Freitag, 26. August 2011

பிரியமா னவளே  பிரிவு
என்பதை  அன்பவிக்கிறாயா?
அப்போது தான்
 காதல் என்ன என்பது
  உனக்கு  புரியும்

ஒளியின் பிரிவில் இருளின்  ஜனனம்
இருளின்  பிரிவில்  ஒளியின்  ஜனனம்
சூ லும்  விந்தும்  காதலித்து

  ஒன்றி  பிரிவது
  கருவின்  ஜனனம் !!!!!!!!
என்னால்  எப்படி  ஊனமானாய் ?

என் உடல் பொருள் ஆவி
  அத்தனையும்  உனக்கென்று

  என் ஊனை  உருக்கி
 உனக்கென  ஈந்தவன் யான்

உணர்வுகளை அடக்கி  உனக்குள்  சிலையாக்கி
உனக்கு  உறவு  என்று  -ஒரு ஜனனத்தை தந்தவன் யான் -

அது உன் கருவறை பிரிந்து
அழகென்னும்  சிலையாய்-ஜனனித்து
  உன் கைகளில் தவழ்கிறதே  
அது என்ன ???????????????என் உணர்வின் பிரிவு  அல்லவா ?

காதல் கனவு  உணர்வு  என்று
 இதயம் கனத்து போனதால்

நீ தான் என் உலகமென்று
 ஏம்மாந்து

- கண்ணின் பிரிவாய்- உனக்கு
 என் கண்ணீர் காணிக்கை

கனிவான உள்ளம்   கனத்து போனதா?

நீ
இன்னும்  நினைவுகளுடன்  போராடுகிறாய்

பிரிவு கொடு  உன் சிந்தைக்கு

நடப்பவை நல்லவாய் அமையட்டும்

காண்பதும்  கேட்பதும்  பிரிவு அல்ல
 பிரிவால் கிடைப்பது
புதியதோர்  ஜனனம்
அன்பே  சொல் உன் ஆறறிவின் பிரிவே  பகுத்தறிவு

எழுவர்ணம் கலந்த காதல்
  ஆகாயமெனும் காதலியை
அன்போடு  அணைப்பது
தோற்ரமடி  தோற்ரமடி
மனதின்  பிரேமை அடி
ஒளியின் பிரிவால் வர்ண நிறங்கள்
 பிரிவின் ஜனனம்

பிரிவு என்னும் பதமே
-உன்மனதின்  புதிய  தோர்
  ஜனனமடி

Keine Kommentare:

Kommentar veröffentlichen