Dienstag, 23. August 2011

நீ விழுந்தால் ... தூக்கிவிட ......???????????????

அம்மா வின் வயிற்றிலும்
அந்தியின் வேளையில் எந்தையின் மார்பிலும்
செவ்வானக் கருக்கலில் காதலர் -அர
வணைப்பிலும்......உறவுகள் மெருகேறும்
ஆனால் என் நட்பே .......
...நீயும் நானும் எம் நட்பை சுமையாகக் கொண்டோமா ?
வெயில் எனும் பணக்காரன் உன்னை விட்டு நீங்கிவிடில்-உறவு என்று
நிடல் கூட உன்னை தொடருமோ .....?
என் நினைவுகள் உன்னை விட்டு ....
என்றும் பிரியாது-தேடி
மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்

மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீயே நட்பாக வேண்டும்
உறவாகவா ..............................?
அல்ல அல்ல
என் உயிர் நட்பாக

புரியாத நட்புகள் இருந்தும் பயனுண்டோ ?-எம்
புரிந்த நட்புக்கு தூரம் பெரிதல்ல -உன்
வெற்றியின் விளிம்பில் கைதட்டும் பல விரல்கள் -நீ
தோற்றுவிட்டால் அசைவின்றி நின்றுவிடும்

சுற்றி அடிக்கும் காற்றும்
சூழ்ந்து நின்று உறவுகளும் -வருமோ
நீ விழுந்தால் ...
தூக்கிவிட ......???????????????
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
என்றும் எதற்கும் அஞ்சாதே -என் நட்பே
நீ விழமுன் தூக்கி விட
என் நட்பு நிழல் போல் -உன்னை
பின்தொடரும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen