்
உன் வாழ்வின் வசந்தங்கள் அத்தனையும் உன் காலடியில்
தந்தேன் எனக் கரம் பற்ற முன்னம் உன் கால் பற்றி
வாழ்வின் முன் அகலிகை போல்
தவறு செய்து நீ இருந்தால் ..
முப்பத்து முக்கோடி தேவர் முன்
மண்டபத்து பெரியோர் முன்

அம மிதியை மிதித்து
அரும் தேதி பார்த்து
இத்தினத்தில் இல்லறமாம்
நல்லறம்
புகுவோம்
வா பெண்ணே என அழைப்பான்
 
இப்போ சுட்ட பொன்னாய்
தங்கமாய் ஒளிர்பவள்
நீ தானே
வாழ்க நலமுடன்
----------------ஸ்ரீ ராஜா

Mittwoch, 2. November 2011

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.
செம்பருத்திப்பூ
மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.
ஆவாரம்பூ
காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.
மாம்பூ
மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.
நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.
துளசி இலை
சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.
கொத்தமல்லி தழை
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்
புதினா இலை
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்
கொய்யா இலை
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்