Mittwoch, 24. August 2011

வீசிடும் தென்றலே ..இவள் இசையோ ?


உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு

உன்  மெய்யா (உடம்பு)???  அன்றேல்  உள்  மெய்யா ?
உன் வருங்காலம் என்றும் வசந்தகாலம் தான் -என்கின்றாயே
நீ இல்லாது   ஒரு வசந்த காலம் ????
எனக்கு ....................?????

ஹ ஹ ஹ   ........ஆ ..ஆ ஆ ஆ
என்ன கொட்டாவி விடிறேன் என்று பார்கிறாயா????????
இல்லையடி ..என் கொட்டில் இருந்து  ஆவி ( உயிர் ) போகுதடி

நான்  காதல் தானே தனா!!!!!!!!!!!!!விதைத்தேன்
கார்  இருள்  கவ்வலாமோ  என் வாழ்வில் ..

நேசத்தின் நேசமாய் வந்தவளே -நீ பூமகளோ
இல்லை புவி மகளோ .-எனக்காய் பூமியில் வந்துதித்த தாரகையோ ?

யார் இவள்   யார் இவள்
 தேவதையோ ?

வீசிடும் தென்றலே ..இவள் இசையோ ?-எந்தன்
இந்திரலோகத்து  ஊர்வசியோ ?
பாடிடும் குயில்கள்  இவள் குரலை -கேட்டு
பரவசமாகும்  நிதம் நிதமே
-ஆடிடும் மயில் போல் என் மனமோ
களிமிகக் கொண்டதே அவள் நினைவால் ............
சத்தமின்றி முத்தத்தை   நித்தம்
இடுகின்றேன்  உன்படத்தில்
எச்சில் பட்டு    அப்படத்தில் ஓட்டை-வந்தது
விதி யாமோ
அருகிடட்டும் துன்பங்கள்!உருகிடட்டும் கல்மனங்கள்!

பெருகிடட்டும் நல்மனங்கள் !பருகிடட்டும் இன்பங்கள்
என்று கவி தன்னில் புகழ்ந்தால்
 வருமோடி இன்பம் ........
சொல்லு     !!!!!!!!       வருமோடி ?உனக்கான வலிகளுக்கு நீயே உரமூட்டாதே
உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு
உன் வருங்காலம் என்றும் என்றும்
 வசந்தகாலம் தானடி !!

அன்பு என்றும் நெஞ்சில்  கொண்டால் -கல்
பாறையிலும்  பூ வளரும் இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா -   உன்னை

என் குல விளக்காக நான்  மாற்றி வழி சமைக்க வா
வருவாயா ?????????

Keine Kommentare:

Kommentar veröffentlichen