Donnerstag, 8. September 2011
காதலுக்கு நாலு கண்கள்...வண்ணத்துப்பூச்சி போல் உன் மனமும் ..வெறும் கற்பனைகள்
பெண்ணே நில்
ஒரு கணம் சிந்தி
நம் நாலு கண்கள், தினமும் பேசுவதை விடவா ? புதிதாகப் பேசப்போகின்றன
காதலுக்கு நாலு கண்கள் வெறும் கற்பனைகள்
பேசிய ரெண்டு கண்கள்
மவுனித்தால் பேச மடந்தை நீ தான் என்செய் குவையோ ?
ஆசையில் பாதி பக்கம்
வர்ணங்கள் பல கொண்டு வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சி போல் உன் மனமும்
எண்ணங்கள் பல கொண்டு
இறக்கை விரித்துப் பறக்கட்டும்
எண்ணங்கள் எல்லாம் கருவாகி ஒருநாள் காதல் என்னும் முத்துக்கள் உதிக்கட்டும்
வெறும் கண்ணீர் துளிகள் வேண்டாமே !!!!!!!!!!!!!!!!!!!
தரையில் நடக்க மறுக்கும் கால்கள்
...தாள லயத்துடன் தளிர்நடை போடுவது உன் மனதின் உருவகத்தின் கற்பனையே --என் கண்ணே
உள்ளத்தில் உன் இனியவன் அமர்ந்து கொண்டால் ஓடி வரமாட்டாயா ?
தளிர் நடை பயில குழந்தை அல்ல .--நீ
பூத்து குலுங்கும்
செவ்விளநீர் தோட்டமடி
புன்னகையின் அரசியாய்
கோல நடமிடும் மயிலாய் ஒய்யார நடை பயிலும் நேரமடி இப்போ
தேக்கிய கனவுகளை கூச்சமின்றி
இட்டமுடன் பரிமாறும் நேரமடிஉனக்கு
இதுவரை உன்னை ப்பற்றிஎன் விரல்கள் எழுதிய
கவிவரிகள் போதாதென்று நாளை
உன் விழிகள்எழுதப்போகின்றன என
நீ கூறியதை நினைத்து சிந்தித்தேன்
கண்ணே !
மை கொண்ட பேனா எதுக்கு?
உன் மை கொண்ட கண்கள் போதுமடி
உலகக் காவியத்தை
உயிர் ஓவிய மாய் படைப்பதற்கு
உன் விழிகள் வெட்கத்துளிகளை பரிசளிக்க
போகிறதா ??????????????
வெட்கமடி வெட்கம்
கல் போல் மனது
கணக்கில்லாத பொய்களை
காரணமின்றி பேசும்
காதலுக்கு அறம்பேசி
கற்புக்கு விலை பேசி
பாதகமாய் பேசும் கண்களுக்கு ஏதுக்கு பரிசு?
என் பாவாய்
வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழுதான்
பாவைகளின் காதல் கூட எழுதும்
பல வர்ணம் தான்
நாலு கண்கள் பேசும் பாசை காதல் ஓன்று தான்
நாலு பேர் இதை கருத்தில் கொண்டால் -இது தேசிய கீதம் தான்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen