இருட்டு நேரம் குளத்தில் அமர்ந்து
நீ பார்க்கிறாய்
பாவம் நீ
எல்லாம் பேயாய்
உனக்கு தெரிகிறது
மற்றவர்களின் தூண்டுதலால்
உன் மனம் பேதலிக்கிறது
சேற்றில் முளைத்த தாமரை நீ
உனைப்பறிக்க
சேற்றில் இறங்கி முகர்ந்து விட்டு
கால் கழுவி வெளியேறி
இன்னோர் குளத்தில்
அல்லிப்பூ பறிக்கும்
கயவனாடி நான்?
சொல்லுடி ,
,,உன் அனுமதியோடு உன்னை
எடி என்றழைக்கும் பாக்கியவான் நான் அடி
உன் பிறப்பில் நீ என்னை ஒதுக்கிவிடு
கவலைப்படாதே
மருபிறப்பிலாவது உன்னை தீண்டும் தகமைக்காய்
இறைவனிடம் மன்றாடும் யாசகன் நான்
வன்மமும் வக்கிரமமும் சேர்ந்து உன் மனதை
சுற்றி வளைத்து சூறையாடுகிறது
உன் கண் முன் வெண்மையாய் தெரிகிறதே
அது என்ன?
என்றோ ஒரு நாள் அவைகள்
பேய்கள் என்றுணரும் காலம் வரும்
இருட்டில் தெரிவதும் பேய்களல்ல
வெளிச்சத்தில் தெரிவதும்
தேவா அமிர்தமல்ல
ஆலகால விடமாம் கள்ளும் கூட
பால் போல் வெண்மை தான்
கண்ணே உணர்ந்து கொள் என் மனம் வெள்ளை என்ற முலாம் பூச முயலவில்லை
தெளிந்த நீரோடை
இங்கே சீதளத்தேன்ற்றலும்
பாடும் வண்டினமும் ,கொஞ்சும் புள்ளினமும் தானுண்டு
வருவாயா?
இச்சுகத்தை நாமும் அனுபவிக்க ?
Keine Kommentare:
Kommentar veröffentlichen