Dienstag, 6. September 2011

பிறவாது இருந்திருப்பேன் பிறந்து விட்டேன் - மலர்க்கொடியே

காதலி  யே  நில்
கவனி  என்னை ..கட்டி அணைக்க துடித்தேன்

களி கொண்டு  எட்டி  உன்னை பற்றி
  என்னவளாய் உடன்சேர்த்து

 முட்டி  முத்தம் தந்து
கொட்டி முழக்கமிடும்   உலகில்
 .எனக்கென உன்னை சேர்த்து
சுகம் பெற  வழி கானத்துடிக்குது  மனது

வாதுக்கு  போகவில்லை  வழிசண்டை  ஏதுமில்லை
கூடி கும்மாளமிடும்  குடிப்பழக்கம்  ஏதுமில்லை 
மாதுக்கு அலையும் ..மதி கேட்ட  எண்ணமில்லை

துறந்தேன் உறவுகளை , கொடியிடையே உன்னை சேர்த்து
மறையோதும் இல்லறத்தை
மகிழும் நாள்  எதிர்பார்த்து
அழியும்  யாக்கை உள்ளே
துடிக்குதே  என் மனது

பிறவாது  இருந்திருப்பேன்
பிறந்து விட்டேன் -  மலர்க்கொடியே
உனக்கெனவே ...பிறந்தேனோ?
கடம்பவன  இளங்குயிலே!!!!!!!!!!!!!!!!!!
அடிசகியே !
 என் வீட்டு  இளவரசி  -என் இனிய பொக்கிசமாய்
அடி மேல் அடி வைத்து
எனை  அணுகும்  நாள்  எந்நாளோ?


நிலா வதனம்  உன்னது 

சுடர் விடும்   உன் கண் ஒளியின்
கதிர் வீச்சின் வெம்மை  பட்டு  கருகு கின்றேன்

வெட்டி விழும் மரம் போல்
நான்  வீழ்ந்து விட்டால்
 ..மரணம் எனக்கூறி ..
..கொட்டி முழக்கமிட்டு  நெஞ்சடித்து
ஒப்பாரி  இசை பாடி
மயானம்  வரை  எட்டி அடி வைத்து
எரித்திடுவார்


என்கண்ணே
ஒரு நிமிடம்  உன் நெஞ்சில்
ஈரமில்லை  என்றறிந்தும் எழுதுகிறேன்

வாழ்வோ  ஒருமுறைதான்
மனதில் எழும்  காதலும்  ஒருமுறைதான்

வாழ்வதோ  வீழ்வதோ
மாள்வதோ  நான்  அறியேன்

கோடி பணமிருந்தும் கோமளமே நீ இன்றி  நான்
வாழும்  வாழ்க்கை  வாழ்வல்ல

பொருள்  இருந்தும்  ஏதிலியாய்  நான்
உனதன்பின்றி வாழ்வதோ ?

மதி கேட்டு  போனேனோ ?
..கிறுக்கு பிடித்து  உன் அன்பை  எதிர் பார்த்து
உருக்குலைந்து நான் மாறிஅழிவதோ?

சுருக்கமாய்  சொல்கின்றேன்
உனதுடலை பிளிந்த்தெடுத்து  அனுபவிக்கும்
 வெறித்தனம் எனக்கில்லை

நான்  சிரிக்கும் போது 
 நீ சிரித்து
தேம்பி  நான் அழுதால் ...
என் தலை கோதி
வாரி எனை அணைத்து 
..நீ  கூறும் மணி வாசகங்கள்
தாய் போல்  எனைப்பேணும் 
தனித்துவங்கள்

நீ அழுதால்   சீராட்டும்  தாய் 
இவன்தான்

மார்பில்  தாலாட்டி
  என்  சேயாய்
 என் தோளில்சாயவைத்து
மணி முத்தம்  தந்து
மகிழ வைப்பேன் ..


வா பெண்ணே  எனை நோக்கி
மெல்ல  அடியெடுத்து 
வா ......................................
 

 

1 Kommentar:

  1. என் வீட்டு இளவரசி -என் இனிய பொக்கிசமாய்
    அடி மேல் அடி வைத்து
    எனை அணுகும் நாள் எந்நாளோ......?

    வாழ்த்துக்கள் ......

    AntwortenLöschen