Donnerstag, 25. August 2011

உனக்காக காத்திருக்கும் நேரங்களில் காத்திருப்பதை விட சாவதே மேல்

உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
என்ற கவிதைவரிகளில் பதிலும்
இருக்கிறது ....மேலும் சொல்கின்றேன் கேளுங்கள் நீயும் நிலவும்
ஒன்று தான்
நீ
நினைத்த நேரத்தில்
வருவதும் போவதுமாய்
இருக்கிறாய்.
நான் மட்டும்
பைத்தியக்காரியாய்
பகலிரவாய்ப்
பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்.  என்ற வரிகளும் எதோ  சொல்கிறது  இல்லையா ???????பாசம் வைத்தால் இப்படித்தான்
பகலிரவு பாராமல்
 மனம் வாடும். இல்லையா ?
நாளை வருவேன்
காத்திரு என்றாய்!

நாளை நாளை என்று
நாளைகள் பல கழிந்து
நூலிடை தேய்ந்தும்…
இன்றும்
நீ வரும்
அந்த நாளைக்காய்
காத்திருக்கலாமே

ஏன் கண்ணகி காத்திருக்கலையா ?  
என்னை கேட்டால் நான் இப்படித்தான் பதில்  சொல்வேன்
என்றாவது ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவோம் என்ற நம்பிக்கையில்
என் அறையில் ரகசியமாய் பதுக்கப்படுகின்றன  ....
உனக்காக நான் வாங்கிய பரிசு பொருட்களும்
என் இதய அறையில் உனக்காக நான் சேமித்த
காதலும்..................................தரைவானில்
தவிழ்ந்து வரும் நிலவே
தாமதித்து நிவர வேண்டும்
தரையில் இட்ட மீனாய்
தவிப்புடன் நானிருக்க வேண்டும்என்று காத்திருப்பவன் சொன்னால் ஏற்க்கும்மா சமுதாயம்?????????
என் புத்தகம் முழுவதும்
உனக்கான கவிதைகள்...
என் இதழ்கள் முழுவதும்
உனக்கு அளிப்பதர்க்கான
முத்தங்கள்.
ஒவ்வொரு இரவிலும்,
உன்னைப்பற்றிய ஏக்கங்கள்..
உன்னை சந்திக்கும்
முதல் நொடிக்காய்,
காத்திருக்கும் என் காலங்கள்.
எப்போது வந்துசேர்வாய்...
என் காதலியே..........என்று  எங்கும்  ஆண் மனம் காதலில் அங்கு
துடிக்கிறது

"நிச்சயம்
காதலிக்கும் மனதுக்கு கூட
கால்வலிக்கும் வரை - நான்
இங்கே காத்திருப்பேன்"... என்கின்றான்
அவன்

வீண் கோபம் என்னோடு ஏன் அன்பே
உனக்காக நான் வரையும் மடலிது


என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து
கலகம் செய்த நாட்கள் எத்தனை
என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி
இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை
என் மொனத் தவம் கலைக்க
கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை
இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை
அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே
என்றோ தந்து விட்டேனே
இதயராணி என்னும் உரிமையை

என் மானசீகக் காதலியாகி
மனத்தின் அந்தரங்க அறைகளில்
எனக்காக நீ அரங்கேற்றிய பரதங்கள் எத்தனை
உந்தன் கொலுசுகள் மீட்டும்
ஜல் ஜல் தாளங்களை
என் ஆழ்ந்த மன அந்தரங்கத்தில்
கேட்கும் நாதங்களாக்கியவளே

புரியாதவள் போல நடிக்கின்றாய்
திமிர் பிடித்தவன் நான் என்கின்றாய்
என் உள்ளத்து அன்பை வெறும் நடிபென்கின்றாய்
போதும் நிறுத்திக் கொள் உன் கோபங்களை
தொடுவான எல்லையில் காத்திருக்கின்றேன்
நீ எனக்குள் தொலைத்த
உன் கொலுசுகளின் துணையோடு


நம் காதலின் புதுப்பாடம் – காத்திருப்பு
அதிகாலை வரப்போகும் ஆதவனுக்காக
நீண்ட இரவுகளில் கண்ணயராது காத்திருந்து
மொட்டு விரியுமாம் கமலம்
நாம் மீண்டும் சந்திக்கும் நாட்களுக்காக
காத்திரு உன் கோபங்களை விடுத்து அன்று
காதலெனும் கமலம் நமக்குள் மொட்டவிழட்டும்

என்று காதலிப்பவன் சொல்கின்றான்
காதலி ஒரு முறையாவது
அன்பே நான் உன்னை காதலிக்கின்றேன்
என்று சொல்லிவிடுவாளா ?
நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே  உங்களின் பதில் களை...
என்ன நீங்கள் காதல் பற்றி தெரியாதவர்களா என்ன ???????

Keine Kommentare:

Kommentar veröffentlichen