Mittwoch, 31. August 2011

இற்றை வரை சொன்னாயா ? நீ மாலை கொண்ட மங்கைஎன? அன்பே ! நானாகத்தான் தேடிவந்தேன் -நலிந்த என் மனதில் ஆறுதலாய்

வாங்குதற்கு கடைசரக்கோ ?????????
காதலடி காதல்!!!!!!!!!!!
வேண்டுதலே இல்லா நினைவுகள்
விபரீதமானவை தான்.
கூடு விட்டு கூடு பாயும்
... வித்தையடி

உனக்கு,!!!!!!!!!!!!!!!!!!!​!!!!!!

அடைந்தால் தேவியே நீ தான்
என்ற பெரு விருப்பு எனக்கு

ஆசை களின் மோசம்
மற்றவைகள் - ஆம்
வெளி வேஷம்

நாடி வந்த எனது
நாடி துடிப்பு
நீ அறியாய்

பூசையின் மலராய்
உன் நினைவு எனக்கு

நீயோ மாலை யில்
பிணைத்த மலரடி

திருமண மாலையில்
பிணைத்த ...............
புது மலராய் வருவாய் என
வாக்குறுதி தந்தேனே

இற்றை வரை சொன்னாயா ?
நீ மாலை கொண்ட மங்கைஎன?
அன்பே !
நானாகத்தான் தேடிவந்தேன் -நலிந்த என் மனதில் ஆறுதலாய்

என் நினைவு மட்டுமா?
என் வாழ்க்கையே நீ தான் என்று
என்னயல்லாவா தொலைத்து விட்டேன்
உன்னிடத்தில்

வாழ்த்திய வாய்க்குள் பாஷாணம்
போசனமாய் எதற்கு நீ தந்தாய்

புரியவில்லை எனக்கின்னும்

மாதரசி உன்னிடம் தாயன்பை எதிர் பார்த்து சேய் போல்
உன்னை தொடர்ந்த பாவியடி

காதலால் உன் மேல் கொண்ட மோகத்தால்
பின்தொடர்ந்து
இப்போ சோகத்தில் வாழும்
ஜீவனடி

தோற்றங்கள் புதிதாய் உனக்குள்
உருவாக
தொலைத்தது நீ
என்னை தான்
ஆனால்
நானோ தொலைந்த
என் மனதின் நினைவுகளுடன்
நன்றியுள்ள நாயாக

என்றும் உன் பின்னே

நித்திலத்தில் நியமங்கள் எப்படியோ

இதயத்தின் ஓசையே  அவள்  ஆனா  போது -என்
இதயத்துடிப்புக்கு  அர்த்தம்  தேடலாமோ

நித்தமும்
இது தான்  என்றால்
நித்திலத்தில்
நியமங்கள்  எப்படியோ

ஆம் தேவதையாய் நீ வந்து -என்னை தேள் வதை எனக் கொட்டினாலும் சொட்ட இனிக்கும் தேன் வதையாய் உன்னை ருசிப்பேனடி நான்

விழியால்  நீர் வழிய  நீ என்னை  உற்றுப்  பார்ப்பதும்
உன் சோகம் புரியாது நான் தவிப்பதும்

கன்றிழந்த பசுவை விட  உன் நினைவால் இதயம்
ரணமாய் வலி எடுப்பதும்

என் உயிரும்  உன் உயிரும் மௌனமாய் சொன்ன கதைகளின்
சோக விளிம்பில் நான்.. திக்கி திணறுவதும்

உன் இமைகளின் சிணுங்களில் தொலைந்து போன என் இதயம்
அவஸ் தைகளால்  திக்கி திணறுவதும்

நீ அறியாததா  என் அன்பே

முதல் நான் பார்த்த  பெண்ணே நீ தானடி
அந்த இடைவெளி நிரப்ப
உன்னை அன்றி யாரடி -எனக்கு

நீயே  எனக்கு இல்லை என்றான பின்பு

உன்னை தழுவும் காற்று என்னை தழுவும் சுகத்தில் வாழுகின்றேன்

நீ சுவாசித்த காற்றின்  சுவாசமே என் மூச்சான  பின்பு
இடையில்  என்னை உரசும் காற்று சொல்லுமடி
என் இதய பரிதவிப்பை

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை

கனவுகளில் நான் வாழ்வதும் -உன்
கனத்த இதயத்தை
அக்கினி பெரு மூச்சால் நீ தணிய விடுவதும்

அந்த அனல் மூச்சில் நான் எரிந்து போவதும்
கண்ணே யாருக்கும் தெரியாத  ரண வலி  தானே

நான்  நடக்க த்தெரியாத காட்டில் நடக்கிறேன்

நீந்த தெரியா விடினும்
நினைவு என்னும் சமுத்திரத்தில் மூச்சுத் திணறுவதும்

காதலின் வெறியில் காமம்  அரவணைப்பில்
நாதமில்ல மணிகளாய்

  ஓசை இன்றி என் மனம் அழுவதும்

 யாருக்கும் தெரியாத ரணவலி தானே

வானவில்லும் வர்ணமும் போல என் ஆசைகள்
சில கணமே  என்றாலும்

அந்த வான வில்லாய் நான்
 வர்ண நிலா உன்னை  தேடி
களைக்கின்றேன்  

பகலில் தோன்றும்வான வில்லாய் நான்
இரவுக்கே சொந்தமான வர்ண நிலவாய் நீ

எப்படி முடியும்  என் காதல்

முதல் நாள் மலரும் மலராய் -நீ வாழ்ந்திட வேண்டும் நீடி

முள்மீது வலியோடு நீ நிற்பதை அறிந்து
நான்தானே  உன் பாதம்  மண்ணில் பாவ விடாது  பூக்களாய்
கிடந்தேன்
பாதங்களைப் பாதுகாக்க
நீயோ பூக்களைப் புறக்கணித்துவிட்டு
...பூக்கூடையின் மேல் பாதம் பதிக்கின்றாய்
அது வெற்றுக்கூடையல்ல
உனக்கான என் அன்பை சுமந்து வந்த
என் இதயம்  என்பதை அறியாதவளா ?நீ

ஆம் தேவதையாய்   நீ வந்து -என்னை
தேள்   வதை  எனக் கொட்டினாலும்

சொட்ட இனிக்கும்  தேன் வதையாய்
உன்னை ருசிப்பேனடி நான்

அந்த இன்ப வேதனையில் உன் நினைவுகளை என் கற்பனையில் சுமந்து நான் மவுனமாய் அழுகின்றேன்

உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காக
 எனக்குள் துடிக்கும் இதயத்துக்கே
 வலி அதிகம்  என்கிறாயா
படிக்கும் போதும்
புசிக்கும்போதும் ..ஏன்  நான் உறங்கும் பொழுதில் கூட
அடியே செல்லம்  ,அடியே செல்லம்
என்றல்லவா  என் இதயம்   விம்மி விம்மி  தணிகிறது

இதை பார்த்து கொண்டிருக்கும்
சுவாசப்பை
வேதனை  தாங்காது    மேல் மூச்சு  கீழ்  மூச்சு  வாங்குகிறது
உனக்கென்ன
உன் காந்தவிழிகள்   பாசுபத அத்திரமாய்
என்னை  திணறடிக்க
அந்த  இன்ப வேதனையில்
உன் நினைவுகளை 
என்  கற்பனையில்  சுமந்து
  நான்   மவுனமாய்  அழுகின்றேன்


Dienstag, 30. August 2011

உன் முகம் தேடி என்றும் ஏக்கத்துடன் உன் யன்னல் ஓரம் நான்

எட்டாத வானத்து   எழில் நிலாவை  கிட்டாது என்று எவன் சொன்னான்?
முட்டாத மலை முகட்டில் நின்று எட்டியும் முடியாது மனிதங்கள்  தவிக்க!!!!!!!!!1
வட்ட நில்லா மண்ணில் கொடி நாட்டி  மன்பதைக்கு பெருமை கொண்டான் -நீல்
ஆம்ஸ்ரோன்கே  .........................
பொதிகை தழுவிய தென்றல் இப்போ சஞ்சீவ ஒலியின்
 இசையையும் அணைத்து வர
வட்ட நிலாவாய் நான்
  வானத்தில்  ஒளியாய்
உன் வீட்டு  மரத்தின்  மேல் நின்று
 சாளரத்தின் ஊடு வந்து
தினம் தினம் உன்னை தழுவி  கொள்வதும்
சீதளத்  தென்றலும்
 என்னுடன்  போட்டியிட்டு
 உன்னை
தீண்டி விளையாடும்

என் ஒழி கீற்றின் அணைப்பில்
 நீ தூங்கி விடுவதை
காண சகிக்காது .
.சினம் கொண்ட தென்றல்
வேகமாய்  உன் சாளரக் கதவுகளை
  வீசி அடிப்பதுவும்

அயர்ந்தெளுந்த  நீயோ
 சாளரக் கதவுகளை மூடிக் கொள்ள
வெளியே நான்
 வேதனைப் படுவதுவும்
இதைக் கண்ட தென்றல்
பெருமிதமாய்
 புன்னகையுடன்
வெளியேறி செல்வதுவும்
  நாளாந்த  வழக்கமன்றோ
ஒரு நாள் ஒளி காட்டி
மறுநாள் இருள் கூட்டும்
 வெண் நிலா  நானல்ல

சுற்றும் பூமியும் அசையும்  கோள்களும்
வண்ண கார் முகிலும்
எனை மறைக்க
உன் முகம்  தேடி
என்றும்  ஏக்கத்துடன்
உன் யன்னல்  ஓரம்
நான்
என்றும்உன் மனதில் மாறா அன்பு தரும்
வெண்ணிலாவாய்............................
நிலவாய்
காய்ந்து கொண்டிருப்பேன்

கொலுசே

ஒ  கொலுசே
நீ போகும் இடம் எல்லாம்
வழி விடு  வழி விடு  என சைகை
செய்கிறாய்
என்னவளின்  கலீர் சிரிப்பும்
 உன் கொலுசொசையும்....அவள் போகும் இடங்களை
காட்டி கொடுக்க-அவள்
சேலை  மடிப்பு  மெதுவாய் .........
 மெதுவாய்  என  தடவி  கொடுக்கிறதே
இன்னுமா    உனக்கு  !!!!!!!!!!!!!!!
புரியவில்லை

Sonntag, 28. August 2011

நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற பரிசுகளும் மெடல்களும் பட்டங்களும் என்னைக் கண்டு பரிகசிப்பது போல் ஓர் உணர்வு

அன்பால் உருகி   அரை உயிராய்
இலவு காத்த கிளியாய் -வெந்து
மன வேதனையில்  வெதும்பி
கனக்கும் மனதுடன்   ...கடந்த கால நினைவுகளுடன் -இன்று
தேம்பி அழும்  சிறு பிள்ளையாய் நான்
எனது பார்வையின் எடை போடலில்
 தவறான என் கணிப்பின்
பின் விளைவு ...
அவள் நினைவில் பொழிந்த பனிமலை
கரைய்ந்து திராவகமாய் ...உள்ளே அரிக்கிறதே
மவுனமாய் என் மனம்   தேற்றலின்றி.... 
தவிப்பதும்   துடிக்கும் இதயம்
....துடிபதேல்லாம்

தாம் தோம்  என்று  உதைப்பது போல்
ஓர் உணர்வு
கடந்த காலத்தில்  என்ன
இப்போதும்  இணையாத தண்டவாளமாய்
என்காதல்
இணைவது போல் தோற்றமன்றி...
இணைந்ததில்லை

இணைந்ததாக  ஒரு கற்பனை..
சுகத்தில்  வாழ்ந்து விட்டேன்
படிக்கும் படிப்பில்  எல்லாம்  பட்டங்களும் பதவிகளும்
என் கால் அடியில் ...பெருமையாய் தவம் கிடக்கின்றன
ஆனால்.................................
காதல் பரீட்சையில்  மட்டும் நான்  தோற்று விட்டேன்

நான் கடந்து வந்த பாதையில்
நான் பெற்ற பரிசுகளும்  மெடல்களும்
பட்டங்களும்
என்னைக் கண்டு   பரிகசிப்பது போல்  ஓர் உணர்வு

எல்லா வற்றுக்கும் உதவியாய் வருவாள்  என எண்ணி
நான் கட்டிய காதல் கோட்டைகள்...இன்று சுனாமியால்  தாக்கப்பட்டது போல் ...


என் கண்ணீரில்  ஒவ்வொன்றாக  கரைய  ஆரம்பிக்கின்றன ..

அடியே ,,,,என் உயிரே
என் தலை கோதி ஆறுதலாய்  என்காதலியாய்
 நீ வருவாயென்று வாழ்ந்தேனே
உன் மடியினில் தலை வைத்து
உன் மார்பில் முகம் புதைத்து அழ முடியாப்
பாவி  ஆகினனே
பொங்கிடும் நெஞ்சின்உணர்வுகள் போலி ஆகினவே
சொல்லவும் வார்த்தை இன்றி
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளிநீர்
கடலாய் உருவெடுத்து  ..சமுத்திரமாய் மாறி
பெரு அலையாய்   உருமாறி
 சூறாவளியாய்
என் உணர்வுகளை அலையாய்
 உயரக் கிளப்பி
அர்த்தமின்றி    மடிகின்றன
நுரைகளாய் நீர்க்குமிழியாய்  ..
என் காதல் ..
.இலவம் பஞ்சுகளாய்  வெடித்து
  பஞ்சாய்   காற்றில்
 அங்கும் இங்கும் அலை கின்றன
நட்புக் காதல் .............
என்னை பரிகசிக்கும் என் மனம்
எத்தனை கோடி பணமிருந்தாலும்
எத்தனை தலைமுறை சொத்து இருந்தாலும்
அத்தனை யும்  நான் பெற்ற கல்வியும் பட்டங்களும்
அவள் காலடியில் போட்டு


ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதை
 என் காதல்
ஆசையுடன்  சொன்னேன் அவள்
 இதயம்  நாடி

தாலி கட்டி வேலி போட்டு
வாழவைக்க  வாழ்ந்து விட
துடித்த என் மனது
துவண்டு   போய் பூக்களற்ற நாராய்
வெறும் தரையில்
பாம்பாய் நெளிய
வாலறுந்த பட்டம்போல் நான் ...
  தோழி

Samstag, 27. August 2011

ஒன்று மட்டும் சொல்கின்றேன் ஆண்டு பல கடந்தும் பல் கூட கழன்ற பின்னும் உன் ஏக்கப் பெரு மூச்சில் உருகி கரைவேனடி காற்றாய் ஒருநாள்

