Samstag, 27. August 2011

ஒன்று மட்டும் சொல்கின்றேன் ஆண்டு பல கடந்தும் பல் கூட கழன்ற பின்னும் உன் ஏக்கப் பெரு மூச்சில் உருகி கரைவேனடி காற்றாய் ஒருநாள்

அழையா விருந்தாளியாய்
நான்
நுழையா இதயத்தில் தொலைந்தவன்   அல்லேன் !!!!!!!!!!!!!!!!!
பேசும் கிளியென  நீ இருந்தாய் ,,கொவ்வை இதழ் மலர்ந்து முறுவலித்தாய்!!!!!!!!!
காயாய் நீ இருப்பாய் 
கனியாய் இனித்தாய்
சேயாய் நான் பிறந்தேன் உன்னை பார்த்து
பாசம்   ஏக்கம் ஆனதால்
காதல் பூவும் மலர
 ஆசை பட்டேன் இதயத்தில்  அழகியாய்
நேசமுடன் உன்னை அழைத்தேன் உள்ளக் கமலத் தாமரையில்  மகா
லட்சுமியாகவே  உள் நுழைந்தாய்
வேலை நிமித்தம் வெளியேறி
பாளும் குளிர் நாட்டில்  உக்கி -
பரிதவித்து
வீழும் கண்ணீரும்
 சொட்டும் பனித்துளியும்
 முத்துக்களாய்
  சிறுக சிறுக  அணி சேர்த்து
முத்து மாலை  பல நகையாய்
  ஈட்டிக்கொண்டு
உனைதேடி
 நான் வந்தேன்
என் வரவை அறிந்தபோது
புள்ளிமானாய் துள்ளியோடி நீ வந்து   என்னை நோக்கி
இவர் தான்   உன் மாமா என உன் பிள்ளைகட்கு
உணர்த்தி நின்றாய் -நானும்
வியப்பால் விழி உயர்த்த
இவள்தன மனைவியென்று
உணர்த்தி கொண்டான்  ஒரு
புது மனிதன்
வாடிய மலராய்  வருந்தும்  ஏந்திலையாய்    கூப்பிய  கரங்களுடன்
நீ குமுறி அழுத காட்சி ஈட்டி போல் என்னை கொன்ற போது
தெறித்த விளக்கொளியில் சுவரில் நிழற்படமாய் -உன்
நீட்டிய கழுத்தில் திரு மாங்கல்யம் .........
படம் எடுக்கும் பாம்பாய்  எனை எச்சரிக்க
நான் கொணர்ந்தத முத்து மணி மாலை
மீண்டும் என் ஏக்க பேரு மூச்சில்
மீண்டும் வியர்வையாய் சொட்டும் பனித்துளியாய்
உருகி சொட்ட
நீண்ட பனைமரமாய் நான்
தள்ளாடி  ...........
நடக்கின்றேன்
பரிமாறிக்கொள்வதற்காய் நமக்குள்
...உணர்வுகள் இருந்தும்
பாளும் சமுதாயம்
பார்வையால்  எமை கொல்லும் என அஞ்சி
தொலை தூரம்  என்னை  தொலைத்துக்கொண்டேன்
 உன்
கவர்ந்திழுக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடாமலே தரும் முத்தம்
இன்னும் பல நினைவுகள்
அசைபோட்டுக் கொண்டே
அலையும் மனதுடன் இவன்  வாழ்வு

மீண்டும் தொலையும்
 தொலைவில் நான்

வாழ்க  மண மக்கள்
வாழிய பல்லாண்டு


ஒன்று மட்டும்  சொல்கின்றேன் ஆண்டு பல கடந்தும்
பல்  கூட   கழன்ற பின்னும்  உன் ஏக்கப் பெரு மூச்சில்

உருகி  கரைவேனடி
காற்றாய்  ஒருநாள்

Keine Kommentare:

Kommentar veröffentlichen