Sonntag, 11. September 2011
சிப்பி மனதுக்குள் முத்து முத்தாய் நான் சொன்ன வரிகள் தப்பிதமோ?
சிப்பி மனதுக்குள் முத்து முத்தாய்
நான் சொன்ன வரிகள்
தப்பிதமோ?
உப்பரிகையில் வாழ்வதற்கு
செப்பு சிலைக்கு கனகமுலை த்
தேவதைக்கு !!!!!!!!!!!!!!!
உன்
பாறை போன்ற மனதில்
அன்பெனும் உளியால் நான் செதுக்கிய
நினைவுகள் ...........................
யாவும் உடைந்த உளிகளாய்
என் காலடியில்
மனம் ஒன்று நினைக்க
உன் உதடுகள்
சொன்ன வார்த்தைகளை
காதல் என்று நான்
நாயிலும் கடையாய் அலைந்தேனே
எத்தனை போலி வேடங்கள்
நீ போட
உன் புன்னகைக்கும் கண்களையும்
முறுவலிட்ட உதடுகளையும்
கொண்டு நான் கட்டிய தாஜ் மஹால் கள்
கற்பனையாய்
உன் மனக்கிளையிலிருந்து
விவாகரத்துப்பெற்ற இலையாய்
உன்காலடியில்
நொறுங்கி விழுந்து கிடக்கிறது
பார் பெண்ணே
என் கற்பனைகள் உன் காலடியில் இலைகளாய் உதிர்ந்தாலும்
மரமாய் நிக்கும் உனது வேரை பாதுகாக்கும்
காவலனாய் இருக்கிறதே
உணர்ந்து கொள் பெண்ணே
உன் மனமென்னும் பாறையில் இருந்து கசியும் கண்ணீர்
வழிந்தோடட்டும்
அது அருவியாய் ...
குற்றாலமாய் ..
நெளிந்தோடும் ஆறாய்
ஓடட்டும்
அந்த நெளிந்தோடும் ஆற்று படுக்கையின்
அருகிருக்கும் பாறையில்
அமர்ந்து கொண்டு
கவிஞனாய்
இயற்கையினை ரசிப்பேன்
வீசும் தென்றலும் _பாடும் பறவைகளின் கீதமும்
உன் கண்ணீர் ஆறு
ஓடும் அருவியாய்
இசைமீட்க
கல் நெஞ்சக் கவிஞனாய்
நான்.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen