Samstag, 3. September 2011

சித்திரை நிலவே ! காயாதே -எந்தன் வேதனை உனக்கு புரியாது



கவிதையின் தாயே  கற்பனையின்  உருவே
உன் எதிர்காலம்  உனது கையில் -நீ  உணர்வாய்
பசித்தால்  உணவு தன்னை   உன் கையால்
புசித்தே ஆவது  நீ தானே ,
ஊடு மீன்  ஓடட்டும் விட்டுவிடு
வரு மீன்  வரட்டும்  ,புசித்து விடு
இருப்பது சில நாள்   அனுபவிப்பாய்
கருப்பையின் உயிருக்கு உணவீந்த
பரமனும்,          எங்கோ உனக்கென
                                                    எழுதிவைப்பான்
 இக்கரைக்கு   அக்கரை பசுமையடி
அக்கறையாலே  சொல்லுகின்றேன்
பத்தரை மாற்று  பசும் பொன்னே
இத்தரை மீது  எனக்கென்று,  உந்தனை படைத்தான்  ஆண்டவனே
சித்திரை நிலவே ! காயாதே -எந்தன்  வேதனை உனக்கு புரியாது
முத்திரை பதிக்க  ஆசையடி -எனக்கு முகத்திரை நான்  இன்னும் போடவில்லை
நித்திலம் போற்றும்  முத்து -நீ
சேற்றில் மலர்ந்த    கமல தாமரை  யே
ஆதவன் மீது கொண்ட  காதலினால்
கொக்காய் கடும் தவம்  செய்கின்றாய்
பகலில்  மலரும் தாமரை நீ
நானோ  இரவில் மலரும்   அல்லிப்பூ
வட்ட நிலாவை  நிலவதனை
பார்த்து மகிழும் அல்லி நான்
தாமரையும்  அல்லியும் காதல்  கொண்டால்
ஒரு தலைக்காதல் என்றுணர்வாய்
ஆண்டவன்   பூசையில் பூசை கென
  எம்மை  சேர்த்து வைப்பார்
ஒருதட்டில்
அந்த நாள்  வரும் வரைக்கும்
எந்தன்  கண்ணே  கலங்காதே
அப்போது  நாம் பேசிக்கொண்டு
கிடப்போம் ஆண்டவன் காலடியில்

Keine Kommentare:

Kommentar veröffentlichen