Freitag, 26. August 2011

இணைந்த உறவை கைப்பிடித்து இணைந்து வாழ்ந்தால் காதலே


கரை நாடும் அலைகள்
கரையை தழுவுவது காதலோ ?
இறை தேடும் பறவை போல்  பெண்ணினத்தை -ஆணின்

இரைக்கு உறவாக ச சொன்னால்  திருமணமோ?
திருமணம் கவிதை அல்ல  .....
நினைத்த வரிகளை புகுத்தி -புதுக்க
விதை விதைத்தால்  அது  வாழ்க்கை அல்ல

 இரவுக்கு அவள் நிலவாக...
அந்த நிலவுக்கு அவன் ஒளியாக..........பரந்த விண்ணில்
சுதந்திரமாய் பறக்கும் துடிக்கும்
 காதலே

மேகம் முழங்கும் இடி மின்னல்
நீலவானம்  ..பந்தல் என்று
ஆசை மொழிகள் ............. பேசும்  கிளி கள்  போல்
அனைத்து  மகிழும்
  காதலே

நாலு கண்கள்  பேசி விட்டால்
காதல்  வரும்  என்று
  எவர்  சொன்னார்?

காமம் ததும்பும் காதலும்
ஈர்ப்பால் உணரும் காதலும்

வேறு வேறு  பாதைகள்
போகின்ற  நல்ல  பாம்பு  போன்றன

எந்த  பாம்பு  தீண்டிடினும்
ஏறும்  விடமே ..
உணர்ந்து  கொள்வாய்

உள்ளம் இரண்டும் இணைந்து
உணர்வோடு உயிர்கலந்து
கூடி குலவி தாம் மகிழ்ந்து
குவலய வளங்கள் பெருகிடவே

இணைந்து  கொள்ளும்  திருமணங்கள்
சொர்க்கம் என்னும்  மனங்களில்
குதூகலங்கள்  சேர்த்தனவா?


குமுறி அளவும் வைத்தனவா?

ஊடல்  கூடி உருக்குலைத்து
கூடி வாழ்கின்ற  பெரியவர்கள்

சொன்னவை எல்லாம்   வெறும் கதையோ ?
நடப்பவை  எல்லாம்  விதியென்று

இணைந்த  உறவை கைப்பிடித்து
இணைந்து  வாழ்ந்தால்  காதலே

பருவக் கிளர்ச்சியின்  உந்துதலில்
பந்தாடும்  உறவை பந்து  என்று

 ஏமாறாமல்  வாழ்ந்து விடு
 அதுவே  நல அறம்  என்ற

திரு மனம்  என்றுணர்வாய்
திருமணம் என்று நீயுணர்வாய்

Keine Kommentare:

Kommentar veröffentlichen