அழையா விருந்தாளியாய்
நான்
நுழையா இதயத்தில் தொலைந்தவன்   அல்லேன் !!!!!!!!!!!!!!!!!
பேசும் கிளியென  நீ இருந்தாய் ,,கொவ்வை இதழ் மலர்ந்து முறுவலித்தாய்!!!!!!!!!
காயாய் நீ இருப்பாய் 
கனியாய் இனித்தாய்
சேயாய் நான் பிறந்தேன் உன்னை பார்த்து
பாசம்   ஏக்கம் ஆனதால்
காதல் பூவும் மலர
 ஆசை பட்டேன் இதயத்தில்  அழகியாய்
நேசமுடன் உன்னை அழைத்தேன் உள்ளக் கமலத் தாமரையில்  மகா
லட்சுமியாகவே  உள் நுழைந்தாய்
வேலை நிமித்தம் வெளியேறி
பாளும் குளிர் நாட்டில்  உக்கி -
பரிதவித்து
வீழும் கண்ணீரும்
 சொட்டும் பனித்துளியும்
 முத்துக்களாய்
  சிறுக சிறுக  அணி சேர்த்து
முத்து மாலை  பல நகையாய்
  ஈட்டிக்கொண்டு
உனைதேடி
 நான் வந்தேன்
என் வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடி நீ வந்து   என்னை நோக்கி
இவர் தான்   உன் மாமா என உன் பிள்ளைகட்கு
உணர்த்தி நின்றாய் -நானும்
வியப்பால் விழி உயர்த்த
இவள்தன மனைவியென்று
உணர்த்தி கொண்டான்  ஒரு
புது மனிதன்
வாடிய மலராய்  வருந்தும்  ஏந்திலையாய்    கூப்பிய  கரங்களுடன்
நீ குமுறி அழுத காட்சி ஈட்டி போல் என்னை கொன்ற போது
தெறித்த விளக்கொளியில் சுவரில் நிழற்படமாய் -உன்
நீட்டிய கழுத்தில் திரு மாங்கல்யம் .........
படம் எடுக்கும் பாம்பாய்  எனை எச்சரிக்க
நான் கொணர்ந்தத முத்து மணி மாலை
மீண்டும் என் ஏக்க பேரு மூச்சில்
மீண்டும் வியர்வையாய் சொட்டும் பனித்துளியாய்
உருகி சொட்ட
நீண்ட பனைமரமாய் நான்
தள்ளாடி  ...........
நடக்கின்றேன்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
...உணர்வுகள் இருந்தும்
பாளும் சமுதாயம்
பார்வையால்  எமை கொல்லும் என அஞ்சி
தொலை தூரம்  என்னை  தொலைத்துக்கொண்டேன்
 உன்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக் கொண்டே
அலையும் மனதுடன் இவன்  வாழ்வு

மீண்டும் தொலையும்
 தொலைவில் நான்

வாழ்க  மண மக்கள்
வாழிய பல்லாண்டு


ஒன்று மட்டும்  சொல்கின்றேன் ஆண்டு பல கடந்தும்
பல்  கூட   கழன்ற பின்னும்  உன் ஏக்கப் பெரு மூச்சில்

உருகி  கரைவேனடி
காற்றாய்  ஒருநாள்

Freitag, 26. August 2011

இணைந்த உறவை கைப்பிடித்து இணைந்து வாழ்ந்தால் காதலே


கரை நாடும் அலைகள்
கரையை தழுவுவது காதலோ ?
இறை தேடும் பறவை போல்  பெண்ணினத்தை -ஆணின்

இரைக்கு உறவாக ச சொன்னால்  திருமணமோ?
திருமணம் கவிதை அல்ல  .....
நினைத்த வரிகளை புகுத்தி -புதுக்க
விதை விதைத்தால்  அது  வாழ்க்கை அல்ல

 இரவுக்கு அவள் நிலவாக...
அந்த நிலவுக்கு அவன் ஒளியாக..........பரந்த விண்ணில்
சுதந்திரமாய் பறக்கும் துடிக்கும்
 காதலே

மேகம் முழங்கும் இடி மின்னல்
நீலவானம்  ..பந்தல் என்று
ஆசை மொழிகள் ............. பேசும்  கிளி கள்  போல்
அனைத்து  மகிழும்
  காதலே

நாலு கண்கள்  பேசி விட்டால்
காதல்  வரும்  என்று
  எவர்  சொன்னார்?

காமம் ததும்பும் காதலும்
ஈர்ப்பால் உணரும் காதலும்

வேறு வேறு  பாதைகள்
போகின்ற  நல்ல  பாம்பு  போன்றன

எந்த  பாம்பு  தீண்டிடினும்
ஏறும்  விடமே ..
உணர்ந்து  கொள்வாய்

உள்ளம் இரண்டும் இணைந்து
உணர்வோடு உயிர்கலந்து
கூடி குலவி தாம் மகிழ்ந்து
குவலய வளங்கள் பெருகிடவே

இணைந்து  கொள்ளும்  திருமணங்கள்
சொர்க்கம் என்னும்  மனங்களில்
குதூகலங்கள்  சேர்த்தனவா?


குமுறி அளவும் வைத்தனவா?

ஊடல்  கூடி உருக்குலைத்து
கூடி வாழ்கின்ற  பெரியவர்கள்

சொன்னவை எல்லாம்   வெறும் கதையோ ?
நடப்பவை  எல்லாம்  விதியென்று

இணைந்த  உறவை கைப்பிடித்து
இணைந்து  வாழ்ந்தால்  காதலே

பருவக் கிளர்ச்சியின்  உந்துதலில்
பந்தாடும்  உறவை பந்து  என்று

 ஏமாறாமல்  வாழ்ந்து விடு
 அதுவே  நல அறம்  என்ற

திரு மனம்  என்றுணர்வாய்
திருமணம் என்று நீயுணர்வாய்
பிரியமா னவளே  பிரிவு
என்பதை  அன்பவிக்கிறாயா?
அப்போது தான்
 காதல் என்ன என்பது
  உனக்கு  புரியும்

ஒளியின் பிரிவில் இருளின்  ஜனனம்
இருளின்  பிரிவில்  ஒளியின்  ஜனனம்
சூ லும்  விந்தும்  காதலித்து

  ஒன்றி  பிரிவது
  கருவின்  ஜனனம் !!!!!!!!
என்னால்  எப்படி  ஊனமானாய் ?

என் உடல் பொருள் ஆவி
  அத்தனையும்  உனக்கென்று

  என் ஊனை  உருக்கி
 உனக்கென  ஈந்தவன் யான்

உணர்வுகளை அடக்கி  உனக்குள்  சிலையாக்கி
உனக்கு  உறவு  என்று  -ஒரு ஜனனத்தை தந்தவன் யான் -

அது உன் கருவறை பிரிந்து
அழகென்னும்  சிலையாய்-ஜனனித்து
  உன் கைகளில் தவழ்கிறதே  
அது என்ன ???????????????என் உணர்வின் பிரிவு  அல்லவா ?

காதல் கனவு  உணர்வு  என்று
 இதயம் கனத்து போனதால்

நீ தான் என் உலகமென்று
 ஏம்மாந்து

- கண்ணின் பிரிவாய்- உனக்கு
 என் கண்ணீர் காணிக்கை

கனிவான உள்ளம்   கனத்து போனதா?

நீ
இன்னும்  நினைவுகளுடன்  போராடுகிறாய்

பிரிவு கொடு  உன் சிந்தைக்கு

நடப்பவை நல்லவாய் அமையட்டும்

காண்பதும்  கேட்பதும்  பிரிவு அல்ல
 பிரிவால் கிடைப்பது
புதியதோர்  ஜனனம்
அன்பே  சொல் உன் ஆறறிவின் பிரிவே  பகுத்தறிவு

எழுவர்ணம் கலந்த காதல்
  ஆகாயமெனும் காதலியை
அன்போடு  அணைப்பது
தோற்ரமடி  தோற்ரமடி
மனதின்  பிரேமை அடி
ஒளியின் பிரிவால் வர்ண நிறங்கள்
 பிரிவின் ஜனனம்

பிரிவு என்னும் பதமே
-உன்மனதின்  புதிய  தோர்
  ஜனனமடி

Donnerstag, 25. August 2011

இப்போ பூவாகி உனக்காக காத்திருக்கிறேன் வா தோழி என்னை முகர்ந்து கொள் அதுவே நீ தரும் முத்தமாக இனிக்கட்டும் எனக்கு

ஓஓஓஓஓஓஓ பெண்ணே
உன் இதயத்தில் நான்
  பயணம் செய்யும்போது
கரியமில வாயு  என்று  என்னை
 உன்   நுரை ஈரல்  வெளியேற்றியதை
  நீ  அறியாய் .........
வெளியேறிய நான் கரியமில வாயுவாக  தரையை  தொட்ட போது,
புற்கள்  கண்ணீரை(பனித்துளிகள்)  தலையில் தாங்கி
என்னை  வரவேற்றன
மரங்களின் சுவாசம்  என்னை தன சுவாசமாக என்னை
ஆகர்ஷிக்க......................மரங்களின் பசுமைக்கு 
காரண மாகி இன்று  பூவாக மலர்ந்திருக்கிறேன்
ஏன் தெரியுமா??????????
உன் தலையை  அலங்கரிக்க .........


உன்  மனம் என்னும் வீதியில்
குறுந்தூரப் பயணியாய்நான் வந்தேனா ?
இல்லையே  உன்னை தொடர்ந்தேன்
என்பதே  உண்மை
சேரும் இடம் வருமுன்னே
 மாற்றிவிட்டாய்என்னை நீ
இப்போ பூவாகி  உனக்காக காத்திருக்கிறேன்
வா தோழி  என்னை  முகர்ந்து கொள்
அதுவே  நீ தரும்  முத்தமாக  இனிக்கட்டும்  எனக்கு

இது தானா ? இது தானா ? எனக்காக நீ வைத்திருக்கும் பதில்

அன்பே  காதலியாய்  உன்னை  எனது
இருதயத்தில் இருத்தி
கண்ணீர் முத்துக்களால்
உனக்கு மாலை
கோர்த்துக்கொண்டிருக்கின்றேன்

தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய் உன்  மனதில் நானும்
என் மனதில் நீயும்  குடியேறிக்கொண்டோம்
நம் உணர்வுகளைப்
பரிமாறு என்று
காலத்தின் கோலமும் ஞா லத்தின் நிகழ்வுகளும்
நாங்கள் தண்டவாளம் ஆனோம்
பிரிக்கும் கட்டைகளாய்  நம் மக்கள் -ஏதொ
நாம் புணர்ந்து விட்டோம்
என்று  தான் நினைப்பு
புரிந்து கொண்டோம்
 எம்மை நாம்
வட்டக் கருவிழியும்  வண்ண மதி முகமும்
இட்டமுடன்
 என் நினைவில்
கட்டி அணைக்க ஆசை கொண்டேன்
அவ்வளவா??????????????
 நம் வாழ்க்கை
சமாதானப்புறாக்கள் 
கூட்டுக்குள்ளே  தவிக்கின்றன

கடிநாய்களோ
 குதறி விடும் நோக்கில்
 வாலை  ஆட்டுகின்றன
நன்றியுள்ளவயாம்
 சீ போ ............
அவளோ உதிர்ந்த பூக்கள் மலரில்லை என்கிறாள்
கண்ணே  உன் இதயம் தொட்டு சொல் கறந்த பால்  முலைக்கேறாது
அது போல் உன் மேல் கொண்ட காதலும்
வேறு ஒரு பொண்ணை நாடாது
தொலைவில் உள்ளவனே
உன்னை தொலைத்துவிட நினைத்து
தினமும் தொலைந்துபோகிறேன்
நானே உன்னுள்..................
என்றாயே
இப்போது  என்னை  தொலைப்பது  யார்?
உன்னை நீ மிக அருகில் பார்த்த
என் கண்கள் இரண்டும்
உன்னை மறக்க முடியாது தேடி த்தேடித்
தொலைகிறதே   வெகு  தூரத்தை
பதில் சொல்லிவிடு
இது   தானா ?  இது  தானா ?
எனக்காக  நீ  வைத்திருக்கும்  பதில்

இன்னும் ஏன் அடி மவுனம் ?????????? எதற்க்காக ?

நேற்று நீ சொன்ன ஆறுதல்
நினைவுகளாய் ,,,,
தேருதலாய்...
என்னையும் உன்னையும்  சுற்றும்
ஒளி வட்டங்களாய்  விம்பங்களாய்  ...

உள்ளத்தில் உள்ள   துடிப்பின்  ஓசையை
வீழும் அருவியின்  மேல் எழும்
  தூவானமாய் ...

என்னை  குளிர வைத்தன

உன் அன்பில் கட்டுண்ட
அடிமை நான்

என் உள்ளத்தின்  உணர்வுகளை  -காகிதத்தில்
கவிதையாய் வரிந்தேன்

உனக்கு  அனுப்ப  முன்பு
 எனக்கு  முன்னே
எ ன் காகிதம்  அழுதது

என் கண்ணோரம் வந்த
கண்ணீர் -தானும் ........
காதலால்  அழுகிறது !!!

விண் ஓரம்
 போய் விடுவேன்...
ஆனால் ...............
  உன் விரல் பற்றி -கரம் காக்க
 நான் இல்லை என்றால்
 தவிப்பாயே  என நிதம் எண்ணி
நாட்களை எண்ணுகின்றேன்

விபத்தால்   உடல் எல்லாம் கட்டு

ரண வலியின்  வேதனையை
உன் நினைவு  மறைக்கிறது  கண்ணே

உனக்காகத்துடிக்கும்
  என் இதயம் சொல்கிறது

இங்கே பெய்யும் மழைக்கு -எனக்காய்
அங்கு நீ குடை பிடிப்பதை ..............

அன்பே காதல்  விதை போட்டாய்
வளர்ந்து செடியாகி
என் முன்  நிக்கிறது

கத்தும் கடல் கடந்து
இங்கே நான்
அச்செடிக்கு  கண்ணீரால்
நீர் ஊற்றி ...............
வளர்த்தேனடி வளர்க்கிறேனடி ..

 இன்னும் ஏன் அடி மவுனம் ??????????
எதற்க்காக ?

சொல்லிவிடு
செத்து விடு என்று

உனக்காக ..........
அதனையும்  செய்வேன் ..
சொல்லிவிடு
  அதையேனும் உன் வாயால் !!!!!!!!!!!!!


தூக்கு மரத்தின் -கயிற்றின்
மரணத் தருவாயில் ..
சிரித்த  படி  கேட்கின்றேன்
என் கடைசி ............
ஆசை என்னவென்று

நான் சாகும் போது கூட
உன் மடியில்
தூங்க வேண்டும்
தருவாயா  தருவாயா தருவாயாஆஆஆஆஆ ??????????

உலகின் இயற்க்கை

சித்தாந்தம்  தெரியாதவனின்
தோல்வி சிந்திக்கத் தக்கது
ஆனால்

சிந்திக்கத்தெரிந்த அனைவரும்
  சித்தாந்திகள்  அல்ல
முத்தி  நெறி  அறியாத  மூர்க்கராய்
வித்தைகளை அறியாது    வெட்கி -தாம் அழிந்து
சாகும் பிணங்களாய்  வாழ்ந்து
தண்டி பிழைக்கும்  -மனிதங்கள்
இசெகத்தில்   பாரமாய் வாழ்நது
வைக்கோல் போரின்  நாயதாய்
முன்னேறும் வழிகளில்
   நமக்குள்  முட்டுக்கட்டை
ஆதலால்

வாழ்வில் இடும்பையும்  இன்பமும்
உறவில்
 பிரிவும் புணர்வும்
  இயற்கையின்  பகலும் இரவும்  என உணர்வாய்
அங்கனம்  தோல்வியும்  வெற்றியும் அமையக் காணல்
உலகின் இயற்க்கை என  உணர்வாய்
நண்பனே

அடிக்கும் காற்றில் அலையும் சருகாய் அங்கேயும் இங்கேயும் அலைவதும் காதலோ?????????

பூ வாயும்  முள்ளாயும் வாழ்வது
சோதரமே
பூவும் நறுமணமும் நகமும் சதையும் -வாழ்வது   எல்லாம்
தாம் பதிய  வாழ்வில்   இனிது ..  பெண்ணே


அடிக்கும் காற்றில்   அலையும் சருகாய்
அங்கேயும்  இங்கேயும் அலைவதும்   காதலோ?????????
  இடிக்கும் துயரிலும்
  இன்புறும் வேளையிலும் ......
துடிக்குமே  மனது .!!!!!!!!!!!!!!!.அது  தான்  காதல்

படிக்கும்  தேவாரம்    ---நீ
இடிப்பதோ  சிவன்  கோவில் ?

நடிக்கும்  நாடகம் வாழ்க்கை யாமோ ?
புடிக்கும்  மனிதர்  எல்லாம்   காதலரோ ?

படுக்கை அறையில்  கசங்கும்  பூவும்
ஓதும் மந்திரத்தை  உள்வாங்கி
  இறை அவனின்
பாதம் தழுவும் பூக்களும்
மாலையின்  நாரில்   ஒவ்வொன்ற்றாய்
 வரிந்து கட்டும் சிறு பூவும்
தூவும்  பூக்களில்   கீழ்  விழுந்து
  காலில்  மிதி படும்
ஒரு சிலவும் ...
ஆகுதி நெருப்பில் ஈசனுக்காய்
  அள்ளி வீசிடும் மலர்ப்பூவும்
கொண்ட விதியின்    வசமே 
என்பதனை
உணர்வாய் உந்தன்
 மனக் கண்ணில் .
ஆதலினால்    பெண்ணே
 மலர்களையே
பெண்ணுக்கு  மாந்தர்
  உவமை  கண்டார்
முள்ளாய்  இருந்து    குத்தாமல்
என் உடலின்   குருதியில்
கலந்திடுவாய்
என் உணர்வின் ஊற்றாய்
மலர்ந்து  நிற்பாய்
முள்ளாய்  நானும் 
காவல் நின்று
முழு மதியாய் 
உன்னை  ஒளிர வைப்பேன்

உனக்காக காத்திருக்கும் நேரங்களில் காத்திருப்பதை விட சாவதே மேல்

உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
என்ற கவிதைவரிகளில் பதிலும்
இருக்கிறது ....மேலும் சொல்கின்றேன் கேளுங்கள் நீயும் நிலவும்
ஒன்று தான்
நீ
நினைத்த நேரத்தில்
வருவதும் போவதுமாய்
இருக்கிறாய்.
நான் மட்டும்
பைத்தியக்காரியாய்
பகலிரவாய்ப்
பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்.  என்ற வரிகளும் எதோ  சொல்கிறது  இல்லையா ???????பாசம் வைத்தால் இப்படித்தான்
பகலிரவு பாராமல்
 மனம் வாடும். இல்லையா ?
நாளை வருவேன்
காத்திரு என்றாய்!

நாளை நாளை என்று
நாளைகள் பல கழிந்து
நூலிடை தேய்ந்தும்…
இன்றும்
நீ வரும்
அந்த நாளைக்காய்
காத்திருக்கலாமே

ஏன் கண்ணகி காத்திருக்கலையா ?  
என்னை கேட்டால் நான் இப்படித்தான் பதில்  சொல்வேன்
என்றாவது ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவோம் என்ற நம்பிக்கையில்
என் அறையில் ரகசியமாய் பதுக்கப்படுகின்றன  ....
உனக்காக நான் வாங்கிய பரிசு பொருட்களும்
என் இதய அறையில் உனக்காக நான் சேமித்த
காதலும்..................................தரைவானில்
தவிழ்ந்து வரும் நிலவே
தாமதித்து நிவர வேண்டும்
தரையில் இட்ட மீனாய்
தவிப்புடன் நானிருக்க வேண்டும்என்று காத்திருப்பவன் சொன்னால் ஏற்க்கும்மா சமுதாயம்?????????
என் புத்தகம் முழுவதும்
உனக்கான கவிதைகள்...
என் இதழ்கள் முழுவதும்
உனக்கு அளிப்பதர்க்கான
முத்தங்கள்.
ஒவ்வொரு இரவிலும்,
உன்னைப்பற்றிய ஏக்கங்கள்..
உன்னை சந்திக்கும்
முதல் நொடிக்காய்,
காத்திருக்கும் என் காலங்கள்.
எப்போது வந்துசேர்வாய்...
என் காதலியே..........என்று  எங்கும்  ஆண் மனம் காதலில் அங்கு
துடிக்கிறது

"நிச்சயம்
காதலிக்கும் மனதுக்கு கூட
கால்வலிக்கும் வரை - நான்
இங்கே காத்திருப்பேன்"... என்கின்றான்
அவன்

வீண் கோபம் என்னோடு ஏன் அன்பே
உனக்காக நான் வரையும் மடலிது


என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து
கலகம் செய்த நாட்கள் எத்தனை
என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி
இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை
என் மொனத் தவம் கலைக்க
கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை
இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை
அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே
என்றோ தந்து விட்டேனே
இதயராணி என்னும் உரிமையை

என் மானசீகக் காதலியாகி
மனத்தின் அந்தரங்க அறைகளில்
எனக்காக நீ அரங்கேற்றிய பரதங்கள் எத்தனை
உந்தன் கொலுசுகள் மீட்டும்
ஜல் ஜல் தாளங்களை
என் ஆழ்ந்த மன அந்தரங்கத்தில்
கேட்கும் நாதங்களாக்கியவளே

புரியாதவள் போல நடிக்கின்றாய்
திமிர் பிடித்தவன் நான் என்கின்றாய்
என் உள்ளத்து அன்பை வெறும் நடிபென்கின்றாய்
போதும் நிறுத்திக் கொள் உன் கோபங்களை
தொடுவான எல்லையில் காத்திருக்கின்றேன்
நீ எனக்குள் தொலைத்த
உன் கொலுசுகளின் துணையோடு


நம் காதலின் புதுப்பாடம் – காத்திருப்பு
அதிகாலை வரப்போகும் ஆதவனுக்காக
நீண்ட இரவுகளில் கண்ணயராது காத்திருந்து
மொட்டு விரியுமாம் கமலம்
நாம் மீண்டும் சந்திக்கும் நாட்களுக்காக
காத்திரு உன் கோபங்களை விடுத்து அன்று
காதலெனும் கமலம் நமக்குள் மொட்டவிழட்டும்

என்று காதலிப்பவன் சொல்கின்றான்
காதலி ஒரு முறையாவது
அன்பே நான் உன்னை காதலிக்கின்றேன்
என்று சொல்லிவிடுவாளா ?
நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே  உங்களின் பதில் களை...
என்ன நீங்கள் காதல் பற்றி தெரியாதவர்களா என்ன ???????

Mittwoch, 24. August 2011

அட்ட சித்தி ஐஸ்வரியம்

கண்ணே 
அட்ட சித்தி ஐஸ்வரியம்  ஆன பல பேறு பெற்று
இப்புவியில் நீடூழி  நீண்ட நாள்
நீங்காத சந்தோசம்    நிறைவாய் பெற்று
இட்டமுடன் வாழ்வை  இனிது

கட்டழகன் காளை கைப்பிடித்து -உன்
அன்பெனும் பெட்டகத்தை திறந்து
சொத்தாக பல பிள்ளை   கள் பெற்று
மட்டில்லா மகிழ்ச்சி பொங்க
சீருடன்  வாழ் வாய் சிறந்து 

அயர்ந்து தூங்கையில் கூட ...அகலிகையாய் இரு



பிரியாவிடைக்கு  பிரிவைகொடுக்காதே
என் பிரிய மானவளே !!!!!!!

நாளைய பொழுதுகள்  எல்லாம் ..
இன்றைய பொழுதின் அத்தி வாரத்தில் தான் கண்ணே

பிரமிக்கும்
பிரமிட்டுக்காளாய்  எழும்ம்புகின்றன

அவை  கோபுரமாவதும் குப்பை மேடாவதும்
 எண்ணங்களை தாங்கி நிற்கும் ..எழுத்துக் களால் தானே
பிரம்மனவன்  பேனாவை   சொன்னேன்
நாளை என்பது நம்பிக்கை  கண்ணே
யுகங்கள் அல்ல ....

அயர்ந்து தூங்கையில் கூட

...அகலிகையாய் இரு
முதலைகள் வாழும்  அகழிகளாய்.....
அல்ல அல்ல

இது என்ன வாழ்க்கை........ அடி!!!!!!! என் செல்லமே .............பதிலாய் வா வெறும் கனவாய் கலையாதே

வானமானஉன் மனதில்
வந்து  பெளர்ணமி....நீந்தி     பின்பு
அட்டமியாய்??????????????,நவமியாய்
தேய்ந்து  அமாவாசையாய்
விரிந்து  சுருங்கி ..உன் இருதயமாய் நான்   துடிப்பதும்
உனக்குள் ஓடும் குருதியாய்  மூச்சுக் காற்றாய் நான் குழைந்து நெளிவதும்
உருண்டு திரளும் மேகமாய்
உன் நினைவு க்குள் வரும் கனவுகளாய் நான் அழுவதும் கூக்குரல் இடுவதும் ......உனக்கே தெரியாமல்
நான் தென்றலாய் அணைப்பதும்
அந்த அணைப்பின் கிளர்ச்சியில்


விலக்கிச் செல்ல மனமும் இன்றி
உன் நினைவை நான்  உணர்ச்சி எனும் போதையில்
தீண்டுவதும்
அந்த எண்ணக் களிப்பில்
காலங்கள் கரைந்தோடி விடும் என்று அஞ்சும் உன் மனம்
போர்வைக்குள் முடங்குவதும்

விடையில்லாக் கேள்விகள்
தினமும்உனக்குள்
விண்ணைத்தொடும் அளவுக்கு விழுவதும் எழுவதும்
கரை காணா ஓடம்போல்
உன் உள்ளம் தவிப்பதும்
உனக்கு மட்டுமல்ல எனக்கும் புரியும்


தொலைவில் உள்லவனை
 தொலைத்துவிட
நினைத்து நீயே -கனவாய்
தொலைந்துபோவதும்
இது என்ன வாழ்க்கை........ அடி!!!!!!!
என் செல்லமே .............பதிலாய்  வா
வெறும் கனவாய் கலையாதே  siriraja

வீசிடும் தென்றலே ..இவள் இசையோ ?


உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு

உன்  மெய்யா (உடம்பு)???  அன்றேல்  உள்  மெய்யா ?
உன் வருங்காலம் என்றும் வசந்தகாலம் தான் -என்கின்றாயே
நீ இல்லாது   ஒரு வசந்த காலம் ????
எனக்கு ....................?????

ஹ ஹ ஹ   ........ஆ ..ஆ ஆ ஆ
என்ன கொட்டாவி விடிறேன் என்று பார்கிறாயா????????
இல்லையடி ..என் கொட்டில் இருந்து  ஆவி ( உயிர் ) போகுதடி

நான்  காதல் தானே தனா!!!!!!!!!!!!!விதைத்தேன்
கார்  இருள்  கவ்வலாமோ  என் வாழ்வில் ..

நேசத்தின் நேசமாய் வந்தவளே -நீ பூமகளோ
இல்லை புவி மகளோ .-எனக்காய் பூமியில் வந்துதித்த தாரகையோ ?

யார் இவள்   யார் இவள்
 தேவதையோ ?

வீசிடும் தென்றலே ..இவள் இசையோ ?-எந்தன்
இந்திரலோகத்து  ஊர்வசியோ ?
பாடிடும் குயில்கள்  இவள் குரலை -கேட்டு
பரவசமாகும்  நிதம் நிதமே
-ஆடிடும் மயில் போல் என் மனமோ
களிமிகக் கொண்டதே அவள் நினைவால் ............
சத்தமின்றி முத்தத்தை   நித்தம்
இடுகின்றேன்  உன்படத்தில்
எச்சில் பட்டு    அப்படத்தில் ஓட்டை-வந்தது
விதி யாமோ
அருகிடட்டும் துன்பங்கள்!உருகிடட்டும் கல்மனங்கள்!

பெருகிடட்டும் நல்மனங்கள் !பருகிடட்டும் இன்பங்கள்
என்று கவி தன்னில் புகழ்ந்தால்
 வருமோடி இன்பம் ........
சொல்லு     !!!!!!!!       வருமோடி ?உனக்கான வலிகளுக்கு நீயே உரமூட்டாதே
உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு
உன் வருங்காலம் என்றும் என்றும்
 வசந்தகாலம் தானடி !!

அன்பு என்றும் நெஞ்சில்  கொண்டால் -கல்
பாறையிலும்  பூ வளரும் இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா -   உன்னை

என் குல விளக்காக நான்  மாற்றி வழி சமைக்க வா
வருவாயா ?????????

முகம் தெரியாத அன்பே

முகம் தெரியாத அன்பே
கனவே காதலாய் ...பொய்யே  உருவமாய்
நினைவே கொடூரமாய் .தினமும்
சுடுகின்றாய்
 உன்னரிய அன்புக்காய்  ஏங்கிய  அவன் குற்றமா
உன்மேல் கொண்ட காதல்
மூலமும் நடுவும் ஈறும் இல்லாதது
காலமும் கணக்கும்  நீ தாண்டி
காதல் ஒப்பந்தத்தின் கையெழுத்தே நீ தாண்டி
அறம் தனை நிறுத்தி வேத அருளினை  -அன்பென உன்மேல் பொலிந்து
நீதி திறம் தெளிந்து  அமரர் மூவர் தேவர் ..
என பலகண்டு   தானே
ஒப்பந்தம் ...
இதில்
நான் என்ன தொல்லை தரும்  வானரமா?  அன்றி வானவனா ?
உன் அன்பை கன்னமிட்ட  வாமனனா ?
அன்பே ! நீ பேசும் மொழி -இப்போ
புரியலையே ..நான் என்ன முற்றும் துறந்த முனிவனாடி ?
பித்தன் பித்தனடி ..காதலால்  உடம்பு உருகும் பாவியடி
யான் எனது என்ற எண்ணம்  நீங்கி
  உன்னோடு  ஒன்றுடன் ஒன்றி
உருவம் அருவமும் சேர்ந்து
அர்த்த நாரி  வடிவமானவன்
அதில் நம் இருவர் சார்பிலும்
...நீயே கையொப்பமும் இட்டுஒன்றானேன்

