காந்தமாய் கண்கள் காதலில் பொங்கி
நீளமாய் வெகு நீளமாய் நீண்டு-
உன் உருவினை விழுங்கும்
ஏக்கத்தில் உள்ளம்
நினைவுகள் தடுமாறும்.
கூட்டத்தில் போகும் கூட்டத்தின் நடுவே
தவழும் நிலவே
தாரகையே!!!!!!!!!! உன் நினைவால் வெதும்பி உடலால் உருகும்
ஏழையும் இவன் தான்
பார்க்கவும் அன்பாய் பழகவும்
ஜோடியாய் திரியும் அன்றிலாய்
குளிருக்குள் இதம் சேர்க்கும் யோடியாய்
வானத்தில் பறக்கின்ற
அன்பு வானம் பாடியாய் வாழவே வா
தேடிடும் அன்பும் தேக சுகமும்
கூடலும் ஊடலும்
சுகந்தமாய் அணைப்பும்
பூதலம் மீது புரிந்துனர்வாய்
யோடியா சேர்ந்திட வா
ஆடிடும் அலைகள்
காலடி அணைக்கும் கூதலின்
நடுவே குயிலினம் பாடும்
காக்கையும் கரையும்
பாடிடும் அலையிலே
பள்ளி தான் கொள்ளும்
மாயவன் சோடியாய்
இணைந்திட வா
சேலையின் தலைப்பில்
நெளிந்திடும் முந்தானை
வா என அழைக்குதே பார்
ஆடிடும் சேலையில்
பாதியே விலகியே
காட்டிடும் அழகை
கை கொண்டு மூடுது
உன் கரும்
தோகை அடி
நீ நடந்திடும் போது
அசைந்திடும் பிட்டங்கள்
என்னை நளினம் செய்வது
அறிகுவையோ?
இத்தனை அழகுடன் கூடிய
யாரிந்த தேவதை?
என அறிந்திட ஆவலை
தூண்டிடவே
கை கொண்டு தட்டினேன்
உன்னை
அழைப்பது போல்
இங்கிதம் தெரிந்ததால்
மெல்லெனக் கேட்டேன்
உனக்கு துணையாய்
வருவதற்கே
வாழ்வது நூறு தான்
மாழ்வதோ மண்ணில் தான்
ஆசையாய் கேட்கிறேன்
கமலா லட்சுமியே!!!!!!!!!!
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும்
துணிந்தே என் கரம்பற்று
தாரகையே
பூமியில் மீதிலே தெம்மாங்கு பாடுவோம்
தீந்தமிழ் மொழியிலே காவியம் பாடுவோம்
சீரிய புகழுடன் நீடூழி வாழுவோம்
உற்றவர் உறவினர்
நண்பர்கள் விரோதியர்
அத்தனை உள்ளத்தின்
ஆசியுடன்
அறம் சொல்லும் வழியிலே
நல்லறம் சமைப்போம்
உன் மனம் தன்னை திருடிய
வழிப்போக்கன் நான் எனில்
பயம் தன்னை விடுத்து
என் மார்பினில் சாய்ந்திடு
தளர்ந்திடும் கால்களுக்கு
உறுதியாய் நீ சொல்லு
மன்னவன் வருகின்றான்
பின்னால் என்று
Keine Kommentare:
Kommentar veröffentlichen