அன்பே காதலியாய் உன்னை எனது
இருதயத்தில் இருத்தி
கண்ணீர் முத்துக்களால்
உனக்கு மாலை
கோர்த்துக்கொண்டிருக்கின்றேன்
தொலைதூரம் இருந்தபோதும்
அழையா விருந்தாளியாய் உன் மனதில் நானும்
என் மனதில் நீயும் குடியேறிக்கொண்டோம்
நம் உணர்வுகளைப்
பரிமாறு என்று
காலத்தின் கோலமும் ஞா லத்தின் நிகழ்வுகளும்
நாங்கள் தண்டவாளம் ஆனோம்
பிரிக்கும் கட்டைகளாய் நம் மக்கள் -ஏதொ
நாம் புணர்ந்து விட்டோம்
என்று தான் நினைப்பு
புரிந்து கொண்டோம்
எம்மை நாம்
வட்டக் கருவிழியும் வண்ண மதி முகமும்
இட்டமுடன்
என் நினைவில்
கட்டி அணைக்க ஆசை கொண்டேன்
அவ்வளவா??????????????
நம் வாழ்க்கை
சமாதானப்புறாக்கள்
கூட்டுக்குள்ளே தவிக்கின்றன
கடிநாய்களோ
குதறி விடும் நோக்கில்
வாலை ஆட்டுகின்றன
நன்றியுள்ளவயாம்
சீ போ ............
அவளோ உதிர்ந்த பூக்கள் மலரில்லை என்கிறாள்
கண்ணே உன் இதயம் தொட்டு சொல் கறந்த பால் முலைக்கேறாது
அது போல் உன் மேல் கொண்ட காதலும்
வேறு ஒரு பொண்ணை நாடாது
தொலைவில் உள்ளவனே
உன்னை தொலைத்துவிட நினைத்து
தினமும் தொலைந்துபோகிறேன்
நானே உன்னுள்..................
என்றாயே
இப்போது என்னை தொலைப்பது யார்?
உன்னை நீ மிக அருகில் பார்த்த
என் கண்கள் இரண்டும்
உன்னை மறக்க முடியாது தேடி த்தேடித்
தொலைகிறதே வெகு தூரத்தை
பதில் சொல்லிவிடு
இது தானா ? இது தானா ?
எனக்காக நீ வைத்திருக்கும் பதில்
Keine Kommentare:
Kommentar veröffentlichen