இப்போ பிரிவெதர்க்கு?
மேவாதவர் இல்லை ..மேவின்ரும் இல்லை வெளியோடு இருள் இல்லை
மேல் கீழ் இல்லை மூவாதமை இல்லை ,மூத்தமையும் இல்லை ,முதலிடையோடு
ஈறும் இல்லை  முன்னோடு பின்னில்லை
கண்ணே  என்ன சொன்னாய்
உனக்குள் ஒருமுறை
 

கலைந்து செல்லும் மேகமே

கலைந்து செல்லும்  மேகமே -உன்
 கனவுகள்  எப்படிக் கலையும்
நீ தான்  மூலைக்கு  மூலை நின்று
மழை என்னும் கண்ணீர் வடிக்கின்றாயே
கனவே..................
உன்வேதனைக் கண்ணீரிலும்
 குளிர்ச்சி அடைகிறதே மானுடங்கள்
அது தான்  உன் வெற்றி

உன்னை நான் வெயிலாய்
சுட்டு வதக்கி ,மேகமாய்  ஆக்கி கருக்கட்டி
கனகமழை  பொழிய வைத்தேனே
இருந்தும் ..என்னை -ஏன்
வார்த்தை அம்புகளால் தைக்கும் முட்களாய்
இருக்கின்றாய்
ஒரு முறை ஒருமுறை ஏனும்
என் இதய ரோஜாவாக இரு

விலகும்போது நெருங்கும் காதல்

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ?
வேறு வேறாக நினைவு போகையில்
...காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்......
அம்மா வின் வயிற்றிலும்
அந்தியின் வேளையில் எந்தையின் மார்பிலும்
செவ்வானக் கருக்கலில் காதலர் -அர
வணைப்பிலும்......உறவுகள் மெருகேறும்
ஆனால் என் நட்பே .......
...நீயும் நானும் எம் நட்பை சுமையாகக் கொண்டோமா ?
வெயில் எனும் பணக்காரன் உன்னை விட்டு நீங்கிவிடில்-உறவு என்று
நிடல் கூட உன்னை தொடருமோ .....?
என் நினைவுகள் உன்னை விட்டு ....
என்றும் பிரியாது-தேடி
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்

மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீயே நட்பாக வேண்டும்
உறவாகவா ..............................?
அல்ல அல்ல
என் உயிர் நட்பாக

புரியாத நட்புகள் இருந்தும் பயனுண்டோ ?-எம்
புரிந்த நட்புக்கு தூரம் பெரிதல்ல -உன்
வெற்றியின் விளிம்பில் கைதட்டும் பல விரல்கள் -நீ
தோற்றுவிட்டால் அசைவின்றி நின்றுவிடும்

சுற்றி அடிக்கும் காற்றும்
சூழ்ந்து நின்று உறவுகளும் -வருமோ
நீ விழுந்தால் ...
தூக்கிவிட ......???????????????
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
என்றும் எதற்கும் அஞ்சாதே -என் நட்பே
நீ விழமுன் தூக்கி விட
என் நட்பு நிழல் போல் -உன்னை
பின்தொடரும்

அன்று நீ விட்ட பெரு மூச்சு என்னை இங்கு வெயிலாகக் -சுடுகிறது

அன்று நீ விட்ட பெரு மூச்சு
என்னை இங்கு  வெயிலாகக்  -சுடுகிறது
அனலாய் அல்ல   அணு உலையாய் -கண்ணே
கன்று தேடி அலையும்    -தாய்ப் பசுபோல்
இன்றல்ல ..என் இதயம் துடிக்கும் வரை -என் சென் பகமே
உன்னை விரும்பி  நான் பட்ட துயர்  எல்லாம் போதுமடி
முன்னை  தொடர்போ  நீ  எனக்கு  -கண்ணே
கண்ணின் மணி  ஒளியே .எண்ணுக கணக்கின்றி  என் இதயம் துடிக்குதே
வண்ண நிலவே .வானத்து   வெண் நிலவே
என்ன வடி  என் கோலம் ,,,...
உன் நினைவால்  நான் பட்ட துயர்  போதுமடி
ஏதேனும்  ஒரு வார்த்தை   சொல்லாயோ --
வெட்கமோ   உனக்கு இன்னும் -என்
பெட்டகமே   கட்டுக் கடங்கா என் ஆசை  கரை புரண்டு  ஓடுதடி
செத்து பிழைத்தேன் என் கண்ணே
என்னை பெத்தவள் போல்  துடிக்காயோ
என நான் ஏங்கி நின்ற வேளை
வந்த ஒரு செய்தியொன்று
நிறுத்தியது  என்னுயிரை
உண்மையா இது
சொல்லு  கண்ணே
நீ என்னை காதலிக்கின்றாயாம்
என் உயிரை காப்பாற்ற  யார்  செய்த
 பரப்புரையோ
உண்மை என்றால்   என்னை  -நீ
அணைத்துக் கொள்  ...........
இல்லை என்றால் !!!!!!!!!!!!!!!!
 என்னை  அணுகிக்  கொல்!!!!!!!!!!!!!!!
நிதம் நிதம் என்னை கொல்லாதே-உன் பெயர்
நித்தம்  துதி பாடும்   என்னுயிரை கொன்று விட
ஒரு  தோட்டா  போதுமடி -ஒரே
ஒரு தோடடா போதுமடி

கண்ணாடிக்கு கூட உனக்குள் நான் மறைந்து இருப்பது தெரிந்து விட்டதே x tray விட

கண்ணாடிக்கு கூட உனக்குள் நான் மறைந்து இருப்பது தெரிந்து விட்டதே
x tray விட உன் கண்கள்
மிகவும் கூர்மையானவை பெண்ணே
கண்ணாடியில் தெரியும் என் உருவம்
உனது கண்களின் கூர்மைக்கு சான்று கண்ணே
...பார்க்க முயலும் வேளைகளில்
எனை காட்டி ரசித்துக் கொண்டே
உன்னை மற்ந்துஉன் உதடுகள்
...உனக்கு அளிக்கும் ஒத்தடங்களை
தினமும் எண்ணி வைத்துக் கொள்
அது என் இருதயம் துடிக்கும் கணக்கை விட அதிகமாகும்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...
காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணால காதுக்குள் பாட்டுபாடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி
நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்

பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும் ................
சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன் காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்

கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சொதுக்குள்ளே இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் பாட்டுக்கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம் ............

Dienstag, 23. August 2011

நீ விழுந்தால் ... தூக்கிவிட ......???????????????

