Donnerstag, 25. August 2011

அடிக்கும் காற்றில் அலையும் சருகாய் அங்கேயும் இங்கேயும் அலைவதும் காதலோ?????????

பூ வாயும்  முள்ளாயும் வாழ்வது
சோதரமே
பூவும் நறுமணமும் நகமும் சதையும் -வாழ்வது   எல்லாம்
தாம் பதிய  வாழ்வில்   இனிது ..  பெண்ணே


அடிக்கும் காற்றில்   அலையும் சருகாய்
அங்கேயும்  இங்கேயும் அலைவதும்   காதலோ?????????
  இடிக்கும் துயரிலும்
  இன்புறும் வேளையிலும் ......
துடிக்குமே  மனது .!!!!!!!!!!!!!!!.அது  தான்  காதல்

படிக்கும்  தேவாரம்    ---நீ
இடிப்பதோ  சிவன்  கோவில் ?

நடிக்கும்  நாடகம் வாழ்க்கை யாமோ ?
புடிக்கும்  மனிதர்  எல்லாம்   காதலரோ ?

படுக்கை அறையில்  கசங்கும்  பூவும்
ஓதும் மந்திரத்தை  உள்வாங்கி
  இறை அவனின்
பாதம் தழுவும் பூக்களும்
மாலையின்  நாரில்   ஒவ்வொன்ற்றாய்
 வரிந்து கட்டும் சிறு பூவும்
தூவும்  பூக்களில்   கீழ்  விழுந்து
  காலில்  மிதி படும்
ஒரு சிலவும் ...
ஆகுதி நெருப்பில் ஈசனுக்காய்
  அள்ளி வீசிடும் மலர்ப்பூவும்
கொண்ட விதியின்    வசமே 
என்பதனை
உணர்வாய் உந்தன்
 மனக் கண்ணில் .
ஆதலினால்    பெண்ணே
 மலர்களையே
பெண்ணுக்கு  மாந்தர்
  உவமை  கண்டார்
முள்ளாய்  இருந்து    குத்தாமல்
என் உடலின்   குருதியில்
கலந்திடுவாய்
என் உணர்வின் ஊற்றாய்
மலர்ந்து  நிற்பாய்
முள்ளாய்  நானும் 
காவல் நின்று
முழு மதியாய் 
உன்னை  ஒளிர வைப்பேன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen