Donnerstag, 25. August 2011

உலகின் இயற்க்கை

சித்தாந்தம்  தெரியாதவனின்
தோல்வி சிந்திக்கத் தக்கது
ஆனால்

சிந்திக்கத்தெரிந்த அனைவரும்
  சித்தாந்திகள்  அல்ல
முத்தி  நெறி  அறியாத  மூர்க்கராய்
வித்தைகளை அறியாது    வெட்கி -தாம் அழிந்து
சாகும் பிணங்களாய்  வாழ்ந்து
தண்டி பிழைக்கும்  -மனிதங்கள்
இசெகத்தில்   பாரமாய் வாழ்நது
வைக்கோல் போரின்  நாயதாய்
முன்னேறும் வழிகளில்
   நமக்குள்  முட்டுக்கட்டை
ஆதலால்

வாழ்வில் இடும்பையும்  இன்பமும்
உறவில்
 பிரிவும் புணர்வும்
  இயற்கையின்  பகலும் இரவும்  என உணர்வாய்
அங்கனம்  தோல்வியும்  வெற்றியும் அமையக் காணல்
உலகின் இயற்க்கை என  உணர்வாய்
நண்பனே

Keine Kommentare:

Kommentar veröffentlichen