மீண்டும் தீண்ட எரிகிறது, தூண்டியவன் யார் தோழி நீ சொல்லு!
ஆண்ட இனங்கள் மறு இனத்தை ,அடிமை செய்வது முறையோ சொல் ,
பூண்ட லட்சியம் ஒன்றுக்காய், பூமிகள் அங்காங்கே எரிகிறதே
மாண்டால் மாந்தர் விடுதலையை ,கேட்க மறப்பரோ வழிவந்தோர்
பாரதி வந்தான் ,பாரதத்தில் -பிர
பாகரன் வந்தான் ,தமிழ் ஈழத்தில்
மண்டலா வந்தது ஆபிரிக்கா
சே குவார் ஓ வந்தது அமெரிக்கா
காஸ்ட்ரோ வந்ததும் அமெரிக்கா
எங்கோ ஒரு மூலையில் -விடுதலையின்
வித்துக்கள் மரமாய் ஆக்குவதும் -பின்பு
பாரிய குண்டு கொண்டு அம மரத்தை
அழித்து ,நிர்மூலம் ஆக்குவதும்
உலக நாடுகளின் வேடிக்கை -இதனை
பூலோக மாந்தர்காள் !,புரிந்திடுவீர்
இன்று லண்டன் மீண்டும் , எரிகிறது
வன்முறை அங்கெ , வெடிக்கிறது
இன பேத முலாம் அதனை, பூசி அங்கு
பிரசங்கம் மீடியா செய்கிறது
நடந்ததும் சாவும் நீர் அறிவீர்
நடப்பது என்ன ? உலகறியும்
உன் வீட்டில் நடந்தால் கொலை என்பார்
தன வீட்டில் நடக்கையில் விபத்தென்பார்!
ஐயகோ ! மானுடா எழுந்திடுவாய்
கேளடா நீதியை துணிந்து நின்று
வான் முறை வன்முறை போர்முறைகள்
அறவே ஒழிக்க வழிசமைப்பாய்!
ஏனடா சுயநலம் மிக்கவனாய்
பூமியில் வாழ்கிறாய் கேடு கெட்டு
வாழும் உயிர்கள் யாவையுமே
ஆண்டவன் படைப்பில் ஓர் இனமே
நாளும் பொழுதும் நர பலிகள் -உலக
நாட்டிலே நடப்பது தர்மமாமோ?
வீட்டிலேயே நடந்தால் வேதனைகள் -தெருக்
கோடியில் நடந்தால் உனக்கில்லையோ?
பூட்டிய கதவுக்குள் கூடு கட்டி -நீ
கிணற்றுத் தவளையாய் வாழ்வது மேன்?
உலக மக்கள் யாவருமே! , புவி மீது பிறந்த மன்னவர்கள்
சாதிகள் நிறங்கள் பேதங்களை -உன்
பகுத்தறிவாலே நீக்கிவிடு,
வாய் பேச முடியா ஜீவன்களும் -ஒரு
தாய் ஈன்ற உலகச் செல்வங்களே
மாயும் போது பட்ட வேதனையை ,
மாண்டவர் மீண்டிங்கு ,வந்து சொல்லுவாரோ ?
ஆதலால் எங்கள் உறவுகாள்சிந்திப்பீர்
ஆத்மார்த்த அன்பால் பூமிதன்னை
அன்பெனும் உறவால் பின்னிக்கொள்வோம்
அன்பெனும் உறவால் பிணைந்து கொள்வோம் (ஸ்ரீ ராஜா )
Keine Kommentare:
Kommentar veröffentlichen