அம்மா வின் வயிற்றிலும்
அந்தியின் வேளையில் எந்தையின் மார்பிலும்
செவ்வானக் கருக்கலில் காதலர் -அர
வணைப்பிலும்......உறவுகள் மெருகேறும்
ஆனால் என் நட்பே .......
...நீயும் நானும் எம் நட்பை சுமையாகக் கொண்டோமா ?
வெயில் எனும் பணக்காரன் உன்னை விட்டு நீங்கிவிடில்-உறவு என்று
நிடல் கூட உன்னை தொடருமோ .....?
என் நினைவுகள் உன்னை விட்டு ....
என்றும் பிரியாது-தேடி
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்

மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீயே நட்பாக வேண்டும்
உறவாகவா ..............................?
அல்ல அல்ல
என் உயிர் நட்பாக

புரியாத நட்புகள் இருந்தும் பயனுண்டோ ?-எம்
புரிந்த நட்புக்கு தூரம் பெரிதல்ல -உன்
வெற்றியின் விளிம்பில் கைதட்டும் பல விரல்கள் -நீ
தோற்றுவிட்டால் அசைவின்றி நின்றுவிடும்

சுற்றி அடிக்கும் காற்றும்
சூழ்ந்து நின்று உறவுகளும் -வருமோ
நீ விழுந்தால் ...
தூக்கிவிட ......???????????????
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
என்றும் எதற்கும் அஞ்சாதே -என் நட்பே
நீ விழமுன் தூக்கி விட
என் நட்பு நிழல் போல் -உன்னை
பின்தொடரும்

Montag, 22. August 2011

பாசங்கள் நிஜமென்றால்


அந்த
விழி நீரில் நனைகிறதே
நிலையில்லா மேகம் போல்
இவள்மனமும்
தடம் புரள்வதினால்

பாசங்கள் நிஜமென்றால்
பொய்யான வெளி
 வேசங்கள் கரைந்தோடும்
 சொந்த  பாசங்கள் சுமையாகி
தூரங்கள்  கூடிவிடும்

மேகம் கருக் கூட்டி  கார் முகிலாய்   பெண்
வானமே உன்னை
சூழ்   கொண்டு
அரவணைக்க
 பொறாண்மை கொண்டு
கடும் காற்று   சுழன்றடித்து
சொந்தமெனும் விதியாய்
  உனை வருத்த
  ஏந்திழையே 
நீ ஏதுசெய்வாய் ?
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே
என்று எதற்க்காக  கடிகின்றாய்
பாவம்  அது
இப்படிக்கு
   உன் மேல்  அன்பு கொண்ட
மோகம்

வார்த்தையின் வலிமை தன்னை -புரியாத பேதையா நீ

உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய்சீண்டி விளையாடினேன்
வேடமோ -கபட
நாடகமோ அறியா  இவனா  பாசம் எனும் கயிறு கொண்டு
பாதாளத்தில்  தள்ளி வைப்பான்

வார்த்தையின்  வலிமை தன்னை -புரியாத பேதையா  நீ
வலியின் ரணங்களை அறியாத பெண்ணா நீ
நாவினால்  சுட்டதால்   வலிக்குது பெண்ணே
என் ஹிருதயம்  உன் வார்த்தையால்  வலிக்குதே
இதுவே உனக்கின்பம்
ஆயின் ...சுடு என்னை
உன் வார்த்தை எனும்  கொடும்  அத்திரத்தால் ...............
உன் அன்பில் ஏனோ தான்
மாறுதல்கள்!!!!!!!!!!!!!!!
  உன் மேல்
நேசம் வைத்தகாரணத்தால் -பாவி மனம் பித்தாக

அலைகிறதே புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...???????????????ß
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...சில வேளைகளில்

என் அன்பு என்பது

என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு

...எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே

நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்

உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?

உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ..........!!!!!

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும்
எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!
...வாழ்வொன்று தர வழியில்லை என்றால்
வரமொன்று தந்துவிடு அன்பே
நீ என்னை விட்டு நீங்கிய கணமே
நான் நீறாக வேண்டும் என்று.........என்று என்னை ஏன் -நீ
கொல்லுகின்றாய்
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும்
உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும்
காதல் போரும்...எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.ன்னோடு நீயிருந்தால்
வானம் கூட என் கைவசம்.....
என்னை விட்டு
நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்......
உன் பெயரை உச்சரித்தே
நிதமும் வாழ்கிறேன் .......
அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்வேன் ..........!!!!!
உறவு என்று எனை அழைக்கத் துடிக்கும் உன் உதடுகளை -ஒத்தி விட
ஓடி வருவேன் கண்ணே .நான் விரைவில்

உன் நினைவு கண்ணீரில் கரைகிறது

பிரிந்திருக்கும் தண்டவாளத்தில் தானே
சொகுசாய் ரயில் வண்டி .......
நீளமான பாதை தன்னில் -நிதம்
கானல் நீர் -பெண்ணே !!!!!!
வானில் விழும் கோடு-மழை
...தண்ணீராய் சொரியும் -என்றும் நினைவில் வரும் உன் நினைவு
கண்ணீரில் கரைகிறது
என் கண்ணீர் கரைந்தோடி
கடல் நீரில் சங்கமிக்க ...
என் வேதனையை ....சகிக்காது
சமுத்திரமாய் எழுந்து ...அலை -உனைத் தேடி
இப்போ உலகில் -பழிவாங்க
சுனாமியாய் அலைகிறது
i

உனக்காக வாழும் இதயம்

உனக்காக வாழும் இதயம்
உறங்காது கண்ணே ..
எனக்கே ...உறவான உன் நினைவுடன்
என் முகம் காண மறுக்கும் உன் விழியில்

...என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்

என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்

என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்

என்னையே மறக்க நினைக்கும் உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து சென்றதை

என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை...............நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன

நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை

என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்
அன்பே உன்னை நேசிக்க -என்
நெஞ்சமெல்லாம் உன்னுள்
தஞ்சமான பின்பு..
என் உள்ளத்தின் தழும்புகள்
மாறாத வடுக்களாய் .......

அன்பே காதலியாய் உன்னை எனது

அன்பே  காதலியாய்  உன்னை  எனது
இருதயத்தில் இருத்தி
கண்ணீர் முத்துக்களால்
உனக்கு மாலை
கோர்த்துக்கொண்டிருக்கின்றேன்

தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய் உன்  மனதில் நானும்
என் மனதில் நீயும்  குடியேறிக்கொண்டோம்
நம் உணர்வுகளைப்
பரிமாறு என்று
காலத்தின் கோலமும் ஞா லத்தின் நிகழ்வுகளும்
நாங்கள் தண்டவாளம் ஆனோம்
பிரிக்கும் கட்டைகளாய்  நம் மக்கள் -ஏதொ
நாம் புணர்ந்து விட்டோம்
என்று  தான் நினைப்பு
புரிந்து கொண்டோம்
 எம்மை நாம்
வட்டக் கருவிழியும்  வண்ண மதி முகமும்
இட்டமுடன்
 என் நினைவில்
கட்டி அணைக்க ஆசை கொண்டேன்
அவ்வளவா??????????????
 நம் வாழ்க்கை
சமாதானப்புறாக்கள் 
கூட்டுக்குள்ளே  தவிக்கின்றன

கடிநாய்களோ
 குதறி விடும் நோக்கில்
 வாலை  ஆட்டுகின்றன
நன்றியுள்ளவயாம்
 சீ போ ............
அவளோ உதிர்ந்த பூக்கள் மலரில்லை என்கிறாள்
கண்ணே  உன் இதயம் தொட்டு சொல் கறந்த பால்  முலைக்கேறாது
அது போல் உன் மேல் கொண்ட காதலும்
வேறு ஒரு பொண்ணை நாடாது
தொலைவில் உள்ளவனே
உன்னை தொலைத்துவிட நினைத்து
தினமும் தொலைந்துபோகிறேன்
நானே உன்னுள்..................
என்றாயே
இப்போது  என்னை  தொலைப்பது  யார்?
உன்னை நீ மிக அருகில் பார்த்த
என் கண்கள் இரண்டும்
உன்னை மறக்க முடியாது தேடி த்தேடித்
தொலைகிறதே   வெகு  தூரத்தை
பதில் சொல்லிவிடு
இது   தானா ?  இது  தானா ?
எனக்காக  நீ  வைத்திருக்கும்  பதில்