Mittwoch, 24. August 2011

முகம் தெரியாத அன்பே

முகம் தெரியாத அன்பே
கனவே காதலாய் ...பொய்யே  உருவமாய்
நினைவே கொடூரமாய் .தினமும்
சுடுகின்றாய்
 உன்னரிய அன்புக்காய்  ஏங்கிய  அவன் குற்றமா
உன்மேல் கொண்ட காதல்
மூலமும் நடுவும் ஈறும் இல்லாதது
காலமும் கணக்கும்  நீ தாண்டி
காதல் ஒப்பந்தத்தின் கையெழுத்தே நீ தாண்டி
அறம் தனை நிறுத்தி வேத அருளினை  -அன்பென உன்மேல் பொலிந்து
நீதி திறம் தெளிந்து  அமரர் மூவர் தேவர் ..
என பலகண்டு   தானே
ஒப்பந்தம் ...
இதில்
நான் என்ன தொல்லை தரும்  வானரமா?  அன்றி வானவனா ?
உன் அன்பை கன்னமிட்ட  வாமனனா ?
அன்பே ! நீ பேசும் மொழி -இப்போ
புரியலையே ..நான் என்ன முற்றும் துறந்த முனிவனாடி ?
பித்தன் பித்தனடி ..காதலால்  உடம்பு உருகும் பாவியடி
யான் எனது என்ற எண்ணம்  நீங்கி
  உன்னோடு  ஒன்றுடன் ஒன்றி
உருவம் அருவமும் சேர்ந்து
அர்த்த நாரி  வடிவமானவன்
அதில் நம் இருவர் சார்பிலும்
...நீயே கையொப்பமும் இட்டுஒன்றானேன்

இப்போ பிரிவெதர்க்கு?
மேவாதவர் இல்லை ..மேவின்ரும் இல்லை வெளியோடு இருள் இல்லை
மேல் கீழ் இல்லை மூவாதமை இல்லை ,மூத்தமையும் இல்லை ,முதலிடையோடு
ஈறும் இல்லை  முன்னோடு பின்னில்லை
கண்ணே  என்ன சொன்னாய்
உனக்குள் ஒருமுறை
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen